நம் தலையெழுத்தையே மாற்றக்கூடிய கோவில் எங்கிருக்கிறது தெரியுமா

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் ]

Do you know where there is a temple where we can change our signature - Notes in Tamil

நம் தலையெழுத்தையே மாற்றக்கூடிய கோவில் எங்கிருக்கிறது தெரியுமா | Do you know where there is a temple where we can change our signature

நம் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தலையெழுத்தே காரணம் என்று சொல்லி புலம்புவோரை கண்டிருப்போம். ‘தலையில் எழுதியது தான் நடக்கும்’ என்று சொல்வதுண்டு. ஆனால் அத்தகைய தலையில் எழுதப்பட்ட விதியையே மாற்றக்கூடிய கோவில் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? அத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலை பற்றி தான் இந்த பதிவில் காண உள்ளோம். சென்னையிலிருந்து திருச்சி போகும் போது திருச்சியிலிருந்து 25 கிலோ மீட்டர் முன்பாகவே திருப்பட்டூர் என்ற கிராமம் உள்ளது. அங்கேதான் இந்த பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு செல்வதற்கு விதியிருந்தால் மட்டுமே போக முடியுமாம். ஒருமுறை சென்றுவிட்டால் மறுபடி மறுபடி செல்ல வாய்ப்பு கிட்டுமாம். படைப்பு தொழிலை செய்து வந்த பிரம்மனுக்கு ஐந்து தலைகள் இருந்தது. மும்மூர்த்திகளில் ஒருவராக இருந்தவருக்கு கர்வம் வந்தது. பிரம்மனின் இந்த கர்வத்தை போக்க நினைத்த சிவபெருமான் அவரின் ஐந்தாவது தலையை வெட்டி எடுத்தது மட்டுமில்லாமல் ‘படைக்கும் தொழிலையும் இழக்க கடவாய்’ என்று சபித்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரம்மன் சிவனிடமே சாபவிமோஷனம் வேண்டினார். அதற்கு சிவனும் தேசம் முழுவதும் இருக்கும் சிவன் கோவில்களுக்கு சென்று வழிப்பட்டு வரவும். தக்க நேரம் வரும்போது நானே சாப விமோஷனம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். அப்படி தேசம் முழுவதும் சுற்றி வந்த பிரம்மன் கடைசியாக திருப்பட்டூர் வந்து சிவனை தரிசிக்க அவருக்கு சாபவிமோஷனம் கொடுத்து படைக்கும் தொழிலையும் திரும்ப வழங்கினார். இதனால் பிரம்மனால் வழிப்பட்டு சாப விமோர்ஷனம் பெற்றதால் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் பெற்றது. படைக்கும் தொழில் மட்டுமில்லாமல் இங்கு வந்து வணங்கினால், அவரின் தகுதிக்கு ஏற்ப தலையெழுத்தையே மாற்றி எழுதலாம் என்று சிவபெருமான் வரமளித்தார்.

நம் தலையெழுத்தையே மாற்றக்கூடிய கோவில் எங்கிருக்கிறது தெரியுமா?

 

நம் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தலையெழுத்தே காரணம் என்று சொல்லி புலம்புவோரை கண்டிருப்போம். ‘தலையில் எழுதியது தான் நடக்கும்’ என்று சொல்வதுண்டு.

 

ஆனால் அத்தகைய தலையில் எழுதப்பட்ட விதியையே மாற்றக்கூடிய கோவில் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? அத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலை பற்றி தான் இந்த பதிவில் காண உள்ளோம்.

 

சென்னையிலிருந்து திருச்சி போகும் போது திருச்சியிலிருந்து  25 கிலோ மீட்டர் முன்பாகவே திருப்பட்டூர் என்ற கிராமம் உள்ளது.

 

அங்கேதான் இந்த பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு செல்வதற்கு விதியிருந்தால் மட்டுமே போக முடியுமாம்.

 

ஒருமுறை சென்றுவிட்டால் மறுபடி மறுபடி செல்ல வாய்ப்பு கிட்டுமாம்.

 

படைப்பு தொழிலை செய்து வந்த பிரம்மனுக்கு ஐந்து தலைகள் இருந்தது. மும்மூர்த்திகளில் ஒருவராக இருந்தவருக்கு கர்வம் வந்தது.

 

பிரம்மனின் இந்த கர்வத்தை போக்க நினைத்த சிவபெருமான் அவரின் ஐந்தாவது தலையை வெட்டி எடுத்தது மட்டுமில்லாமல் ‘படைக்கும் தொழிலையும் இழக்க கடவாய்’ என்று சபித்து விட்டார்.

 

இதனால்  அதிர்ச்சியடைந்த பிரம்மன் சிவனிடமே சாபவிமோஷனம் வேண்டினார். அதற்கு சிவனும் தேசம் முழுவதும் இருக்கும் சிவன் கோவில்களுக்கு சென்று வழிப்பட்டு வரவும்.

 

தக்க நேரம் வரும்போது நானே சாப விமோஷனம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். அப்படி தேசம் முழுவதும் சுற்றி வந்த பிரம்மன் கடைசியாக திருப்பட்டூர் வந்து சிவனை தரிசிக்க அவருக்கு சாபவிமோஷனம் கொடுத்து படைக்கும் தொழிலையும் திரும்ப வழங்கினார்.

 

இதனால் பிரம்மனால் வழிப்பட்டு சாப விமோர்ஷனம் பெற்றதால் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் பெற்றது.

 

படைக்கும் தொழில் மட்டுமில்லாமல் இங்கு வந்து வணங்கினால், அவரின் தகுதிக்கு ஏற்ப தலையெழுத்தையே மாற்றி எழுதலாம் என்று சிவபெருமான்  வரமளித்தார்.

 

அதனால் இக்கோவிலுக்கு சென்று ஜாதகத்தை வைத்து வழிப்பட்டால் நம் தலையெழுத்தே மாறும் என்று சொல்லப்படுகிறது.

 

எல்லாவற்றையும் இழந்தவர்கள் மீண்டும் இழந்தவற்றை பெறுவதற்கு இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்லலாம்.

 

இங்கேயிருக்கும் பிரம்மன் சன்னதியில் ஜாதகத்தை கொடுத்து வேண்டி உங்கள் தலையெழுத்தை மாற்றிக்கொள்ளவும்.

 

இங்கே பிரசாதமாக மஞ்சள் கொடுக்கப்படுகிறது. இந்த கோவிலில் பதாஞ்சலி முனிவரின் ஜீவசமாதி அமைந்துள்ளது.

 

இங்கு அமைதியாக அமர்ந்து தியானித்தால் அந்த அதிர்வலைகளை உணர முடியும். இந்த கோவிலில் உள்ள காலபைரவரின் விபூதி எப்பேர்ப்பட்ட வியாதியையும் குணப்படுத்தும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை.

 

இங்குள்ள கைலாசநாதர் கோவில் கல்தேர் வடிவில் அமைந்துள்ளது. அதன் எதிரிலே ஒரே கல்லால் ஆன நந்தி ஒன்று உள்ளது. இதை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

 

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலை வாழ்வில் ஒருமுறையாவது வந்து தரிசித்துவிட்டு செல்வது சிறப்பாகும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : நம் தலையெழுத்தையே மாற்றக்கூடிய கோவில் எங்கிருக்கிறது தெரியுமா - குறிப்புகள் [ ] | Spiritual Notes: Temples : Do you know where there is a temple where we can change our signature - Notes in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்