‘‘யார் அவர், சித்திர குப்தர்?'' ‘‘அவரை சித்திர புத்திரன்னும் சொல்வாங்க. நம்மளோட பாவ புண்ணியக் கணக்குகளைக் குறிச்சு வெச்சுக்கிட்டு, அதுக்கேத்தா மாதிரி நமக்கு நல்ல பலன்களையும் கெட்ட பலன்களையும் தருவதற்கு யமனுக்கு சிபாரிசு பண்ற அவரோட அஸிஸ்டென்ட்.''
சித்திர குப்தருக்கு ஒரு சிங்காரக் கோவில் - எங்கே
உள்ளது தெரியுமா?
‘‘யார் அவர், சித்திர குப்தர்?''
‘‘அவரை சித்திர புத்திரன்னும் சொல்வாங்க. நம்மளோட பாவ புண்ணியக் கணக்குகளைக் குறிச்சு
வெச்சுக்கிட்டு, அதுக்கேத்தா மாதிரி நமக்கு நல்ல பலன்களையும் கெட்ட
பலன்களையும் தருவதற்கு யமனுக்கு சிபாரிசு பண்ற அவரோட அஸிஸ்டென்ட்.''
‘‘இவரைப் பத்திய
விவரம் என்ன?''
‘‘கயிலாயத்திலே கணக்கு வழக்கு பார்க்க ஒரு ஆள் தேவைப்பட்டது. குறிப்பாக மக்களோட பாவ
புண்ணிய கணக்கைப் பராமரிக்க ஒருத்தர் வேணும். யாரைப் போடலாம்னு யோசிச்சாங்க. இந்தக்
கயிலாயத்திலேயும் சரி, பொதுவா தேவலோகத்திலேயும் சரி, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலையைப் பார்த்துக்கிட்டிருக்காங்க. அதனால, இந்தப் பொறுப்பை யார் தலையிலேயும் கட்ட முடியாது. புதுசாகத்தான் ஒருத்தரை நியமிக்கணும்னு
சிவன் யோசிச்சார். 'புதுசா யாரைப் போடுவீங்க?' ன்னு பார்வதி கேட்டா. ‘அதுக்கென்ன, புதுசா ஒருத்தரைப் படைச்சுட்டாப் போச்சு’ன்னு பதில் சொன்னார் சிவன்...''
‘‘ஆமாம், அசுரர்களை சம்ஹாரம் பண்ண கடவுள் புதுசு புதுசா
அவதாரம் எடுக்கறதில்லையா, புதுசு புதுசா மகான்களை சிருஷ்டிக்கறதில்லையா, அதுமாதிரி மக்களோட இந்த சேவைக்கும் புதுசா ஒருத்தரை உண்டாக்கறதிலே என்ன தப்பு?''
‘‘கரெக்ட். இப்படி யோசிச்சபோது, பார்வதி ஒரு பலகையை எடுத்து, அதிலே அழகான ஒரு பையனோட படத்தை வரைஞ்சா. அதைப் பார்த்து மகிழ்ந்துபோன சிவன் உடனே
அந்த சித்திரத்துக்கு உயிர் கொடுத்தார்.''
‘‘ஒஹோ, இந்தச் சித்திரப் பையன்தான் சித்திர புத்திரனா?''
‘‘ஆமாம், அவன்தான் சித்திர புத்திரன். இவன் கயிலாயத்திலேயே
இருந்தபடி, எல்லா உலகத்தவர்களின் பாவ-புண்ணியக் கணக்குகளையெல்லாம்
முறையாகத் தொகுக்க ஆரம்பிச்சான். நல்ல அக்கவுண்டன்ட் அவன். யாருடைய பாவத்தையும் விட்டுடாம
கணக்கிலே எடுத்துகிட்டான்.''
‘‘அட பரவாயில்லையே! இப்ப கம்ப்யூட்டர் வெச்சுக்கிட்டே தடுமாறுகிறோமே... அப்ப எப்படி
துல்லியமா கணக்கு வெச்சுக்க முடிஞ்சுது?''
‘‘அதுதான் கடவுள் சிருஷ்டிங்கறது! ஆச்சா, இந்த சித்திர புத்திரன் இப்படி மைக்ரோசாஃப்ட் லெவல்ல வேலை செய்துகிட்டிருக்கும்போது, தேவர்களின் தலைவனான இந்திரனுக்கும் அவன் மனைவி இந்திராணிக்கும் மனசுக்குள்ளே தங்களுக்கு
ஒரு குழந்தையில்லையேங்கற குறை இருந்தது.‘'
‘‘சரிதான் இந்திரனுக்கே இப்படி ஒரு குறையா? ஏன் இப்படி?''
