ருத்ராட்சம் மகிமை தெரியுமா?

பூஜை செய்யும் முறை, பயன்கள், எப்படி அணிய வேண்டும்?

[ ஆன்மீக குறிப்புகள் ]

Do you know the glory of Rudraksha? - Method of worship, benefits, how to wear? in Tamil

ருத்ராட்சம் மகிமை தெரியுமா? | Do you know the glory of Rudraksha?

ருத்ராட்சம் என்பது இந்த பூலோகத்தில் சிவபெருமானின் அவதாரமாக, சிருஷ்டிக்கக்கூடிய ஒரு மூலிகை மரமாகும். சித்தர்கள் சிவனின் அனுகிரகத்தை பெற அவர்கள் தியானம் செய்யும்போது கண்டிப்பாக ருத்ராட்சம் அணிந்து தியானம் செய்வார்கள்.

ருத்ராட்சம் மகிமை தெரியுமா?


ருத்ராட்சம் என்பது இந்த பூலோகத்தில் சிவபெருமானின் அவதாரமாக, சிருஷ்டிக்கக்கூடிய ஒரு மூலிகை மரமாகும். சித்தர்கள் சிவனின் அனுகிரகத்தை பெற அவர்கள் தியானம் செய்யும்போது கண்டிப்பாக ருத்ராட்சம் அணிந்து தியானம் செய்வார்கள்.

 

ருத்ராட்ச வழிபாடு :

ருத்ராட்சத்தை அபிஷேகம் செய்வதற்கு முன் பன்னீரில் ஒருநாள் முழுவதும் ஊற வைத்து பூஜை செய்து அணிந்து கொள்ள ருத்ராட்சத்திலிருந்து நல்ல சக்திகள் கிடைக்கும்.

 

பூஜை செய்யும் முறை :

ஒரு தாம்பூல தட்டில் வெற்றிலையின் மேல் ருத்ராட்சத்தை வைத்து பால், சந்தனம், விபூதி, பன்னீர், வில்வம் கொண்டு ருத்ராட்சத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

 

5 முக ருத்ராட்சம் மற்றும் சிவபெருமான் :

பகவான் சிவபெருமான் திருமுகம் ஐந்து, நமசிவாய ஐந்தெழுத்து, பஞ்சபூதங்கள், சிவபெருமான் புரியும் கரும காரியங்களான (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) ஐந்து. நமது கை மற்றும் கால்களில் உள்ள விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. இப்படி ஐந்திற்கும், இவ்வுலகிற்கும் அதிகமான சம்பந்தம் உண்டு. ஆகவே, 5 முக ருத்ராட்சத்தை அனைவரும் அணியலாம்.

 

5 முக ருத்ராட்சம் எப்படி அணிய வேண்டும்?

ஒரு குருவிடம் சென்று ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம் அல்லது நாமே 'சிவயநம" என்ற மந்திரத்தை உச்சரித்து ருத்ராட்சத்தை அணிந்து கொள்ளலாம்.

 

5 முக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் பயன்கள் :

உடலுக்கும், மனதிற்கும் அதிகமாக சக்தி தரும் வல்லமை கொண்டது ருத்ராட்சம்.

 

எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் புத்திக்கூர்மையையும் பொறுமை, பக்குவம் மற்றும் அமைதியான மனநிலையை பெற்றுத்தரும்.

 

குழந்தைகளுக்கு கல்வியில் முன்னேற்றம் அதிகரிக்கும். திறமை பளிச்சிடும்.


உண்மையான ருத்ராட்சம் எப்படி கண்டுபிடிப்பது?

கலிகாலமான புனித ருத்ராட்சத்தைக் கூட தற்போது மரக் கட்டை, பிளாஸ்டிகில் போலியான ருத்ராட்சங்கள் விற்கப்படுகின்றன. உண்மையான ருத்ராட்சம் உள்ளே ஓடு போடு போன்று இருக்கும். அதை உடைத்துப் பார்த்தால் தான் தெரியும். உண்மையான ருத்ராட்சம் கண்டறிய அதை தண்ணீரில் போட்டு மூழ்கினால் உண்மையானது இல்லையென்றால் போலியானது என சிலர் கூறுகின்றனர். அப்படி இல்லை சற்று கடினமான மரக்கட்டை மூழ்கும். பொதுவாக உண்மையான ருத்ராட்சம் கையில் எடுத்தாலே அதன் அதிர்வு நமக்கு தெரிந்துவிடும்.

 

சிவயநம

நீங்கள் விரும்பினால் நமது ஆன்மீக குழுவில்

இணையலாம்.

👇👇👇👇👇

Tamilar Nalam you tube channel

 

Like & Share to Our தமிழ் சொந்தங்கள்....

 

https://youtu.be/SwQkPvjrqO4


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : ருத்ராட்சம் மகிமை தெரியுமா? - பூஜை செய்யும் முறை, பயன்கள், எப்படி அணிய வேண்டும்? [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Do you know the glory of Rudraksha? - Method of worship, benefits, how to wear? in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்