பந்தயக் குதிரை ஓடும் போது அருகிலுள்ள புல்லையோ, கொள்ளையோ பார்ப்பதில்லை.. ஏனெனில் அது தன் வெற்றி இலக்கை மட்டுமே மனதில் கொண்டு ஓடுகிறது..
வாழ்க்கை பயணத்தில் உயர்வதற்கான வழிகள் தெரியுமா?
பந்தயக் குதிரை ஓடும்
போது அருகிலுள்ள புல்லையோ, கொள்ளையோ பார்ப்பதில்லை..
ஏனெனில் அது தன் வெற்றி
இலக்கை மட்டுமே மனதில் கொண்டு ஓடுகிறது..
வாழ்க்கையில் படிப்பு
அடிப்படை தேவை
வாழ்க்கையை படிப்பது
அதைவிட அவசியமான தேவை..
வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென்றால்...
முதலில் நம்மை இழிவாக
நினைப்பவர்களையும், நம்மிடம் என்றுமே குறை காண்பவர்களையும் நம் அருகில்
வைத்துக்கொள்ளக் கூடாது.!!!
சந்தோஷமான நிமிடங்கள்
அனைத்தும் வாழ்க்கை நமக்கு கொடுத்த பரிசு.............
சோகமான நிமிடங்கள்
அனைத்தும்
வாழ்க்கை நமக்கு கொடுத்த பரீட்சை..
பயங்கர கோபத்துல
இருந்தாலும் அடுத்தவங்களை காயத்படுத்தக் கூடாதுன்னு நினைக்கிற எண்ணம் இருந்தா
போதும் நீங்களும் கடவுள்தான்...!
༺🌷༻
ஒருவன் நல்லவனாக
விரும்பினால் ஒரு குணம் நிச்சயம் அவனிடம் இருக்கவேண்டும். யாரைப் பற்றி யும் குறை -
கோள் சொல்கிற பழக்கம் அறவே இருக்கக்கூடாது. இருந்தாலும் விட்டுவிடவேண்டும். அப்படி
இருந்தால் அனைவரும் விரும்புகிற நல்லவன் அவன் தான். இதில் சந்தேகமில்லை.
༺🌷༻
யாரைச் சந்தித்தாலும்
அவரது நிறைகளை மட்டும் புகழ்ந்து பேசுங்கள். வார்த்தைகளுக்கு வரையறை வேண்டாம். காசு
பணம் செலவில்லாத முறை. நல்ல நட்புடன் நேசமுடன் பேசுவதால் எதுவும் குறைந்துவிடாது.
குறைகளை யாரிடமும் பேசாதீர்கள். அப்படி குறைகளைச் சுட்டிக்காட்ட விரும்பினால் அதை
ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எதிராளிக்கு இருக்குமா? என்பதை யோசித்துப்
பார்த்துவிட்டுப் பேசுங்கள். அதுவும் மிக மென்மையாக சாதுர்யமாக அவரது மனம்
உங்களைக் குறைபட்டுக் கொள்ளாதவாறு பக்குவமாக எடுத்துச் சொல்வது தான்
சிறந்தது.
༺🌷༻
ஒருவரது நிறைகளைச்
சொல்லிப் பாராட்டும் போது பலர் முன்னிலையில் பாராட்டவேண்டும். ஆனால், அவரது குறை களைச்
சொல்லிக் கண்டிக்கும் போது தனிமையில் அழைத்துத் திட்டிக் கண்டிக்கவேண்டும் என்பதே
சரியான மகரயாழ் முறை. அந்தக் கலை எல்லாருக்கும் வருவதில்லை. இன்னொன்று மன்னிக்கும்
குணம்.
༺🌷༻
உங்களை மனவருத்தம்
அடையச் செய்யுமாறு யாராவது நடத்தினால் அதை உடனே மறுத்து கோபப்பட்டு உடனே
மல்லுக்கட்டிச் சண்டை போடாதீர்கள்.
