நடக்கிற ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்க தான் செய்யும். அது தான் கடவுளின் வேலை ஆகும்.
கடவுளின் வேலை என்ன என்று தெரியுமா?
நடக்கிற ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்க தான் செய்யும். அது தான் கடவுளின் வேலை ஆகும். ஒரு பிரசித்தி பெற்ற கோவில் ஒன்றில் ஆலயப் பணிகளை செய்யும் மனிதர் ஒருவர் இருந்தார். தினமும் கோவிலைப் பெருக்கிச் சுத்தம் செய்வது தான் அவரது வேலை. அதைக் எந்தக் குறைவின்றி செவ்வனே செய்து வந்தார். அவருடைய வாழ்க்கையே கோவில், கோவிலை விட்டால் வீடு என்று தான் வாழ்ந்து அவர் வாழ்க்கை போய்க் கொண்டு இருந்தது. மேலும் அதை தவிர அவருக்கு வேற வேலை தெரியாது. கோவிலில் கூட்டமும் அதிகமாகி கொண்டே இருந்தது. அவர் மனதில் ஒரு எண்ணம் ஓடியது. கடவுள் எல்லா நேரமும் நின்று கொண்டே உள்ளாரே, அவருக்கு சோர்வு ஏற்படாதா? என்று நினைத்த அந்த வேலையாள் ஒரு நாள், இறைவனிடம் இப்படி கேட்டார். “நீர் சதா இப்படி நின்று கொண்டேயிருக்கீர்களே உங்களுக்கு பதிலாக நான் வேண்டும் என்றால் ஒரு நாள் நின்னு பார்க்கிறேன். ‘ஒரு நாள் கடவுள்’ வாழ ஆசைப் பட்டார். கடவுளும் கேட்ட வரம் கெட்டவை என்றாலே கொடுப்பார். இதற்க்கு கேட்கவா வேணும்? அப்படியே ஆகட்டும் என்று ஒரு நிபந்தனை வைத்தார். என்னவென்றால் எனக்குப் பதிலாக நீ ஒருநாள் நின்று, என்னைப் போலவே அசையாமல் நிற்க கல்லாக நிற்க வேண்டும். ஏதும் பேசக்கூடாது என்று சொன்னார். வரும் பக்தர்களை பார்த்துப் புன்முறுவலுடன் அவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினால் போதும். எந்த சூழ்நிலையிலும் யார் எப்படி வந்து உருகிக் கேட்டாலும் நீ பதில் எதுவும் சொல்லமால் நீ கடவுளின் சிலை தான் என்பதை மனதில் வைத்து கொண்டு சிவனேன்னு சும்மா இருத்தலே போதும். சரி என்று சொல்லி கடவுள் வேலை அந்த மனிதருக்கு மாற்றம் செய்யப்படுகிறது. அவரும் அடுத்த நாள், கடவுளைப் போலவே அலங்காரம் செய்து கொண்டு கோவில் கருவறையில் நிற்க ஆரம்பமானார். கடவுள் அந்த பணியாள் வேலையை பார்க்க தயாரானார்.
