வேதம் என்ன சொல்கிறது தெரியுமா?

ஓம் எனும் ஓசை பரமாத்மாவை தியானிக்க உதவுகிறது.

[ ஆன்மீக குறிப்புகள் ]

Do you know what the scriptures say? - The sound of Om helps me meditate on the Lord. in Tamil

வேதம்  என்ன சொல்கிறது தெரியுமா? | Do you know what the scriptures say?

“ஓம் க்ரதோ ஸ்மர”, “ஓம் ப்ரதிஷ்ட”, “ஓம் கம் பிரம்ம” அதாவது ஓம் எனும் “ஓங்காரத்தை நினை ஓங்காரத்தை ஆத்மாவில் நிலை நிறுத்து அந்த ஓங்காரமே எங்கும் நிறைந்த பிரம்மம்” என்று ஓங்காரத்தைப் போற்றி புகழ்கிறது. "பிரார்த்தனையும் "ஓம்" என்ற சொல்லின் ஓசையும் எயிட்ஸ் மற்றும் இரத்தசோகை போன்ற நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய சாதனமாக இருக்கிறது" என்கிறார் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், போஸ்டனில் உள்ள டேகானே மருத்துவமனையில் மூளை மற்றும் உடல் சம்பந்தமான ஸ்தாபனத்தின் நிறுவனருமான டாக்டர் பேன்ஸன். ஓம் எனும் ஓசை பரமாத்மாவை தியானிக்க உதவுகிறது. வேதம், உபநிஷத், பகவத் கீதை, இராமாயணம், மஹாபாரதம், ஸ்மிருதி போன்ற நூல்கள் இறைவனை தியானிக்க "ஓம்" என்ற பிரணவ நாமத்தை உச்சரிக்க சொல்லியிருக்கிறது.

வேதம்  என்ன சொல்கிறது தெரியுமா?

 

ஓம் க்ரதோ ஸ்மர”,

 “ஓம் ப்ரதிஷ்ட”,

ஓம் கம் பிரம்ம”

 

அதாவது ஓம் எனும்

 

ஓங்காரத்தை நினை

ஓங்காரத்தை ஆத்மாவில் நிலை நிறுத்து

அந்த ஓங்காரமே எங்கும் நிறைந்த பிரம்மம்”

 

என்று ஓங்காரத்தைப் போற்றி புகழ்கிறது.

 

 "பிரார்த்தனையும் "ஓம்" என்ற சொல்லின் ஓசையும் எயிட்ஸ் மற்றும் இரத்தசோகை போன்ற நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய சாதனமாக இருக்கிறது"  என்கிறார்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், போஸ்டனில் உள்ள டேகானே மருத்துவமனையில் மூளை மற்றும் உடல் சம்பந்தமான

ஸ்தாபனத்தின் நிறுவனருமான டாக்டர் பேன்ஸன்.

 

ஓம் எனும் ஓசை பரமாத்மாவை தியானிக்க உதவுகிறது.

 

வேதம், உபநிஷத், பகவத் கீதை, இராமாயணம், மஹாபாரதம், ஸ்மிருதி போன்ற நூல்கள் இறைவனை தியானிக்க "ஓம்" என்ற பிரணவ நாமத்தை உச்சரிக்க சொல்லியிருக்கிறது.

 

வால்மீகி மூல  இராமாயணத்தில் இராமபிரான் காலையில் எழுந்து ஓங்காரத்தை உபாசனை செய்தார் என்று சொல்லியிருக்கிறது .

 

 ரிஷி,முனிகளும் ஓம், அத என்று சொல்லிதான் நூல்களை ஆரம்பித்தனர்.

 

பௌராணிகர்களும் தங்கள் இஷ்ட தெய்வத்தை அழைக்கும் போதும் "ஓம் நம: சிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் பகவதயே நம:, ஓம் கணேசாய நம:, ஓம் சரவண பவ" என்று தான் ஆரம்பிக்கின்றனர்.

 

மேலும் தந்த்ர நூல்களும் "ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம்" என்றே  தொடங்குகின்றன.

 

''ஓங்காரம் இசைக்கவும், உபாசிக்கவும், பற்றக்கூடியதும், இலயிக்கக் கூடியதும் என கூறுகிறது." பக்தி செய்ய எல்லாவற்றையும் விட அழகிய சாதனம் ஓங்காரமாகும்.