அதை நேரம் பார்த்து அவர்
புரிந்து கொள்கிற மாதிரி நாகரிகமாகச் சொல்லுவது சிறந்த முறை. இதனால் உங்களின்
மதிப்பும்,
மரியாதையும் மேலும்
உயருமே தவிர,
ஒரு போதும் குறைந்து
விடாது.
༺🌷༻
நிறைகுடம் ஒரு போதும்
தளும்பாது. குறைகுடம் தான் கூத்தாடும். எந்தப் புயல் வந்தாலும் பச்சை மூங்கிலும், நாணலும் தம் இயல்பை
இழப்பதில்லை. நிலை குலைவதில்லை நீங்களும் அப்படி வாழக்கற்றுக் கொள்ளுங்கள். பிறரை
மன்னிக்கிற பெருந்தன்மை வளரட்டும்.
உலகில் எல்லா மதங்களும்
வழியுறுத்தும் கருத்து "நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்"
பிரச்சனை யாருக்குதான்
இல்லை. ஒவ்வொருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள். பிரச்சனைகள் தீர்க்க
வேண்டுமானால் முதலில் அதை புரிந்துக் கொள்ள வேண்டும். பிரச்சனைகளை புரிந்து கொள்ள
வேண்டுமானால் பதட்டமில்லாமல் நம்மால் அதை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை
வேண்டும். நம்பிக்கை ஏற்பட்டாலே அதற்குரிய வழியும் கிடைத்து விடுகிறது.
நம் எல்லோர்
வாழ்க்கையினும் நம்பிக்கையால் வெற்றி பெற்ற நிமிடங்களும் இருக்கும், நம்பிக்கையில்லாமல்
தவறவிட்ட தோல்விகளும் இருக்கும். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை
காப்பாற்றும் பொழுது பல பிரச்சனைகள் தீர்க்கபடுகிறது. ஒருவர் மீது ஒருவர்
வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கும் போது பிரச்சனைகள் உருவாகுகிறது.
நமக்கு நல்லது
செய்வார்கள் என்று நம்பி ஓட்டளித்த மக்களின் நம்பிக்கைக்கு உண்மையாக் இல்லாமல்
அரசியல்வாதிகள் அதை இழப்பதால்தான் இங்கே ஊழல் அதிகார துஷ்பிரயோகமும் கொடிகட்டி
பறக்கிறது.
ஊழியர்கள் உண்மையாக
நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நிறுவனங்கள் பெரிய பொறுப்புகளை
ஒப்படைக்கும்பொழுது சிலர் அதற்கு மாறாக நடப்பதால் தான் திருட்டு தனமும் சுயநலமும்
அதிகமாகிறது.
படிக்கவும் வேலைக்கும்
செல்லும் தங்கள் பிள்ளைகள் படிப்பிலும் வேலையிலும் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்
என்ற பெற்றோர்களின் நம்பிக்கைக்கு மாறாக பிள்ளைகள் நடக்கும் பொழுதுதான் பலரது
வாழ்க்கை பாதை மாறிப்போய்விடுகிறது.
நல்ல விஷயங்களுக்கு
மட்டுமே பயன்படும் என்று கணிப்பொறி வாங்கி தருபவர்களின் நம்பிக்கைக்கு மாறாக
நடக்கும் பொழுதுதான் கணிப்பொறியால் கலச்சாரம் சீரழிகிறது.
இப்படி எல்லா
பிரச்சனைகளுக்கும் காரணம் நம் மீது பிறர் வைத்திருக்கும் நல்ல நம்பிக்கைக்கு மாறாக
நாம் நடந்து கொள்வது தான். இதுவரை எப்படி இருந்தாலும் இனி நான் நன்றாக வாழ்வேன்
என்று ஒருவன் நம்ப ஆரம்பிக்கும் போது அவனது வாழ்க்கையை அந்த நம்பிக்கையை மாற்றி
அமைத்து விடுகிறது.