‘‘அது அகலிகையால அவனுக்கு ஏற்பட்ட சாபம். புத்தி பேதலிச்சுப்போய், கௌதம முனிவரோட மனைவின்னு தெரிஞ்சும் அவகிட்ட தப்பா பழக நினைச்சான் இந்திரன். உடனே
தர்ம பத்தினியான அவ, அவனுக்குப் பிள்ளையே பிறக்கக் கூடாதுன்னு சாபம்
கொடுத்திட்டா. சரியா? இந்திரனும் அவன் மனைவி இந்திராணியும் சிவபெருமானை
நோக்கிக் கடுமையா தவம் இருந்தாங்க. இவங்களுக்கு ஏதாவது நன்மை செய்யணும்னு சிவனும் ஆசைப்பட்டார்.
ஆனா, இந்திரனுக்கு அகலிகை கொடுத்த சாபத்தை மாத்தறதுக்குத்
தனக்கு அதிகாரம் கிடையாதுங்கறதையும் புரிஞ்சுகிட்ட அவர், அதுக்கு மாற்று வழி என்னன்னு யோசிக்க ஆரம்பிச்சார்...''
‘‘அப்போ சித்திர புத்திரனையே இந்திரனுக்கு மகனாக்கிடறதுன்னு தீர்மானிச்சார். உடனே
சித்திர புத்திரன்கிட்ட போய், ‘உனக்குப் புது ஜன்மம் ஒண்ணு காத்துக்கிட்டிருக்கு,‘ன்னார். ‘நான் என்ன பண்ணனும்?'னு கேட்டான் சித்திர புத்திரன். இந்திரனோட அரண்மனையிலே
காமதேனு இருந்தது. அந்தப் பசுவோட கர்ப்பத்திலே ஒரு கருவாக சித்திர புத்திரனைப் புகுந்துக்கச்
சொன்னார் சிவபெருமான். அந்தப் பசுவுக்குக் குழந்தையாகப் பிறந்து, இந்திரனுடைய ஏக்கத்தைத் தீர்த்து வைக்கும்படியும், சிறிது காலம் அப்படி வாழ்ந்துவிட்டு, அப்புறமாக கயிலாயத்துக்குத் திரும்பலாம்னும் சொன்னார் ஈசன். இதை இந்திரன் தம்பதிக்கும்
விளக்கினார். அவங்களும் தமக்கு எப்படியாவது ஒரு குழந்தை கிடைச்சா போதும்ங்கற ஏக்கத்தோட
இருந்ததால அதுக்கு சம்மதிச்சாங்க.''
‘‘சரி, அப்புறம்?''
‘‘எம்பெருமான் தீர்மானிச்சபடியே, காமதேனு கர்ப்பத்திலே முணே முக்கால் நாழிகை கருவாக உருவாகி, அப்புறம் குழந்தையாகப் பிறந்தான் சித்திர புத்திரன். அதுவும் எப்படி? கையிலே ஏடு, எழுத்தாணியோட! அதாவது தன் கணக்குப்பிள்ளை பதவியை
மறக்காதபடி!''
"அட, பரவாயில்லையே!"
‘‘சித்திர புத்திரன் சித்திரை மாசத்திலே, சித்திரை நட்சத்திரத்திலே, சித்திரா பவுர்ணமி அன்னிக்கு பிறந்ததனால அவனுக்கு
சித்திரா புத்திரன்னு பேர் வெச்சு இந்திரனும், அவன் மனைவி இந்திராணியும் சந்தோஷப்பட்டாங்க. ஆனா, இந்தப் பிள்ளை வளர வளர, அவனுக்குத் தன்னோட முந்தைய பிறவி ஞாபகமெல்லாம்
வர ஆரம்பிச்சுடுச்சு. அதனால தான் யாரையெல்லாம் பார்க்கிறானோ, அவங்களோட பாப, புண்ணிய கணக்கையெல்லாம் அப்படியே எடுத்துப் புட்டுப்
புட்டு வைக்க ஆரம்பிச்சான். இந்திரனுக்கோ பெருமை பிடிபடலே. தனக்கு மகனாக வாய்ச்சவன்தான்
எவ்வளவு தீர்க்கதரிசியாக இருக்கான்னு நினைச்சு மகிழ்ந்தான். கூடவே அவனுக்கு இன்னொரு
எண்ணமும் வந்தது. அதாவது இவனை தன்னோட ஆணைக்குட்பட்டு
மக்களோட இறுதியை, அவரவர் விதிப்படி, முடிவு செய்யற யமன்கிட்ட வேலைக்கு அனுப்பிச்சா என்னன்னு யோசிச்சான்.
அதை சித்திர குப்தன்கிட்ட சொன்னபோது அவன் ஏத்துக்கலே.