முதல் பக்தர் மிகப் பெரிய கோடீஸ்வரர் தன்னுடைய தொழில் மேன்மை அடைய வேண்டி பிரார்த்தனை செய்ய வருகிறார். வந்து வேண்டி மாலை அலங்காரம் கடவுளுக்குச் செய்து ஒரு மிகப் பெரிய பண மூட்டையை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தினார். மேலும் வந்த இடத்தில கோவிலிலேயே தன்னுடைய தங்கப் பொக்கிசத்தை தவற விடுகிறார். இதைக் மனிதக் கடவுள் கருவறையில் இருந்து பார்க்கிறார். நிபந்தனை நேபகம் வரவே பேசாமல் இருக்கிறார். சிலை மாதிரி நிக்குறியே என்று சொல்வார்களே அப்படியே அசையாது நிற்கிறார். கொஞ்ச நேரம் கழித்து அடுத்த பக்தர் மிகப் பெரிய ஒரு பரம ஏழை அங்கு வந்தான். ஆனால் அவனிடம் உண்டியலில் காணிக்கை போட ஒரே ஒரு ஒத்த ரூபாய் மட்டுமே இருந்தது. அவனும் பிரார்த்தனை செய்து வெறும் கையோடு வந்து அவனும் ஆசிர்வாதம் கேக்கிறான். அவனுடைய சாப்பாடுக்கே வழி இல்லாத நிலையை சொல்லி தீர்க்குமாறு வேண்டினான். நீயே வழி காமித்து வழிகளை சொல்ல வேண்டும் என்று உள்ளம் உருகி, கண்களை மூடி கடவுள் உண்டு என்பது மூட நம்பிக்கை என்று சொல்பவர்கள் மத்தியில் முழு நம்பிக்கையுடன் வேண்டினான். சில நொடிகள் கழித்துக் கண்களைத் திறக்கிறான். எதிரே, அந்த பணக்காரன் தவற விட்ட தங்கப் புதையல் கண்ணில் படுகிறது. அவனும் கடவுள் நமக்கு தான் கொடுத்து இருக்கிறார் என்று அதை அப்படியே எடுத்துக் கொள்கிறான். இப்போ நம்முடைய ஒரு நாள் கடவுளுக்கு பொறுக்க முடியவில்லை. இருந்தும் நிபந்தனை நினைவுக்கு வரத் தானே செய்யும். அவருடைய அதே புன்சிரிப்புடன் சிலையாய் நின்று கொண்டிருந்தான். அடுத்து கொஞ்ச நேரம் கழித்து, அடுத்த பக்தர் ஒரு பெரிய கப்பல் வியாபாரி வந்தார். அவருடைய கப்பல் பயணம் சிறக்க வேண்டி வந்தார். அந்த நேரம் பார்த்து, தங்கப் பையை தொலைத்த பணக்காரன் வரவே, அங்கு, கப்பல் வியாபாரி கும்பிடுவதை பார்த்து, “இவர் தான் அந்த தங்கப் பையை எடுத்து இருக்க வேண்டும் என்று கூச்சலிட்டு காவாலளிகளிடம் முறை இடுகிறார். காவலாளிகளும் அவரை இழுத்துச் செல்கிறார்கள். இப்போ மாதிரிக் கடவுள் பொறுமை தாங்காமல் நிஜக் கடவுளிடம் “கடவுளே இது என்ன அநியாயம்? நியாயமா? அப்பாவி ஒருவரை தண்டிக்க விடலாமா? இனியும் என்னால் சிலையாய் சும்மாயிருக்க முடியாது…” என்று சொல்லி, “கப்பல் வியாபாரி திருடவில்லை. மேலும் தவறு அவர் மீது கிடையாது” என்று நடந்த அனைத்து உண்மைகளை அனைவரிடமும் சொல்கிறான். உடனே, பணக்காரரும், கப்பல் வியாபாரியும் மனம் மகிழ்ந்து நெகிழ்ந்து போய், உண்மையைக் கூறியமைக்கு அந்த ஆண்டவனிடம் நன்றி சொல்லிவிட்டு செல்கின்றார்கள். இரவு, கோவில் வாசல் மூடப்பட்டு கடவுள் வருகிறார். மூலஸ்தானத்தில் நின்று கொண்டிருந்த தற்காலிக கடவுளிடம், இன்றைய பொழுது எப்படியிருந்தது? என்று கேட்கிறார். என்ன சொல்லி இருப்பார் என்று நமக்கே தெரிய வந்து இருக்கும். அவர் இப்போ இருந்த உலகத்தில் இருந்தால் “உங்க பொங்கச் சோறும் வேண்டாம். பூசாரி தனமும் வேண்டாம் என்று ஓடியே போய் இருப்பார். அப்போ இருந்தவர் என்ன சொன்னார் தெரியுமா? எனக்கு “மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்போ தான் தெரிந்தது கடவுள் வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன். என்று சொன்னார். ஆனால் ஒரே ஒரு நல்லது செய்தேன்.” என்று காலை கோவிலில் நடந்த அனைத்தையும் கூறினார். கடவுளுக்கு தெரியாததா? கடவுள் கேட்டார் நீ ஏன் நிபந்தனைப்படி நடந்து கொள்ளவில்லை…? என்ன நடந்தாலும் பேசவேக் கூடாது, அசையவேக் கூடாது என்ற என் நிபந்தனைகளை ஏன் மீறினாய்.? இங்கு வரும் பக்தர்களின் அனைத்து மனநிலையை அறியாதவனா நான்? சொல்கிறேன் கேள். அந்தப் பணக்காரன் அளித்த உண்டியல் காணிக்கை, தவறான வழியில் சம்பாதித்தது. அது அவனிடத்தில் இருக்கும் மொத்தமாக உள்ள செல்வத்திலே ஒரு சிறு பகுதி தான். சொல்லப் போனால் கடலில் இருக்கும் ஒரு துளி அளவு தான். அதை எனக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட்டு, பதிலுக்கு அவனுக்கு மேலும் இன்னொரு கடல் போன்ற பல மடங்குத் தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் அந்த பரம ஏழை கொடுத்ததோ அவனிடம் மிச்சம் இருந்த ஒரே ஒரு ஒத்த ரூபாய் தான். இருந்தாலும் முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க வந்து, அன்போடு அதை எனக்கு கொடுத்தான். சரி நீ கேப்பது தெரிகிறது. கப்பல் வியாபாரி என்ன செய்தான். அவனுக்கு ஏன் அந்தக் கஷ்டம் கொடுத்தேன் என்று தானே கேட்கிறாய்? சொல்கிறேன்.
