வைகாசி மாதத்தில் என்னென்ன விஷேச நாட்கள் வருகிறது தெரியுமா...?

குறிப்புகள்

[ முருகன்: வரலாறு ]

Do you know what special days occur in the month of Vaikasi...? - Tips in Tamil

வைகாசி மாதத்தில் என்னென்ன விஷேச நாட்கள் வருகிறது தெரியுமா...? | Do you know what special days occur in the month of Vaikasi...?

வருடத்தை ஆறு காலங்களாக வகுத்த நம் முன்னோர்கள் சித்திரை, வைகாசி இரண்டு மாதங்களையும் இளவேனில் காலமாகப் பிரித்தனர். வைகாசி என்பதை விகாஸம் என்றும் கூறுவதுண்டு. விகாஸம் என்றால் மலர்ச்சி என்றும் பொருள். வைகாசியே வடமொழியில் வைஸாகம். வைணவர்கள் இம்மாதத்தை மாதவ மாதம் என்றழைப்பார்கள்.

வைகாசி மாதத்தில் என்னென்ன விஷேச நாட்கள் வருகிறது தெரியுமா...?

 

வருடத்தை ஆறு காலங்களாக வகுத்த நம் முன்னோர்கள் சித்திரை, வைகாசி இரண்டு மாதங்களையும் இளவேனில் காலமாகப் பிரித்தனர். வைகாசி என்பதை விகாஸம் என்றும் கூறுவதுண்டு. விகாஸம் என்றால் மலர்ச்சி என்றும் பொருள். வைகாசியே வடமொழியில் வைஸாகம். வைணவர்கள் இம்மாதத்தை மாதவ மாதம் என்றழைப்பார்கள்.

 

தமிழ் கடவுள் முருகன் அவதார தினம் கொண்டாடப்படுவது வைகாசி மாதம் விசாகம் நட்சத்திர நாளில்தான். நிறைந்த பௌர்ணமி நாளில் முருகன் கோவில்களில்  பால்குடங்களை எடுத்து வந்து அபிஷேகம் செய்வார்கள்.

 

முருகனது தனிப்பட்ட விழாக்களில் விசாகமும் ஐப்பசி சஷ்டியுமே மிக முக்கியமானவை. சூரபத்மன் போன்ற அசுரர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். உடனே அவர்களை காத்தருள சிவன் தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். இந்தத் தீப்பொறிகள் வாயு, அக்னி முதலிய தேவர்கள் மூலம் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கையோ அவற்றை சரவணப் பொய்கையில் சேர்த்தது. அங்கு வந்து சேர்ந்ததும் அவை வைகாசி விசாகத்தன்று ஆறு குழந்தைகளாக மாறின. கார்த்திகைப் பெண்கள் அக்குழந்தைகளை வளர்த்தனர். ஆறுமுகம் கொண்ட முருகன் தோன்றி தேவர்களைக் காத்தருளினார்.

 

வைகாசி விசாகம் நாளில் முருகனை வழிபடுவதால் நம் பகைகள் யாவும் தொலைந்து விடும் என்பர். இந்நாளில் முருகப்பெருமானுடைய அறுபடை வீடுகளிலும் மற்ற முருகன் தலங்களிலும் விசேஷமான பூஜைகளும் கோலாகலமான விழாவும் நடைபெறுகின்றன. இந்நாளில் தானமும், தர்மமும் செய்தால் நல்லது.

 

ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் மறைந்திருக்கும் அகோபிலம் நரசிங்கமூர்த்தி, வைகாசி விசாகத்தில்தான் சந்தனக் காப்பைக் களைந்து விக்கிரக உருவத்தில் காட்சி தருவார். அதன்பின் அடுத்த வைகாசி விசாகத்தில்தான் நரசிங் மூர்த்தியை முழுமையாக மீண்டும் தரிசிக்க முடியும். இந்த மாதத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்து திருமணம், வீடு கிரகப்பிரவேசம் உள்ளிட்ட பல நல்ல காரியங்களைச் செய்யலாம். திருமணம் செய்ய, சீமந்தம் செய்ய, காது குத்த நல்ல நாட்கள் உள்ளன.

 

வைகாசியில்தான் வியாசர் தங்கத்தட்டில் அவதரித்தார். இந்த மாதத்தில்தான் நம்மாழ்வார், சேக்கிழார், திருஞான சம்பந்தர், காஞ்சி மகா பெரியவர் ஆகிய மகான்களின் அவதாரம் நிகழ்ந்துள்ளது. புத்தர் அவதரித்தது வைகாசி பௌர்ணமியில்தான்.

 

தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் வெளிப்பட்டது வைகாசி மாத ஏகாதசியன்று. இறைவன் அதைக் காத்தது துவாதசியன்று. தேவர்கள் அமுதத்தை உண்டது திரயோதசி, பெளர்ணமி நாளில்தான்.

 

வைகாசியில் தானம் செய்வது மிகவும் பலனுண்டு. ஏகாதசி, துவாதசி, த்ரயோதசி, பெளர்ணமி தினங்களில் செய்யப்படும் தானத்திற்கு எண்ணற்ற பலன் கிட்டும்  என்பது ஐதீகம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

முருகன்: வரலாறு : வைகாசி மாதத்தில் என்னென்ன விஷேச நாட்கள் வருகிறது தெரியுமா...? - குறிப்புகள் [ ] | Murugan: History : Do you know what special days occur in the month of Vaikasi...? - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை





தொடர்புடைய தலைப்புகள்