உலகின் மிகப்பெரிய
வெற்றியாளர்கள் முதல் உங்கள் பக்கத்து வீட்டில் முன்னேறிக்கொண்டிருப்பவர்கள் வரை
யாரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் ஒரு காலத்தில்
சாதாரணமானவர்களாகவும் தோல்வியை சந்தித்தவர்களாகவும் தான் இருப்பார்கள். அவரது
வெற்றிக்கு காரணம் அழுத்தமான நம்பிக்கையும் அதனால் வந்த உழைப்புமே காரணமாகும்.
நீ எதுவாக நினைக்கிறாயோ
அதுவாகவே ஆகும் தன்மை உனக்கு உண்டு என்று எல்லா மதமும் சொல்கிறது.
நம்முடைய வாழ்க்கை
எப்படி இருந்தாலும் அதை மாற்றும் தன்மை நல்ல நம்பிக்கைக்கு உண்டு.
இறுதியாக நம்பிக்கையை
பற்றி நான் படித்த கவிதை ஒன்றை சொல்லி நிறைவுசெய்கிறேன்.
படிப்பில்
நம்பிக்கையை இழந்தால்
பரிட்சைகள் நம்மை
பார்த்து சிரிக்கும்
காதலில்
நம்பிக்கையை இழந்தால்
கவிதைகள் நம்மை பார்த்து
சிரிக்கும்
நட்பில்
நம்பிக்கை இழந்தால்
பிரிவுகள் நம்மை
பார்த்து சிரிக்கும்
கடமையில்
நம்பிக்கை இழந்தால்
கஷடங்கள் நம்மை பார்த்து
சிரிக்கும்
கட்டுப்பாடுகளில்
நம்பிக்கை இழந்தால்
கலாச்சாரம் நம்மை
பார்த்து சிரிக்கும்
நிகழ்காலத்தில்
நம்பிக்கை இழந்தால்
எதிர்காலம் நம்மை
பார்த்து சிரிக்கும்
எதிலும்
நம்பிக்கையோடு இருந்தால்
வாழ்வில் எல்லாமே
சிறக்கும்.
உன்னுடைய பாதை
நேர்மையானதாகவும்! உழைப்பு உண்மையானதாகவும் இருந்தால் இறைவன் அருள் பற்றி ஐயம்
வேண்டாம். அது உனக்கு எப்போதும் உண்டு
நம்பிக்கையுடன்
செயல்படு! வெற்றி நிச்சயம்! என்று அருமையான கருத்தை முன் வைக்கிறார் புதுவை அன்னை.
நல்லதே நினைப்போம், நம்பிக்கையுடன்
செயல்படுவோம். நலமாக வாழ்வோமாக
┈❀🌿🀼┈❀🌿🌺🌿❀┈❀🌿🌺🌿❀┈.
வாழ்க்கையில் வெற்றி பெற
நல்ல நண்பர்கள் தேவை. வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற ஒரு எதிரியாவது தேவை......
வெற்றி இல்லாமல்
வாழ்க்கை இல்லை. ஆனால் வெற்றி மட்டுமே வாழ்க்கை இல்லை.......
தோல்வி நம்மை
துரத்துகிறது என்றால் நாம் வெற்றியை நெருங்கி விட்டோம் என்று அர்த்தம்.
இந்த நாளில் வெற்றி மேல்
வெற்றி வந்து நம்மை சேர்ந்து,
வெற்றிகரமானதாக
அமையட்டும்.....
