ஒவ்வொரு இராசிக்காரர்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய திதிகள் என்னவென்று தெரியுமா?

இராசிகளும் கவனம் கொள்ள வேண்டிய திதிகளும்

[ ஜோதிடம்: அறிமுகம் ]

Do you know what are the Tithis that every zodiac sign should be careful about? - Zodiac signs and Tithis to watch out for in Tamil

ஒவ்வொரு இராசிக்காரர்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய திதிகள் என்னவென்று தெரியுமா? | Do you know what are the Tithis that every zodiac sign should be careful about?

வளர்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும், தேய்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும் வருகின்றன. இந்தப் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் பௌர்ணமியும் மாதமொரு முறை மாறி மாறி வந்து போகின்றன.

ஒவ்வொரு இராசிக்காரர்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய திதிகள் என்னவென்று தெரியுமா?

 

வளர்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும், தேய்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும் வருகின்றன.

 

இந்தப் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் பௌர்ணமியும் மாதமொரு முறை மாறி மாறி வந்து போகின்றன.

 

நல்ல காரியங்கள் செய்யவும், சுப காரியங்கள் செய்யவும் திதிகளை பார்க்கின்றனர்.

 

ஆனால் இந்த திதிகள் சில இராசிகளை பாதிக்கின்றது என்பதை உணரவில்லை.

 

அதன்படி எந்த இராசிக்காரர்கள் எந்த திதியன்று கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

 

இராசிகளும் கவனம் கொள்ள வேண்டிய திதிகளும் :

 

மேஷம் - சஷ்டி

 

ரிஷபம் - சதுர்த்தி, திரயோதசி

 

மிதுனம் - பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி

 

கடகம் - சப்தமி

 

சிம்மம் - திருதியை, சஷ்டி, நவமி, தசமி, திரயோதசி

 

கன்னி - பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி

 

துலாம் - பிரதமை, துவாதசி

 

விருச்சகம் - நவமி, தசமி

 

தனுசு - துவிதியை, ஸப்தமி, ஏகாதசி, சதுர்த்தசி

 

மகரம் - பிரதமை, திருதியை, துவாதசி

 

கும்பம் - சதுர்த்தி

 

மீனம் - துவிதியை, ஏகாதசி, சதுர்த்தசி

 

இந்த வளர்பிறை, தேய்பிறை திதிகளில் மேற்கூறியபடி இராசிக்காரர்கள் கவனமாக செயல்பட வேண்டும். இந்த நாட்களில் மற்றவர்களிடம் பழகும்போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 

அதே போல் பௌர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்வது தேய்பிறை எனப்படும்.

 

முதல் நாள் பெயர் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, எனச் சென்று அமாவாசையில் முடியும்.

 

இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை கிருஷ்ணபட்சம் அல்லது தேய்பிறைத் திதிகள் என அழைக்கப்படும்.

 

இவைகள் அனைத்தும் ஜோதிடத்தில் நல்ல நாட்கள் பார்க்க உதவுகின்றன.

 

வளர்பிறை காலத்தில் குறிப்பிட்ட திதியின் அதிதேவதையை வணங்கிவிட்டு சுப காரியங்களைச் செய்வது விசேஷமாகும்.

 

தேய்பிறை காலத்தில் சுபகாரியங்கள் செய்வதானால் பஞ்சமிக்குள் செய்வது உத்தமமாகும்.

 

தேய்பிறை பஞ்சமி வரையிலும் வளர்பிறை காலம் போல் பலன் உண்டு என்று கூறுவர்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.

- தமிழர் நலம்

 

ஜோதிடம்: அறிமுகம் : ஒவ்வொரு இராசிக்காரர்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய திதிகள் என்னவென்று தெரியுமா? - இராசிகளும் கவனம் கொள்ள வேண்டிய திதிகளும் [ ] | Astrology: Introduction : Do you know what are the Tithis that every zodiac sign should be careful about? - Zodiac signs and Tithis to watch out for in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்