பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண்விழித்தால் நன்மை நடக்கும் என்பது எல்லோருடைய கூற்று. அது உண்மையும் கூட!
பிரம்ம முகூர்த்த
ரகசியம் தெரியுமா?
பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண்விழித்தால் நன்மை
நடக்கும் என்பது எல்லோருடைய கூற்று.
அது உண்மையும் கூட!
இந்த உலகத்தில் கோடீஸ்வர யோகத்தை, பெற்றிருப்பவர்கள் அனைவருமே பிரம்ம முகூர்த்த
நேரத்தில் கண்விழித்து தங்களுடைய பணிகளை தொடங்குகிறார்கள் என்பது பலருடைய கருத்தாக
இருந்து வருகிறது.
ஆனால், பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்திரிக்கும் எல்லோருக்குமே
இந்த அதிர்ஷ்டம் கிடைக்கிறதா? என்று கேட்டால்
நிச்சயமாக இல்லை.
அது ஏன், என்பதை பற்றிய ஒரு விரிவான விளக்கத்தையும், பிரம்ம முகூர்த்த நேரத்தில், குறிப்பாக எந்த கிழமையில், எந்த கடவுளை வழிபட்டால் கோடீஸ்வர யோகம் கிடைக்கும்
என்பதைப் பற்றியும்,
பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண்விழிக்க முடியாதவர்களை
எப்படி கண் விழிக்க வைப்பது என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோமா?
முதலில் பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்பவர்கள்
அனைவராலும் கோடீஸ்வரராக முடியவில்லையே!
இந்த கேள்விக்கு பதிலை பார்த்துவிடுவோம்.
தினந்தோறும் டீக்கடையில் வேலை செய்பவர் அதிகாலை
3 மணிக்கே கண்விழித்து வேலைக்கு செல்கிறார்.
அவர் தினந்தோறும் பிரம்ம முகூர்த்தத்தில், தன் வேலையை தொடங்குகிறார்.
அவர் கேட்கிறார்? என்னால் மட்டும் ஏன் கோடீஸ்வரராக முடியவில்லை? என்று.
சரியான கேள்வி தானே!
தன்னுடைய பணியை பிரம்ம முகூர்த்த நேரத்தில் தொடங்கும்
இவருடைய மனநிலை எப்படி இருக்கிறது? என்பதை பாருங்கள்.
'என்னடா இது வாழ்க்கை? தினந்தோறும் இவ்வளவு காலையிலேயே எழுந்து வேலைக்கு
செல்ல வேண்டுமா? என்ற சலிப்போடு
தான் செல்வார்.
அதிகாலை செய்யக்கூடிய வேலை நமக்கு கிடைத்திருக்கிறது.
ஆக, காலையில் தீபம் ஏற்றி வைத்து இறைவனை முழுமையாக வழிபட்டு விட்டு, சந்தோஷமாக செல்கிறாரா?
அப்படி சந்தோஷமாக சென்றால் கட்டாயம் அவரது வாழ்க்கையில்
மாற்றம் ஏற்படும்.
உங்களுடைய எண்ணம் தான் வாழ்க்கை.
நல்லெண்ணத்தோடு மனதை சந்தோஷமாக வைத்துக் கொண்டு, எவரொருவர் நேர்மறை எண்ணத்தோடு, பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து தன் பணிகளைத்
தொடங்குகிறாரோ அவர்களுக்கு மட்டுமே பலன்.
சலிப்போடு எழுந்து செய்யும் வேலைக்கு பலன் கிடைக்கவே
கிடைக்காது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுடைய நல்ல எண்ணங்கள் தான் பிரபஞ்சத்திலுள்ள
கடவுளின் சக்தியையும், சித்தர்களின்
சக்தியையும் பெற்று தரும்.
அந்த எண்ணம் தான் நல்ல உறவினர்களையும் நல்ல நண்பர்களையும்
உங்களுக்குப் பெற்றுத் தரும்.
