பெருமாளுக்கு முதன்முதலில் முடிகாணிக்கை செலுத்தியது யார் தெரியுமா?

குறிப்புகள்

[ பெருமாள் ]

Do you know who was the first to offer a crown to Perumal? - Tips in Tamil

பெருமாளுக்கு முதன்முதலில் முடிகாணிக்கை செலுத்தியது யார் தெரியுமா?  | Do you know who was the first to offer a crown to Perumal?

திருப்பதி என்றதும் நினைவுக்கு வரும் பல விஷயங்களில், பிரதானமான ஒன்று பெருமாளுக்கு முடி காணிக்கை செலுத்துவது. பெரும்பாலான பெருமாள் பக்தர்களின் குடும்பங்களில் ஆண்டுக்கு ஒரு முறை திருப்பதி சென்று முடி காணிக்கை செலுத்தும் வழக்கம் உண்டு. குழந்தை பிறந்ததும் முதல் முறையாக மொட்டை, திருப்பதிக்குத்தான் என்று சொல்லி மொட்டை அடிக்கும் வழக்கமும் உண்டு.

பெருமாளுக்கு முதன்முதலில் முடிகாணிக்கை செலுத்தியது யார் தெரியுமா

 

திருப்பதி என்றதும் நினைவுக்கு வரும் பல விஷயங்களில், பிரதானமான ஒன்று பெருமாளுக்கு முடி காணிக்கை செலுத்துவது. பெரும்பாலான பெருமாள் பக்தர்களின் குடும்பங்களில் ஆண்டுக்கு ஒரு முறை திருப்பதி சென்று முடி காணிக்கை செலுத்தும் வழக்கம் உண்டு. குழந்தை பிறந்ததும் முதல் முறையாக மொட்டை, திருப்பதிக்குத்தான் என்று சொல்லி மொட்டை அடிக்கும் வழக்கமும் உண்டு. 

பொதுவாக மனித உடலில் இயல்பாக வளரக்கூடியவை முடியும், நகமுமே. மனிதன் இறந்த பின்னும் உடலில் வளரக்கூடியவை, இவை இரண்டும்தான். மனிதனின் உயிர் உறையும் இடமாக முடியைக் கருதும் பழக்கம், பழங்குடிச் சமூகங்களின் நம்பிக்கைகளில் இருந்து தொடர்கிறது. எனவேதான் முடியை 'உயிர்ப்பொருள்' என்று தொன்மவியலாளர்கள் அழைக்கிறார்கள். முடியைக் காணிக்கை ஆக்குவதன் மூலம் நம் உயிரையே இறைவனுக்குக் காணிக்கை ஆக்குகிறோம் என்பதே அதன் தாத்பர்யம்.

 

பணம் ,பொருள் ஆகியவற்றைக் காணிக்கை அளிப்பதைவிட முடி காணிக்கை அளிப்பது விசேஷமானதாகக் கருதப்படவும் இதுவே காரணம். திருப்பதி பெருமாளுக்கு முடி காணிக்கை அளிக்கும் வழக்கம் எப்படி ஏற்பட்டது? முதன்முதலில் பெருமாளுக்கு முடி காணிக்கை அளித்தது யார் என்று தேடினால் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று கிடைத்தது.

 

சீனிவாசன் புற்றில் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தபோது, பசு ஒன்று அவருக்குத் தினமும் பால் சுரந்து தாகம் தீர்த்தது. அந்த மாட்டின் சொந்தக்காரன், பசு வீணாகப் புற்றொன்றில் பால் சுரப்பது கண்டு கோபமுற்று தன் கையில் இருந்த ஆயுதத்தை எறிந்தான். அது புற்றின் உள்ளே இருந்த பகவான் சீனிவாசன் மீது பட்டது. இதனால் அவர் தலையில் சிறு காயம் உண்டாகி தலையில் இருந்த கொஞ்சம் கேசமும் சிதைந்தது.

 

ஒரு முறை சீனிவாசனின் மகிமைகளைக் கேள்விப்பட்டு, அவரை தரிசனம் செய்ய 'நீளா 'என்கிற நீளாத்ரி மலையின் இளவரசி வந்தாள். அப்போது பெருமாள் சயனித்திருந்தார். காற்றில் அவரின் கேசம் கலைய, தலையின் சிறுபகுதி கேசமின்றி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தாள். ஒளிபொருந்திய அழகிய பெருமாளின் முகத்துக்கு இது ஒரு குறையாக இருப்பதாக உணர்ந்தாள். உடனடியாகத் தன் தலையில் இருந்து கேசத்தை வேரோடு வருமாறு வலிமையாகப் பிடுங்கினாள். அந்த முடிகளை, முடிகளற்ற பெருமாளின் தலையில் வைத்து, 'தன் பக்தி உண்மையானால், இந்தக் கேசம் ஒட்டிக்கொள்ளட்டும்' என்று வேண்டிக்கொண்டாள். அடுத்த கணம் அந்த கேசம் அவர் தலையில் ஒட்டிக்கொண்டது.

 

பெருமாள் கண்விழித்தபோது, ரத்தம் வழியும் முகத்தோடு நின்றாள் நீளா. அதைக்கண்டு , நடந்ததை அறிந்துகொண்டு மனம் நெகிழ்ந்தார் பெருமாள். நீளாவின் பக்தியை மெச்சி, அவர் கேட்கும் வரம் தருவதாகச் சொன்னார்.

 

முடி காணிக்கை..!!

"பெருமாளே, கலியுகத்தின் முடிவுவரை நீங்கள் இந்த ஏழுமலையில் நின்று அருளப்போகிறீர்கள். அப்போது வரும் பக்தர்கள் என்போல, உங்களுக்கு முடி காணிக்கை தருவார்கள். அப்படி முடி காணிக்கை தரும் பக்தர்களின் குறைகளைப் போக்கி நல்லருள் வழங்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டாள் நீளா.

 

தனக்கென எதுவும் கேளாமல், பிறருக்காக வரம் கேட்ட நீளாவைக் கண்டு மனம் மகிழ்ந்த பெருமாள், "நீளா, உன் செய்கையின் மூலமும் கேட்ட வரத்தின் மூலமும், எளிய மனிதர்களும் பக்தி செய்து என் அருளைப் பெறும் வழியை நீ ஏற்படுத்திவிட்டாய். இனி எனக்கு முடி காணிக்கை தரும் பக்தர்களின் குறைகளை உடனே போக்கி, அவர்களுக்கு தீர்க்க ஆயுளும் வறுமையற்ற வாழ்வும் அருள்வேன்" என்று பதிலுரைத்தார்...!!.✍🏼🌹


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

பெருமாள் : பெருமாளுக்கு முதன்முதலில் முடிகாணிக்கை செலுத்தியது யார் தெரியுமா? - குறிப்புகள் [ ] | Perumal : Do you know who was the first to offer a crown to Perumal? - Tips in Tamil [ ]