உடனே இந்திரன் சிவனோட உதவியை நாடினான். அவரும், ‘அப்படின்னா சரி. இனிமேல் உன்னோட தளபதி யமனோட உதவியாளனாக இவன் இருக்கட்டும்னு ஆசிர்வாதம்
பண்ணி அனுப்பி வெச்சார்; மனுஷாளோட பாவ, புண்ணிய கணக்குகளை வெச்சு, அவங்களுக்கு எப்படிப்பட்ட நன்மைகள் அல்லது தண்டனைகள்
கொடுக்கலாம்னு யமனுக்கு யோசனை சொல்ற அந்தஸ்தையும் கொடுத்தார். அதோட, இப்படிப்பட்ட அதிகாரம் இருக்கற சித்திர புத்திரனை யார் விரதமிருந்து வணங்கறாங்களோ
அவங்களுக்கு பாவ அக்கவுண்டிலே சுமை ஏறாதபடி அவன் பார்த்துப்பான்னும் விதி செய்தார்.
அதனால சித்ரா பவுர்ணமி அன்னிக்கு சித்திர குப்தனை விரதமிருந்து வணங்கி வழிபட்டால், பாவச் சுமை குறையும். புண்ணிய பலம் கூடும்; இனிமேல் பாவமே பண்ணாதபடி மனப்பக்குவமும் ஏற்படும்னும் சொல்லி வெச்சார். எது முடிஞ்சாலும், முடியாவிட்டாலும் சித்திர குப்தன் காயத்ரி மந்திரத்தையாவது அன்னிக்கு பூரா சொல்லிகிட்டிருக்கறது
நல்லதுன்னு பெரியவங்க சொல்வாங்க.''
‘‘சித்ரா பௌர்ணமி அன்னிக்குதான் சித்ர குப்தனை வழிபடணுமா?‘‘
‘‘அன்னிக்கு ரொம்ப விசேஷம்; மிச்ச பௌர்ணமி நாட்களிலும் வழிபடலாம்.‘‘
‘அந்த சித்திர
குப்தனுக்கு காஞ்சிபுரத்திலே கோவில் இருக்கு. மூலவராக, இடது கையில் ஏடு, வலது கையில் எழுத்தாணி வைத்துக்கொண்டு அமர்ந்த
கோலத்தில் காட்சி தர்ரார். கோவில் பிராகாரத்ல ஒரு பிரமாண்ட கண்ணாடி பேழைக்குள் அவருடைய
சுதை சிற்பம் ஒண்ணும் இருக்கு. இந்தப் பேழைக்கு முன்னால் தரையில் நிறைய பக்தர்கள் விளக்கு
ஏற்றி வெச்சிருக்காங்க.‘‘
கேதுவின் அதிதேவதையாக விளங்கும் சித்திர புத்திரனின்
இந்தக் கோவில்ல விநாயகர், விஷ்ணுதுர்க்கை, ஐயப்பன் மற்றும் நவகிரகங்களுக்கு தனித்தனி சந்நிதிகள் இருக்கு. உற்சவர் சித்திர
குப்தன், தன் மனைவி கர்ணகி தேவியோட இருக்கார். இது தவிர, ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளையும் செதுக்கி
வெச்சிருக்காங்க.‘‘
‘ஓ, சித்திர குப்தர்தான் மூலவரா?‘‘
‘‘ஆமாம். இவரை வேண்டிகிட்டு விரதம் இருக்க வேண்டிய முறைகளையெல்லாம் அந்தக் கோவில்ல
பக்கத்துக்குப் பக்கம் எழுதி வெச்சிருக்காங்க..‘‘
இந்தக் கோவில் ‘‘அருள்மிகு சித்ரகுப்த
சுவாமி திருக்கோவில், 74, நெல்லுக்காரன் தெரு, காஞ்சிபுரம்
- 631501.
சித்திர புத்திரனின் காயத்ரி மந்திரம்
‘‘ஓம் தத்புருஷாய வித்மஹே
சித்ரகுப்தாய தீமஹி
தந்நோ லோகப் பிரசோதயாத்’’
பொதுப் பொருள்: ‘‘உத்தமப் புருஷனாக விளங்கும்
சித்ரகுப்த பகவானே, நமஸ்காரம். பூமியில் வசிக்கும் மக்களின் புண்ணிய
பாவ கணக்குகளுக்கு சாட்சியாக விளங்கும் தேவனே நமஸ்காரம்.’’
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : சித்திர குப்தருக்கு ஒரு சிங்காரக் கோவில் - எங்கே உள்ளது தெரியுமா - குறிப்புகள் [ ] | Spiritual Notes: Temples : Do you know where there is a Singha Temple for Chitra Gupta - Notes in Tamil [ ]