பிரம்ம முகூர்த்த நேரத்தில்
தயவுசெய்து முன்னோர்கள் எல்லாம் சொல்வார்களே, 'மூக்காலஅழுது கொண்டு' எழுந்திரித்து நீங்கள் ஒரு வேலையை செய்தால் அதன் மூலம் உங்களுக்கு பலன் கிடைக்கவே
கிடைக்காது.
மனநிறைவோடு, மனத் திருப்தியோடு செய்து பாருங்கள் நீங்களும்
கோடீஸ்வரர் தான்.
அடுத்ததாக பிரம்ம முகூர்த்த வேளையில் மனநிறைவோடு
கண்விழித்து வியாழக்கிழமை அன்று, பெருமாளுக்கு
ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து, மனதார பெருமாளை
வழிபட்டு வந்தால், உங்களுக்கு எதிர்பாராத
நேரத்தில், எதிர்பாராத அதிர்ஷ்டம்
கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இது ஒரு சூட்சும ரகசியம்.
தொடர்ந்து 48 வாரங்கள் இதை முயற்சி செய்து பாருங்கள்.
நல்ல பலன் உண்டு.
உங்கள் வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு
செல்ல என்னென்ன வழிமுறைகள் எல்லாம் இருக்கிறதோ, அதோடு சேர்த்து, இந்த ஆன்மிக வழிபாட்டையும் விடாமல் முயற்சி செய்து
கொண்டு வந்தால் நிச்சயமாக பலன் உண்டு.
அடுத்ததாக சில பேரால் பிரம்ம முகூர்த்த நேரத்தில்
கண்விழிக்க முடியவே முடியாது.
என்னதான் மனதில் 'காலையில் எழுந்திரிக்க வேண்டும்! எழுந்திரிக்க
வேண்டும்!' என்று திரும்பத்
திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தாலும், காலையில் தூங்கி விடுவார்கள்.
இதை நம் முன்னோர்கள் மூதேவி உள்ள வீட்டில்தான்
இப்படி நடக்கும்.
மூதேவி படிந்த முகத்தில்தான் தூக்கம் வந்து கொண்டே
இருக்கும் என்று சொல்லுவார்கள்.
இந்த மூதேவியை விரட்ட ஒரு சிறந்த வழி உள்ளது.
இதை எத்தனை பேர் செய்வார்கள் என்று தெரியவில்லை.
ஆனால் இதை நம் முன்னோர்கள் செய்து வந்தார்கள்.
எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு கூட இருக்கலாம்.
அதுதான் கோமியம்.
இரவு தூங்கும் முன்பு கோமியத்தை சுள்ளென்று முகத்தில்
அடித்து கழுவவேண்டும்.
காலை கண் விழித்த உடன், அந்த கோமியத்தை முகத்தில் சுழற்றி அடித்து கழுவவேண்டும்.
சரி. இது உங்களால் முடியவில்லை என்றால்,
நீங்கள் முகம் கழுவும் தண்ணீரில் ஒரு சொட்டு கோமியத்தை
விட்டு உங்கள் முகத்தை கழுவிக் கொண்டு, உங்கள் வீடு முழுவதும் அந்த கோமியம் கலந்த தண்ணீரை தெளித்து விடுங்கள்.
வீட்டிலிருந்த மூதேவி விலகி விட்டால், நிச்சயம் பிரம்ம முகூர்த்த வேளையில் உங்களால்
உறங்க முடியாது.
சந்தோஷமாக கண் விழிக்கும் சூழ்நிலை உண்டாகும்
என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொளகிறேன்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
சுவாரஸ்யம்: தகவல்கள் : பிரம்ம முகூர்த்த ரகசியம் தெரியுமா? - பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்பவர்கள் எல்லோருக்கும் கோடீஸ்வரராகும் யோகம் வருவதில்லையே! அது ஏன்? [ ] | Interesting: information : Do you know the secret of Brahma Mukurtha? - Not everyone who wakes up in Brahma Mukurtha becomes a millionaire! Why is that? in Tamil [ ]