 

 கோபத பிராஹ்மணத்தில் கூறப்படுகிறது -

 

"ஆத்மபேஷஜ்யம் ஆத்ம கைவல்யம் ஓங்காரஹ:" அதாவது ஓங்காரமானது ஆத்மாவை சிகிச்சை செய்வதும், ஆத்மாவிற்கு முக்திக்கான

வழிகாட்டுவதுமாகும் என்று. மேலும் "அம்ருதம் வை ப்ரணவ:" என்கிறது கோபதம்.  அதாவது ஓம் அது அம்ருதம் - அமுதமாகும்

 

சதபத பிராஹ்மணத்தில் யாக்ஞ்யவல்கியர் கூறுகிறார்:-

 

ஓங்காரம் மங்களமானது, பவித்ரமானது, தர்ம காரிய ரூபமான செயல்களின் மூலம் எல்லா விருப்பங்களையும் சித்திக்க வைப்பது என்று புகழ்கிறார்.

 

 யோக தர்சனத்தில்

 

"தஸ்ய வாசக ப்ரணவ:" என்று கூறப்பட்டுள்ளது.  அதாவது அவனுடைய நாமம் பிரணவம் என்று பதஞ்சலி முனிவர் கூறுகிறார்.

 

முண்டகோபனிஷத் கூறுகிறது ஆத்மாவின் தியானம் ஓங்காரத்தாலேயே நடக்கிறது என்று.

 

கடோபனிஷத் எந்த பதத்தை வேதங்கள் போற்றுகிறதோ, எல்லா தவங்களிலும் மேன்மையான தவமானதோ, புலனடக்கத்தை தரவல்லதோ, பிரம்மத்தின் மீது வேட்கையை உண்டாக்க வல்லதோ, மரணத்தை வெல்ல வல்லதோ,அந்த பதம் ஓங்காரமாகும் என்று யமராஜா நசிகேதனிடம் சொல்கிறார்.

 

தைத்திரிய உபநிஷத்

 

"ஓம் இதி ப்ரஹ்ம", "ஓம் இதி இதம் ஸர்வம்" அதாவது ஓங்காரமே பிரம்மம்,

 

அந்த முடிவற்ற ஓங்காரத்தினுள்ளே எல்லாம் அடக்கம் என்று சிறப்பிக்கிறது.

 

அக்னி புராணம்

 

ஓங்காரத்தை நன்கறிந்து உணர்ந்தவனே யோகி, அவனே துக்கத்தை வென்றவன் என்கிறது.

 

காமதேனு¸ கல்ப்பதரு¸ சிந்த்தாமணி இவை மூன்றும் ஸ்வர்க்க லோகத்தில் இருக்கக்கூடியது. ஸ்வர்க்கத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே தாம் கேட்டதை கொடுக்கும் திறன் கொண்டது. அநித்யமான¸ சுகங்களை ஸ்வர்க்க லோகத்தில் இருக்கும் வரையிலும் மட்டுமே அடையலாம். ஆனால் ஸ்ரீ முகுந்தனின் பரம பவித்ரமான நாமமானது 14 உலகில் உள்ளவர்களுக்கு சதுர்வித புருஷார்த்தமான தர்மம்¸ அர்ததம்¸ காமம்¸ மோக்ஷம் கொடுக்கக் கூடியது.

 

ஓர் காலத்தில் நாரதர் நரகப்ரவேஸம் செய்து அங்குள்ள நரக வாசிகள் படும் கஷ்டத்தைப் பார்த்து துயரத்தினால் "நாராயணா" என்று உரக்கச் சொல்ல அந்த நாமத்தை காதில் கேட்ட அனைவரும் பாபம் நீங்கி விமானம் ஏறி ஸ்வர்க்கம் சென்றனர். சாதாரண பாமரர்களும் பக்தியினால் பகவன் நாமம் சொல்ல¸ அவர்களை பண்டிதனாக்கி அவர்களுக்கு புருஷார்த்தங்களைக் கொடுக்கும்.

 மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

ஆன்மீக குறிப்புகள் : வேதம் என்ன சொல்கிறது தெரியுமா? - ஓம் எனும் ஓசை பரமாத்மாவை தியானிக்க உதவுகிறது. [ ] | Spiritual Notes : Do you know what the scriptures say? - The sound of Om helps me meditate on the Lord. in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்