இந்தச் சம்பவத்திலே, கப்பல் வியாபாரிக்கு
சம்பந்தம் இல்லை. ஆனால் அவருக்கு தலைக்கு வந்தது தலைபாகையோடு போனக் கதை தான். அவர்
மட்டும் இன்று கப்பலில் பயணம் செய்தால் விபத்தைச் சந்திக்க நேர்ந்து இருக்கும். புயலில்
பலியாகி அவனும், அவன் கப்பலும் கடலிலே காணாமல் போயிருப்பார்கள். அதிலிருந்து காக்கவே
அவனைத் அவர்களை தற்காலிகமாகத் திருட்டுப் பட்டம் சுமக்கச் செய்து சிறைக்கு அனுப்ப
நினைத்தேன். ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய் சென்றதும் சரி தான். அவன் அதை கடவுள் கொடுத்ததாக
எண்ணி நல்ல காரியங்களில் ஈடுபடுவான். அவனுடைய கஷ்டமும் போக்க நினைத்தேன். கதையின்
மையக் கருத்து என்னவென்றால் அந்த கோடீஸ்வரனின் கர்மா கொஞ்சமாவது குறைக்கப்படும். அதாவது அவருடைய பாவப்
பலன்கள் ஒரு துளியாவது குறைய வாய்ப்பு உண்டு.. இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் அவர்களின்
நன்மை பயக்கும் விதமாக கடவுள் ஆசிர்வாதம் செய்து அவர் வேலையை சரியாகச் செய்கிறார்.
இப்போது புரிந்துகொள்ளுங்கள். கடவுள் செய்யும் அனைத்திற்கும் ஒரு காரணம் கர்த்தா
இருக்கும். அதை ஒவ்வொன்றையும் மனிதர்களால் புரிந்து கொள்ளவே முடியாது. அவரவரது
கர்மாவின் படி பாவப், புண்ணியப் பலன்களை அளிக்கிறார் ஆண்டவன். கடவுள்
கொடுப்பதிலும் ஒரு காரணம் இருக்கிறது. கொடுக்க மறுப்பதிலும் ஒரு காரணம் இருக்கிறது”
ஒரு நாளும் ஆண்டவன் தப்புக்கணக்கு போட்டதில்லை. ஆனால் மனிதர்கள் அந்த ஒரு நாள்
கடவுள் பணியிலேயே ஆண்டவன் கணக்கை தப்பாய் புரிகிறார்கள். கடவுள் தாமதம்
காட்டுகிறார் என்றால் தரமான ஒன்றை உங்களுக்குத் தயார் செய்து கொண்டு இருக்கிறார்
என்று காரணம் உண்டு. தர வில்லை என்றால் அதற்கும் ஒரு காரணம். தந்து கொண்டே
இருக்கிறார் என்றால் அதற்கும் ஒரு காரணம். நீங்கள் எப்படி பட்டவர் என்பதில் தான்
இருக்கிறது. கூடுமானவரை நல்லது செய்தால் நன்மையே நடக்கும்
ஓம் நமச்சிவாய !!!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீகம் : கடவுளின் வேலை என்ன என்று தெரியுமா? - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | spirituality : Do you know what God's work is? - Spiritual Notes in Tamil [ spirituality ]