108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்பதி வெங்கடாசலபதி கோயில் அல்லது திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட கோவிலாகும்.
ஏழுமலையானின் எழுமலைகள் என்ன தெரியுமா?
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்பதி வெங்கடாசலபதி
கோயில் அல்லது திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட
கோவிலாகும்.
இந்த கோவில் சேஷாத்திரி,
கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி,
வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழந்த இடத்தில் இருப்பதால் இத்தலம்
ஏழுமலை என்றும், இத்தலத்தின் மூலவர் ஏழுமலையான் என்றும்
அழைக்கப்படுகிறார்.
இத்தளத்தின் மூலவர் வெங்கடாசலபதி என்றும் வேங்கடன்
என்றும் அழைக்கப்படுகிறார். தாயார் பத்மாவதி அம்மையார்.
வெங்கடாத்ரி மலை 3200 அடி உயரமும், 10.33 சதுர மைல்கள் கொண்டதாகும்.
இந்தியாவிலேயே அதிக வருமானம் கொண்ட கோயில் திருப்பதி கோவிலாகும்.
இந்த ஏழுமலைகள் எது என பார்க்கலாம்…
‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு
‘வேங்கட மலை’ என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு
காட்சி தருகிறார்.
2. சேஷ மலை: (சேஷாத்திரி)
பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். இது
ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.
3. வேதமலை: (நாராயணாத்திரி)
வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன.
எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.
4. கருட மலை: (கருடாத்திரி)
இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார்
வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர்
பெற்றது.
5. விருஷப மலை:
(விருஷபாத்திரி)
விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இது ‘விருஷப மலை’
எனப் பெயர் பெற்றது.
6. அஞ்சன மலை:
(அஞ்சனாத்திரி)
ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம்
கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது
பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிறது.
7. ஆனந்த மலை: (நீலாத்திரி)
ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு
நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால்
வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர்
பெற்றது.
ஓம்நமோநாராயணாய!
மக்கள் நலத்தில்!
தமிழர் நலம்
நன்றி...🙏
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
பெருமாள் : ஏழுமலையானின் எழுமலைகள் என்ன தெரியுமா? - குறிப்புகள் [ பெருமாள் ] | Perumal : Do you know what are the peaks of Echumalayan? - Tips in Tamil [ Perumal ]