சிவன் சொத்து... குல நாசம் என்னவென்று தெரியுமா?

ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீகம் ]

Do you know what Shiva's property is? - Spiritual Notes in Tamil



எழுது: சாமி | தேதி : 23-10-2022 08:35 am
சிவன் சொத்து... குல நாசம் என்னவென்று தெரியுமா?  | Do you know what Shiva's property is?

வாழ்க்கையில் பிரச்சினை என்றால் கடவுளிடம் முறையிடுகிறோம். அழுது பிரார்த்தனை செய்கிறோம்.

சிவன் சொத்து... குல நாசம் என்னவென்று தெரியுமா? 



வாழ்க்கையில் பிரச்சினை என்றால் கடவுளிடம் முறையிடுகிறோம். அழுது பிரார்த்தனை செய்கிறோம். எந்தப் பாவமும் செய்யாத எனக்கு மட்டுமே ஏன் இப்படி நடக்கிறது? என்றும் கடைசி வரைக்கும் இதே கஷ்டம்தானா? என பலரும் கடவுளிடம் கேட்கும் ஆதங்கமான கேள்வி. தர்மசாஸ்திர நியதிப்படி தெரிந்தோ, தெரியாமலோ பாவமோ, புண்ணியமோ செய்தால் அதற்குத் தக்கவாறு பலன் கிடைக்கும். ஆக கர்ம வினைக்கேற்ற பலன் நிச்சயம் உண்டு. இந்த நியதியானது அரசன் முதல் ஆண்டிவரை அனைவருக்கும் பொருந்தும். மனிதர்கள் பிறப்பதே இந்த பாவ புண்ணியத்தின் அடிப்படை தான். அதை அனுபவிப்பதற்காகவே இப்பூமிக்கு வருகிறான். ஒரு சிலர் அவர்கள் நினைத்ததை நினைத்தபடியே செய்து விடுகிறார்கள். ஒரு சிலர் நினைத்ததை திட்டமிட்டு செய்கிறார்கள். இன்னும் சிலர் நினைத்த உடனே செய்தும் விடுகிறார்கள். சிலரால் எதுவும் செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். முயற்சி செய்தாலும் தோற்கிறார்கள். இதற்கு காரணம் ஜாதகம் என்று நடைமுறையிலே காதில் கேட்கிறோம். இது அனைத்தும் முற்பிறவியின் கர்ம பலன் ஆகும்.