🌹 கப்பல் மூழ்கி விடும் என்று நினைத்தால் கடற்ப்பயணம் நிம்மதி இருக்காது🌹
🌹 விமானம் வெடித்து விடும் என்று நினைத்தால் வானினூர்திப் பயணம் நிம்மதி இருக்காது🌹
🌹 அதுபோல வாழ்க்கையும் கஷ்டம் என்று நினைத்தால் வாழ்க்கையைப் பயணம் நிம்மதி இருக்காது🌹
🌹 தனக்கு மட்டும் தான் கஷ்ட காலம் என்று நினைத்துப் புலம்பாதே🌹
🌹 சற்று சுற்றிப் பார்🌹
🌹 ஒவ்வொரு இதயமும்
கடலளவு கஷ்டத்தை
சுமந்து கொண்டு தான்🌹
🌹 வாழ்க்கையை முன்னோக்கி
நகர்த்துகின்றது🌹
🌹 ஆகையால் முடியாது என்று எதையும் விட்டு விடாதே
முயன்று பார் நிச்சயம்
முடியும்🌹
🌹 லட்சியம் இருக்கும் இடத்தில
அலட்சியம் இருக்காது🌹
🌹 வாழ்க்கை சொர்கமாவதும் நரகமாவதும் நம் எண்ணங்களை பொறுத்தே🌹
🌹ஆகையால் முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம் 👍
💐அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் என நல்ல வாய்ப்புகளை ஒதுக்கி விட்டால்🌾
💐பிறகு அதற்காக வருத்தப்படவும் நேரிடலாம்🌾
💐ஒரு வாய்ப்பைப் பற்றிக் கொண்ட பின் அந்த வாய்ப்பை சாதனை வெற்றியாக மாற்றும் உறுதியும் வெற்றியின் மீதான வெறியும் வேண்டும்🌾
💐அப்போது தான் அந்த வாய்ப்பு உங்களை வாழ வைக்கும்🌾
💐சின்னஞ்சிறு விதை போலவே நீ இன்று செய்யும் ஒவ்வொரு முயற்சிகளும் கண்டிப்பாக பின்னாளில் விருட்சம் போல உனக்கான வெற்றியை தேடி தரும்🌾
💐தினசரி புதுப்புது சவால்களை சந்தித்து எதிர் நீச்சல் போடும் உனக்கு🌾
💐 மன அமைதி அத்தனை எளிதாகக் கிடைப்பதில்லை🌾
💐 வாழ்கையில் எனக்கு என்ன தேவை என மனதிடம் கேளுங்கள்🌾
💐 அப்படி என்றால் மனதுடன் பேசுங்கள்
கேட்கவில்லை என்றால்
எதுவும் கிடைக்காது🌾
💐 தோல்வி உங்களுக்குள்
எதிர்மறை உணர்வுகளை
உண்டாக்கலாம்🌾
💐 ஆனால் தோல்வியடையாத மனிதர்களே
உலகில் இல்லை🌾
வாழ்க்கையில் ஒரு செயலை
வெற்றிகரமாக செய்து முடித்தாலும்,
நியாயமாக நமக்குக்
கிடைக்க வேண்டிய பெயர் புகழ், பாராட்டு இவை அனைத்தும் வேறு நபர்களுக்கு கிடைக்கிறது என்று மனம்
வாடாமல்,
கிடைத்த வெற்றியை
மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
சுருக்கமா சொல்றேன்,
அதாவது ஒரு கட்டடம்
கட்டும் போது முக்கியமாக இருந்த, சவுக்குமரத்தை யார் கண்ணிலும் படாத இடத்தில் மறைத்து வைத்து விட்டு,
வேறெங்கோ முளைத்த
வாழைமரத்தை வாசலில் நட்டு கிரகப்பிரவேசம் நடத்தி வரவேற்பார்கள்,
விசேஷம் முடிந்தவடன்
வாழைமரம் குப்பைக்குச் சென்று விடும்,
ஆனால் சவுக்கு மரம் அடுத்த வீடு
கட்டுவதற்குத் தயாராகி விடும்,
ஆகவே நண்பர்களே பலனை
எதிர்பாராமல் கடமைகளைச் சரிவர செய்தால் மனம் திருப்தி அடையும்,
சொல்பவர்கள் யார் என்று
யோசிக்காமல்,
சொல்லப்பட்ட
கருத்துக்களை எடுத்துக் கொண்டால்,
வாழ்க்கை சிறக்கும்
வெற்றியும் நிச்சயம் ஆகும்,
*அவசியம்
இல்லாதவர்களிடம் எந்தவொரு உண்மைகளையும் சொல்லாதீா்கள்... அவசியமானவா்களிடம்
தேவையில்லாமல் எந்தவொரு பொய்களையும் சொல்லாதீா்கள்; ஏனெனில், இரண்டுமே உங்களை
காயப்படுத்தும்... நல்லவர்களிடமும் சில தவறுகள் இருக்கலாம்; தீயவர்களிடமும் நல்லது
இருக்கலாம்,
அவரவர் இயல்புடன்
ஏற்கப்பழகுதல் நலம்..!!👍
வாழ்க்கையில் வெற்றி பெற
வேண்டும் என்ற ஒரு எண்ணம் உனக்குத் தோன்றி விட்டால், இந்த உலகம் சொல்லும், உன்னால் முடியாது
என்று...
