திருமண தடை உள்ள ஆண்கள் செல்ல வேண்டிய கோவில் எது தெரியுமா?

குறிப்புகள்

[ பொது தகவல்கள்: அறிமுகம் ]

Do you know which temple should be visited by barred men? - Tips in Tamil

திருமண தடை உள்ள ஆண்கள் செல்ல வேண்டிய கோவில் எது தெரியுமா? | Do you know which temple should be visited by barred men?

பல இடங்களில் பெண்ணைக் கேட்டு இளைஞர்களின் திருமண வாய்ப்புகள் தள்ளிப் போகின்றதா ?? வழிபாடு செய்ய இருக்கிறது ஒரு திருத்தலம்!

திருமண தடை உள்ள ஆண்கள் செல்ல வேண்டிய கோவில் எது தெரியுமா?

 

பல இடங்களில் பெண்ணைக் கேட்டு இளைஞர்களின் திருமண வாய்ப்புகள் தள்ளிப் போகின்றதா ?? வழிபாடு செய்ய இருக்கிறது ஒரு திருத்தலம்!

 

ஒரு ஊரில் இருந்த குடியானவருக்கு மூன்று மகள்கள்!

 

அவரின் சகோதரியும், சகோதரியின் கணவரும் இறந்த காரணத்தால், அவர்களின் மகனை தன்னோடு வைத்து கொண்டு தன்னிடம் இருந்த

விவசாய பூமியில் பாடுபட்டார்!

 

அந்த இளைஞர், அதாங்க அவரின் அக்கா மகனுக்கு இந்தக் குடியானவர் எந்தவொரு கூலியும் கொடுப்பது இல்லை!!!!

 

மாப்பிள்ளை, உனக்கென்று மூன்று முறைப்பெண்கள் இருக்கிறார்கள் அவர்களில் ஒருத்தியை உனக்கு கட்டி வைக்கிறேன்” என்று உறுதி மொழி கொடுத்து வேலை வாங்கினார்.

 

அந்த இளைஞனும் கடுமையாகப் பாடுபட்டார்.

 

முதல் பெண்ணை வெளியூரில் இருந்த பெரிய பணக்கார வீட்டிற்கு

திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டார்.

 

இளைஞனும்  தன் மாமாவிடம், ”என்ன மாமா எனக்கு ஒருத்தியை கட்டி கொடுப்பதாக சொன்னீர்கள்" என்று கேட்க அந்த குடியாவனும்,

"இல்லை மாப்பிள்ளை இன்னமும் ரெண்டு பெண்கள் இருக்கிறார்கள் இல்லையா? அவர்களில் ஒருத்தி உனக்குத்தான்”"என்று சொல்லிட்டார்

 

சரிமாமாவே சொல்லிட்டாரே என்று அந்த இளைஞனும் பொறுத்து கொண்டார்

 

அப்புறம் அடுத்ததாக இருந்த இரண்டாவது பெண்ணை வேறு ஒரு நல்ல வசதியான இடத்தில் பேசி முடித்து விட்டார்!

 

கூலியும் கொடுக்காமல் இருந்ததால், குடியாவரும் நல்ல வசதியுள்ளவராக ஆகிட்டார்.

 

முறைப் பையனும், “இந்தப் பெண்னையாவது கட்டி வைப்பீங்கன்னு பார்த்தேனே மாமா” என்றார்!

 

குடியாவரும், “என்ன மாப்பிள்ளை இன்னொருத்தி இருக்காள் அவளை உனக்கு கட்டி வைக்கிறேன்” என்றார்!

 

அந்த இளைஞனும், “அதுக்கு என்ன சாட்சிமுன்னையே இரண்டு முறை ஏமாற்றி விட்டீர்களே?” என்று கேட்டார்.

 

அந்த விவசாய பூமிக்கு பக்கமாக மலைப்பாங்கான ஏரியாவில் ...அந்த சமயத்தில் ஒரு கரடி அந்த பக்கமாகப் போய் கொண்டு இருந்தது.

இந்த குடியாவரும் அந்த முறைப் பையனிடம், “அதோ அந்தக் கரடி சாட்சியாக சொல்கிறேன், மாப்பிள்ளை, கடைசிப் பெண்ணை உனக்கே கட்டி வைக்கிறேன்” என்று சொல்லி அப்போதைக்குக்கு மேட்டரைத் தள்ளிப் போட்டார்.

 

ஆனால் சொன்னபடி நடக்காமல் மூன்றாவது பெண்ணையும் வேறு இடத்திற்கு சம்பந்தம் பேசி விட்டார்.

 

கூலி வாங்காமல் உழைத்து கொடுத்த இளைஞர் மன்னனிடம் சென்று முறையிட்டார்!

 

சபைக்கு அழைக்கப்பட்டார் குடியாவர்.

 

மன்னர் விசாரிக்க, “தான் தன் பெண்ணை கட்டி கொடுப்பதாக சொல்லவில்லை” என்று குற்றத்தை மறுத்தார்

 

"அவன் என் அக்கா மகன். அவனுக்கு உழைத்த கூலி என்னிடம் உள்ளது. அவனுக்குத் திருமணம் அமையும்போது கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என்று சொன்னதோடு நிறுத்திக் கொண்டார்!

 

இளைஞனோ எனக்கு பெண்ணைத்தான் கட்டி வைக்கவேண்டும். கூலி வேண்டாம் என்று மறுத்தார்.

 

அப்போது அந்த குடியாவரும் ”நான் பெண்ணைக் கட்டிக் கொடுக்கிறேன் என்று சொன்னதிற்கு யார் சாட்சி?” என்று கொக்கி போட்டார்.

 

மன்னரும், ”ஆமாம், சாட்சி இல்லாமல் வழக்கு தீர்வாகாது. உன் சாட்சிகள் இருந்தால் நாளைக்கு ஆஜர் செய் "என்று சொல்லிட்டார்

 

அந்த இளைஞர் ”மாமா சொன்னதிற்கு கரடிதான் சாட்சி மன்னா” என்று சொல்ல அரசவையில் ஏக சிரிப்பு

 

ஆனால் மறுநாள் அந்த அரசவையில் நேரடியாக கரடி சாட்சி சொல்ல வந்து நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்லி அந்த பையனும் மூன்றாவது முறை பெண்ணின் கழுத்தில் தாலி யைக் கட்டினார்.

 

கரடியாக அந்த மலையில் வாழ்ந்த திருமூலர்தான் அங்கே சாட்சி சொன்னது!!!!

 

அந்த திருமணம் நடந்த இடம்: சேலம், உத்தமசோழபுரம்!

 

அவ்வூரில் கரபுரநாதர் சன்னதி என்ற சித்தரின் சந்நதி உள்ளது.

 

திருமணம் கூடிவராமல் இருக்கும் வாலிபர்கள் அங்கே கோயிலின் உள்ளே இருக்கும் கரடிசித்தரை'(திருமூலர்) வழிபட்டு பின்னர் ஈஸ்வர தரிசனம் செய்யுங்கள். உங்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும்!✍🏼


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

பொது தகவல்கள்: அறிமுகம் : திருமண தடை உள்ள ஆண்கள் செல்ல வேண்டிய கோவில் எது தெரியுமா? - குறிப்புகள் [ ] | General Information: Introduction : Do you know which temple should be visited by barred men? - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்