சிவன் சொத்து குல நாசம் என்பது எந்த ஒரு கோவில் சொத்தை அபகரிக்க நினைத்தல் மற்றும் அபகரித்தல் செய்பவர்களின் குலமே அதாவது வம்சமே விருத்தி அடையாமல் நாசமாகி அழியும் நிலைக்கு போகும் என்பதே ஆன்மீக சாஸ்திர நியதி ஆகும். கோவில் சொத்து மேல் ஆசைப்படுபவர்களின் சந்ததிகளும் அடியோடு நாசமாகும். ஏனென்றால் நமக்கு வரம் கொடுத்து வாழ வாய்ப்பு தந்த ஆண்டவன் தலையிலேயே கையை வைத்தால் என்னவாகும். அதே தான் கோவில் சொத்தை அபகரிக்க நினைபவர்களுக்கும் ஏற்படும். இதனால் தான் சிவன் கோவில் பிரசாதமான விபூதியை கூட வீட்டிற்கு கொண்டு செல்வது இல்லை என்பதும் ஒரு சிறு காரணமாக இருக்கலாம். உளவியல் ரீதியாக கோவில் சொத்தை ஆட்டையைப் போடும் எண்ணமே பலரில் சொற்ப சிலருக்கே வரும். அநேகப் பேர் தர்ம காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள எங்கயாவது வாய்ப்புகளோ, சந்தர்ப்பங்களோ தேடி அலைகிறார்கள். பலர் கோவில் சொத்தை பராமரிக்க அரும்பாடு படுகிறார்கள். உண்மையில் சிவன் சொத்து குல நாசம் என்பதன் பொருள் என்னவென்றால், சிவன் என்றால் சிவம். சிவம் என்பது ஒரு மெய் பொருளாகும். மெய் பொருள் என்பது ஒவ்வொரு உயிரிலும் இருக்கும் ஆன்மா. சிவம் எனும் மனசாட்சிக்குப் புறம்பாக செய்யும் அனைத்துச் செயல்களும் அழிவை நோக்கி அழைத்துச் செல்லும். இதைத்தான் சிவன் (சிவம்) சொத்து குல நாசம் என்று சொல்லி வைத்தனர். அதாவது ஆன்மாவில் நிற்கும் சிவம் செத்தால் (மனசாட்சி செத்தால்) குலமே அழிந்து போகும் என்பதே இதன் பொருள். உடல் என்பது சந்திரன், உயிர் என்பது சூரியன் இவை இரண்டும் கலந்த சிவம் எனும் ஆன்மாவிற்கும் அதாவது மனம் சார்ந்த மனசாட்சிக்கும் எதிராக செயல் புரிபவர்களின் வாழ்நாள்கள் கொடூரமான அதிகமாக நரக வேதனை கொண்டதாக இருக்கும். அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல துயரங்கள், அனுபவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். பல பெரும் கோடீஸ்வரர்கள் வாரிசுகளால் தீராத மன வேதனை அனுபவிப்பதற்கும், சென்ற பிறவிகளில் தீர்க்க முடியாத பாவங்களை புரிந்தவர்கள் இந்த பிறவியில் அதிக கஷ்டத்தை அனுபவித்து வருகிறார்கள். மனசாட்சிக்குப் புறம்பான செயல்கள் மற்றும் பிரபஞ்ச நியதிக்கு எதிராக கீழே குறிப்பிட்ட காரியங்களில் ஈடுபட்டதன் விளைவு அழிவு ஆகும். வட்டிக்கு கொடுத்து மனிதர்களை துன்பப்படுத்துபவர்கள், ஒருவரின் வாழ்க்கையை தேவை இல்லாமல் கெடுப்பவர்கள், வாழ்க்கையில் நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தம்பதிகளைப் பிரிப்பவர்கள், உழைத்த கூலியை கொடுக்காமல் அல்லது குறித்த நேரத்தில் கொடுக்காது குறைத்தே கொடுப்பவர்கள், வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுபவர்கள், ஆசை வார்த்தை சொல்லி பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றுபவர்கள், அடுத்தவர் சொத்தை அபகரிப்பவர்கள், திருடுபவர்கள், கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தவறுபவர்கள், தவறான வைத்தியம் செய்பவர்கள், பொய்யான வதந்தியை பரப்புவர்கள், உணவுப் பொருட்களில் கலப்படம் செய்பவர்கள், கோவில் சொத்தை அபகரிப்பபவர்கள், பசுக்களை, விலங்குகளை வதைப்பவர்கள், இயற்கையை மாசுபடுத்துபவர்கள், நோயை பரப்புவர்கள், வீண் வதந்தியை கிளப்புவர்கள் இது போன்ற காரியங்களில் ஈடுபடும் அனைவர்களும் அதற்கேற்ற பலன் அடைவார்கள்.

ஆகவே நாமும் நமக்கு சொந்தமாகாதவற்றை நினைக்கவும்  அடையவும் அனுபவிக்கவும் ஒருபோதும் மனதில் எண்ண வேண்டாம். எல்லா விதமான ஆசைகளையும் அடக்கி, பந்த பாசங்களை மறந்து, மனசாட்சிக்கு நம்பிக்கையாய் பயந்து முழுமையாக தன்னை அந்த ஆண்டவனிடம் அர்ப்பணிப்பவர்களே எளிதாக பிறவிப் நோயிலிருந்து விடுபட முடியும். அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் நாம் பிறரின் மனதை எந்த சூழ்நிலையிலும் வேதனை படுத்தாமல் வாழ்ந்தாலே புண்ணியப் பலன் கிடைக்கத் தான் செய்யும். இந்தக் கட்டுரையின் வாயிலாக நாம் தெரிவது என்னவென்றால், நமக்குச் சொந்தமான பொருளைத் தவிர மற்றவருடைய எந்தவித சொந்தமான பொருளையும் எங்கே, எப்படி எடுத்தாலும் நமக்கு பாவம் பின்தொடர்ந்து வரத் தான் செய்யும். நம் சந்ததியர்க்காவது நாம் நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும்.

நாளை நம் கையில். ஓம் நமச்சிவாய !!!

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

ஆன்மீகம் : சிவன் சொத்து... குல நாசம் என்னவென்று தெரியுமா? - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | spirituality : Do you know what Shiva's property is? - Spiritual Notes in Tamil [ spirituality ]



எழுது: சாமி | தேதி : 10-23-2022 08:35 am

தொடர்புடைய வகை



தொடர்புடைய தலைப்புகள்