உத்தரபோதி முத்திரை என்றால் உயர்ந்த தெளிவை உண்டாக்கும் முத்திரை என்று பெயர். இந்த முத்திரை முழு நிறைவைத் தருவதற்கான ஒரு அடையாள முத்திரையாகவும், சிறந்த முத்திரையாகவும் விளங்குகிறது.
உயர்ந்த தெளிவை உண்டாக்கும் உத்தரபோதி முத்திரை தெரியுமா?
உத்தரபோதி முத்திரை
என்றால் உயர்ந்த தெளிவை உண்டாக்கும் முத்திரை என்று பெயர். இந்த முத்திரை முழு
நிறைவைத் தருவதற்கான ஒரு அடையாள முத்திரையாகவும், சிறந்த முத்திரையாகவும்
விளங்குகிறது.
இந்த முத்திரையில் எல்லா
விரல்களும் ஒன்று மற்றொன்றுடன் இணைந்திருக்கின்றன. புத்த மத சிற்பங்களில் இந்த
முத்திரை அதிகம் காணப்படுகிறது. சூரிய ஒளியாகத் தோன்றி பயத்தை அகற்றுகிறது.
உத்தர போதி முத்திரை, உடலுறுப்புகளுக்குப்
புத்துணர்ச்சியைக் கொடுத்து, சக்தியை அளிக்கிறது. நுரையீரல் மற்றும் பெருங்குட லோடு தொடர்புடைய
பிற பாகங்களைப் பலப்படுத் கிறது. சுவாசத்தை இது சீர்படுத்துவதால், இதயம் மற்றும்
நுரையீரலின் மேல்பாகம் நன்கு சுருங்கி விரிவதன் மூலம், புத்துணர்ச்சி
உண்டாகிறது.
மேலும், நரம்பு மண்டலத்துடன்
தொடர்புகொள்வதால் மின்காந்தச் சக்தி உண்டாகிறது. இதனால், வெளி உலகத் தொடர்பு
ஏற்படுவதுடன் அண்டவெளி சக்தியையும் பெற முடியும். நாம் அன்றாடம் செய்யும் பல
வேலைகள் உள்ளன. பேசுதல், ஆசிரியராக வகுப்பறையில் பணிபுரிதல், பாடங்களைக் கேட்டல், படித்தல் ஆகிய
செயல்களைச் செய்வதற்கு முன், இந்த முத்திரையைச் செய்தால் சக்தியானது உடலுக்குள் நுழைந்து நமது
செயல்களைச் சிறப்பாகச் செய்ய முடியும்.
ஆள்காட்டி விரல்கள் மேல்
நோக்கியபடி ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். மற்ற எட்டு விரல்களும்
ஒன்றோடு ஒன்று இணைந்திருக்க வேண்டும்.
இந்த முத்திரையை எங்கும்
எப்போதும்,
விரும்பும் நேரம் வரை
செய்யலாம். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஓய்வின்றி இருக்கும்போது இந்த முத்திரையைச்
செய்யலாம். சுவாசம் சரியாக இல்லாதபோதும் இந்த முத்திரையைச் செய்யலாம். தேவையான
அளவு சக்தி உடலுக்குள் கிடைக்கிறது.
பத்மாசனம் அல்லது
சுகாசனத்தில் இருந்தபடி செய்யலாம். நின்றபடியும் செய்யலாம். நம் இதயத்துக்கு நேராக
இம் முத்திரை இருக்க வேண்டும்.
1. நரம்புகள்
புத்துணர்ச்சி பெற்று செயல்படும்.
2. தைமஸ் மற்றும்
தைராய்டு ஆகிய கழுத்துப் பகுதியில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகள் தூண்டப்பட்டு
சிறப்பாகச் செயல்படும்.
3. சுவாச உறுப்புகள்
நன்கு செயல்படும்.
4. உடலுக்குப்
புத்துணர்ச்சி கிடைக்கும்.
5. நுரையீரல், பெருங்குடல் ஆகிய
உறுப்புகள் பலமாகும்.
6. நரம்பு மண்டலம்
சக்தியைப் பெறுவதன் மூலம், அண்டவெளி சக்தி உடலுக்குள் செல்கிறது.
7. மன நிறைவு ஏற்படும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
யோக முத்திரைகள் : உயர்ந்த தெளிவை உண்டாக்கும் உத்தரபோதி முத்திரை தெரியுமா? - செய்முறை, கால அளவு, நிற்கும் முறை, பலன்கள் [ ] | Yoga Mudras : Do you know the Uttara Bodhi Mudra that produces superior clarity? - Recipe, duration, standing method, benefits in Tamil [ ]