முப்பாட்ட கடவுள் முருகா என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

குறிப்புகள்

[ முருகன்: வரலாறு ]

Do you know what the triple god Muruga means? - Tips in Tamil

முப்பாட்ட கடவுள் முருகா என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? | Do you know what the triple god Muruga means?

தாயினும் மிக்க தயவுடைய முருகப்பெருமான் திருவடியை வணங்கி வணங்கி ஆசிபெற்று முருகனது அருளை பெற வேண்டுமாயின் கடைபிடிக்க வேண்டியவை.

முப்பாட்ட கடவுள் முருகா என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

 

பசி நோய், காம நோய், கோப நோய், பொறாமை நோய், முதுமை நோய், ஈளை இருமல் நோய், நிலையில்லாத உடம்பை நிலையென்று நம்புகின்ற நோய், நிலையற்ற பொருளை நிலையானதென்று நம்புகின்ற நோய் இன்னும் அநேகம் அநேகம் நோய்களையெல்லாம் நீக்கி, நோய்க்கு காரணம் உணர்த்தி நமக்கு முருகனே குருவாய் நம்முள் அமர்ந்து நோய் நீக்கி, நோய் வரும் வழி நீக்கி தூய்மைப்படுத்தி ஞானம் அருளி மரணமிலாப் பெருவாழ்வையும் அருளி காத்து நம்மை கடைத்தேற்றி அருள்வான் முருகன்.

 

தாயினும் மிக்க தயவுடைய முருகப்பெருமான் திருவடியை வணங்கி வணங்கி ஆசிபெற்று முருகனது அருளை பெற வேண்டுமாயின் கடைபிடிக்க வேண்டியவை.

 

தினம் தினம் தவறாமல் காலை மாலை இருவேளையும் முடிந்தால் இரவு 12 மணிக்கு ஒருமுறையும் “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்று 108 முறையும் “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி! போற்றி!!” என்று 108 முறையும் மந்திரஜெபம் செய்து மந்திர உரு ஏற்றி வரவர மந்திர உருவின் பலத்தினாலே முருகன் அருள் நம்முள் பெருகத் தொடங்கும்.

 

முருகனை மனம் உருகி மந்திர ஜெபம் செய்தால் மட்டும் போதாது. ஜீவகாருண்ய தலைவனான முருகனது அருளை முழுமையாக பெற வேண்டுமாயின், அவர்கள் முதன் முதலில் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சைவ உணவினை மேற்கொண்டு எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாத தூய மனத்தினை பெற வேண்டும். முருகனது அருளை விரைந்து பெற்று கடைத்தேற வேண்டுமாயின் ஜீவர்களுக்கு செய்கின்ற மிக உயர்ந்த உபகாரமான பசிப்பிணி போக்குதல்தனை செய்திட வேண்டும். மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து தான தருமங்களை எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு செய்ய செய்ய அவர்கள் செய்கின்ற தானதருமத்தின் அளவிற்கேற்ப அவர்களது முன்னேற்றமும் விரைந்து அமையும்.

 

எந்த அளவிற்கு பிற உயிர்களுக்கு கொடுத்து கொடுத்து உபகாரம் செய்து பிற உயிர்களை மகிழ்விக்கின்றாயோ அந்த அளவிற்கு அந்த உயிர்கள் மகிழும். எந்த அளவிற்கு உங்களால் பிற உயிர்கள் மகிழ்கின்றதோ அந்த உயிர்களின் மகிழ்வு உங்களுக்கு ஆசிகளாய் மாறி ஜீவகாருண்ய தலைவனான முருகனை மகிழ்விக்கும். எந்த அளவிற்கு முருகப்பெருமான் மனம் மகிழ்கின்றானோ அந்த அளவிற்கு உங்களுக்கு முருகப்பெருமானின் திருவடி நெருக்கத்தை உண்டுபண்ணும்.

 

முருகா! முருகா! முருகா! என்போம் முத்தியும் சித்தியும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வோம்.✍🏼🌹


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

முருகன்: வரலாறு : முப்பாட்ட கடவுள் முருகா என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? - குறிப்புகள் [ ] | Murugan: History : Do you know what the triple god Muruga means? - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை





தொடர்புடைய தலைப்புகள்