நிலம்,நீர்,காற்று,ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களால்தான் இந்த உலகத்தின் இயக்கமே நிகழ்கிறது என்று நம்முடைய புராணங்கள் தெரிவிக்கின்றன.
வருண முத்திரை சக்தி தெரியுமா?
நிலம்,நீர்,காற்று,ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களால்தான் இந்த உலகத்தின் இயக்கமே நிகழ்கிறது
என்று நம்முடைய புராணங்கள் தெரிவிக்கின்றன.
பஞ்ச பூதங்கள் எப்படி உண்டாயின என்ற விவரத்தைத் தைத்திரிய உபநிடதம்
விரிவாகக் கூறுகிறது. பிரம்மம், ஆத்மன் என்றெல்லாம்
கூறப்படுகின்ற அந்த ஆதி பராசக்தியிடமிருந்து ஆகாயம் உண்டா யிற்று.
ஆகாயத்திலிருந்து வாயுவும், வாயுவில் இருந்து
அக்னியும், அக்னியிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும்
உண்டாயிற்று. நிலத்தி லிருந்து மூலிகையும், மூலிகையில் இருந்து
உணவும் தோன்றின. உணவில் இருந்து மனிதன் தோன்றினான்.
வருணன் என்பது மழைக் கடவுளைக் குறிக்கும். அதாவது, தண்ணீர். 'நீரின்றி அமையாது
உலகு என்றார் வள்ளுவர். நம் உடலும் நீர் இன்றி இயங்க முடியாது. நீர் இல்லாமல் வெகு
நாள்கள் உயிர் வாழ முடியாது. நீரானது ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, ரத்த ஓட்டம் சீராக
இருக்கச் செய்கிறது. நாம் வாழும் இந்தப் பூமியில், ஒரு பங்கு நிலமும்
மூன்று பங்கு நீரும் உள்ளன.
மழை பெய்யாவிட்டால் பயிர் விளையாது. இதனால் வறட்சி, பஞ்சம், உணவுப் பற்றாக்குறை
ஏற்படும். இந்த மழையின் கடவுள்தான் வருணன்.
வருண முத்திரை செய்யும்போது, சுண்டு விரல்
நுனியைக் கட்டை விரல் நுனியுடன் சேர்த்து. ஒன்றை ஒன்று அழுத்துமாறு வைக்க
வேண்டும். மற்ற மூன்று விரல்களும் வளையாமல் நேராக இருக்க வேண்டும். மூன்று
விரல்களுக்கும் இடையே இடைவெளி இருக்கக் கூடாது.
இந்த முத்திரையைச் செய்யத் தொடங்குவதற்கு முன், நேராக நிமிர்ந்து
முதுகு வளையாமல் அமர வேண்டும். ஆசனம் தேவையில்லை. விருப்பப்பட்டவர்கள்
பத்மாசனத்தில் அமரலாம். மனம் ஒருமுகப்பட வேண்டும். கவனத்தை சிதறவிடக் கூடாது. எந்த
நேரத்திலும் இந்த முத்திரையைச் செய்யலாம்.
இந்த முத்திரையைத் தொடக்கத்தில் பதினைந்து நிமிடங்கள் செய்ய
வேண்டும்.படிப்படியாக நேரத்தை அதிகரித்துப் பின்னர் 45 நிமிடங் கள் வரை செய்யலாம்.
தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது செய்ய வேண்டும்.
பெருவிரல் என்று சொல்லக்கூடிய கட்டை விரல், நெருப்பு என்ற
பஞ்சபூதத் தன்மை கொண்டது. சுண்டு விரல், நீர் என்ற பஞ்சபூதத்
தன்மை கொண்டது. இந்த இரு விரல்களால் வருண முத்திரை செய்தால், உடல் சமநிலைக்கு
வரும். இதனால், பிராண சக்தியும் சமநிலைப்படும். மழை மற்றும் குளிர்க் காலங்களில்
குறைந்த நேரம் இதை செய்ய வேண்டும்.
1. சிறுநீரகக் கோளாறுகள் அகலும்.
2. நீரிழிவு நோய் குணமாகும்.
3. உடல் வெப்பம் சீரான நிலையில் இருக்கும்.
4. தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும்
இருக்கும்.
5. ரத்தம் சுத்தமாகி, ரத்த ஓட்டம்
சீராகும்.
6. தாகம் குறையும்.
7. சதைப் பிடிப்பு நீங்கும்.
8. குடல் அழற்சி நோய் குணமாகும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
யோக முத்திரைகள் : வருண முத்திரை சக்தி தெரியுமா? - செய்முறை, நேர அளவு, பலன்கள் [ ] | Yoga Mudras : Do you know the power of Varuna Mudra? - Recipe, time scale, benefits in Tamil [ ]