ஆனால் அவர்களுக்கு 100 முறை
உரக்கக் கூறுங்கள், என்னால் நிச்சயமாக முடியும்
என்று.....!!
ஏனென்றால் நிச்சயம்
உங்களுக்கு ஒரு நல்ல குரு இருப்பார்,
நிச்சயம் ஒரு சிங்கத்தைப்
போன்ற ஒரு உயர்ந்த குணம் உங்களுக்கு இருக்கும்,
நிச்சயம் இந்த இரண்டு
சக்திகளை விட அந்தப் பிரபஞ்சம் எப்போதும் உங்களுக்கு முழுமையாக துணை நிற்கும்....!
முறையாக இந்த மூன்று
கருவிகளையும் பயன்படுத்தி, வெற்றி பெற சரியான தருணம் நெருங்கிவிட்டது என்று மனதில் உறுதி
ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஏனென்றால் எதுவும் நமது
கட்டுப்பாட்டில் இல்லை அனைத்தும் அந்த பிரம்மாண்டமான பிரபஞ்ச ஆற்றலின் கட்டுப்பாட்டில்
தான் இயங்குகிறது.
கடல் எல்லோருக்கும்
பொதுவானது.....
அதில் சிலர் முத்து
எடுக்கிறார்கள்.......
சிலர் மீன்
எடுக்கிறார்கள்.......
ஒரு சிலர் கால்கள்
மட்டும் நனைக்கிறார்கள்.....
வாழ்க்கை எல்லோருக்கும்
பொதுவானது....
அதில் நாம் எதை நோக்கிப்
பயணிக்கிறோமோ அது கிடைக்கும்....!!
வீறு கொண்டு எழுந்திடு
!!
வியர்வை சிந்தி
உழைத்திடு !!
தடைகளை நீ தாண்டிடு !!
தவறுகளை நீ திருத்திடு
!!
கோபத்தை அழித்திடு !!
கொள்கையை நீ வகுத்திடு
!!
காலத்தை நீ கணித்திடு !!
கற்பனையை நீ வளர்த்திடு
!!
சோதனையை நீ தாங்கிடு !!
சோர்வை நீ தவிர்த்திடு
!!
சிந்தித்து செயல்படு!!
சிறப்பாய் நீ வாழ்ந்திடு
!!
உண்மைக்கு உதவிடு !!
உதவிக்குத் தோள்கொடு !!
பொறுமையில் உயர்ந்திடு
!!
பொறுப்பாய் உணர்த்திடு
!!
தாய் தந்தையை மதித்திடு
!!
தவறாமல் காத்திடு !!
கடவுளை வணங்கிடு !!
கடமையைச் செய்திடு !!
உறுதியா உழைத்திடு !!
உண்மையா உயர்ந்திடு !!
மண்டியிட்டா
மேரியாத்தா......
விழுந்து கும்பிட்டா
மாரி ஆத்தா
அம்புட்டு தாங்க
கடவுள்.............!!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
தன்னம்பிக்கை : வாழ்க்கை பயணத்தில் உயர்வதற்கான வழிகள் தெரியுமா? - நிறைகுடம் ஒரு போதும் தளும்பாது, வெற்றி [ ] | self confidence : Do you know the ways to rise in the journey of life? - The mass never sags. in Tamil [ ]