நம் எல்லோருக்குமே வாழ்வில் ஒரு லட்சியம் இருக்கும். அதை அடைவதற்காக கடினமாக உழைக்கவும் செய்வோம். இருப்பினும், அந்த இலக்கை அடைய தாமதம் ஏற்படக்கூடும். அது ஏன் என்று புரியாமல் இருக்கிறீர்களா? நம்முடைய லட்சியத்தை அடைய உழைப்பு மட்டுமே போதுமானாதா? அதையும் தாண்டி எது தேவை என்பது புரிந்துக்கொள்ள இந்த கதையை முழுமையாக படியுங்கள்.
இலக்கை அடைவதற்கு நமக்கு என்ன தேவை தெரியுமா?
நம் எல்லோருக்குமே வாழ்வில் ஒரு லட்சியம் இருக்கும்.
அதை அடைவதற்காக கடினமாக உழைக்கவும் செய்வோம். இருப்பினும், அந்த இலக்கை அடைய தாமதம் ஏற்படக்கூடும். அது ஏன் என்று புரியாமல் இருக்கிறீர்களா? நம்முடைய லட்சியத்தை அடைய உழைப்பு மட்டுமே போதுமானாதா? அதையும் தாண்டி எது தேவை என்பது புரிந்துக்கொள்ள இந்த கதையை முழுமையாக படியுங்கள்.
ஒரு பெரிய அரண்மனையில் வெகு நாட்களாகவே ஒரு எலி
பயங்கரமாக தொல்லைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதை பிடிப்பதற்காகவே அரண்மனையில் ஒரு
பூனையை வளர்த்தார்கள். எவ்வளவு தான் அந்த பூனை எலியை பிடிக்க முயற்சித்தும் அதனால்
அந்த எலியை நெருங்கக்கூட முடியவில்லை.
அந்த எலியின் தொல்லை தாங்க முடியாமல் வெளிநாட்டிலிருந்து
நிறைய பூனைகளை அந்த எலியை பிடிப்பதற்காகவே வாங்கி வருகிறார்கள். அந்த அரண்மனைக்கு பல
நாடுகளிலிருந்து பூனைகள் வருகிறது. ஆனால், எந்த நாட்டு பூனையாலும் அந்த எலியை பிடிக்கவே முடியவில்லை.
இதை பார்த்த காவலாளி ஒருவர் தன்னுடைய பூனையை கொண்டு
வந்து விடுகிறார். காவலாளியுடைய பூனை வந்த சிறிது நேரத்திலேயே அந்த எலியைப் பிடித்து
விட்டது. அதை பார்த்த அனைவருக்குமே பயங்கர அதிர்ச்சி. அங்கிருந்த மக்கள் அந்த காவலாளியிடம்
பல கேள்விகள் கேட்கிறார்கள்.
உன்னுடைய பூனைக்கு என்ன பயிற்சி கொடுக்கிறாய்? என்ன உணவு கொடுக்கிறாய்? போன்ற பல கேள்விகளை கேட்கிறார்கள். அதற்கு அந்த
காவலாளி சொல்கிறார், ‘என்னுடைய பூனைக்கு பெரிய பயிற்சியோ அல்லது திறமையோ
எதுவுமில்லை. அது பயங்கர பசியில் இருந்தது அவ்வளவுதான்’ என்று சொன்னாராம்.
அரண்மனையில் இருக்கும் பூனையும், வெளிநாட்டிலிருந்து வந்த பூனைகளும் நன்றாக சாப்பிட்டு கொழுத்து இருந்ததால், இந்த எலியை பிடித்துதான் தன்னுடைய பசியாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. அதனால்தான்
அந்த பூனைகளால் அந்த எலியை பிடிக்க முடியவில்லை.
இதேமாதிரிதான் உங்களுடைய வாழ்க்கையில் உங்களுடைய
லட்சியத்தை அடைய வேண்டும் என்று நினைத்தீர்களானால், உங்களிடம் அதற்கான தேவையிருக்க வேண்டும், பசி வேண்டும், வைராக்கியம் வேண்டும், வெறி இருக்க வேண்டும். அப்போது தான் அந்த லட்சியத்தை அடைந்து அதில் வெற்றியும் பெற முடியும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
தன்னம்பிக்கை : இலக்கை அடைவதற்கு நமக்கு என்ன தேவை தெரியுமா - குறிப்புகள் [ ] | self confidence : Do you know what we need to achieve the goal - Notes in Tamil [ ]