இராமாயணத்தில் கும்பகர்ணனின் காத பாத்திரமும் ஒரு அங்கமாகும். கும்பகர்ணன் இராவணனின் இளைய சகோதரர் ஆவார். நல்ல புத்தி கூர்மையும், நெறி தவறா வாழ்க்கை முறையையும், இரக்க குணத்தையும் ஒருங்கே கொண்டவனாக திகழ்ந்தான். இந்திரன் தேவர்களின் தலைவனாவான். இவனுக்கு கும்பகர்ணனின் புத்திக்கூர்மையையும் அசாத்திய வீரத்தையும் பார்த்து பொறாமை எனும் தீயை நெஞ்சத்தில் வைத்து, கும்பகர்ணனை பழி தீர்க்க தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தான். கும்பகர்ணன் தனது அண்ணன்கள் இராவணன் மற்றும் விபீஷணனுடன் பிரம்ம தேவரிடம் வரம் வேண்டி தீவிர யாகம் செய்தான். இந்த யாகத்தைக் கண்டு மகிழ்ந்த பிரம்மன், கும்பகர்ணனைப் பார்த்து என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். சகோதரர்கள் மகிழ்ச்சியுடன் இருந்த நேரத்தில் அவர்கள் இந்திரனின் ஆசனமான இந்திராசனா என்ற வரத்தை எதிர்பார்த்தனர். ஆனால் கும்பகர்ணன் நித்ராசனா என்ற வரத்தைக் கேட்டார்.
கும்பகர்ணன் ஏன் 6 மாதம் தூங்குகிறார் என்று தெரியுமா?
இராமாயணத்தில் கும்பகர்ணனின் காத பாத்திரமும் ஒரு அங்கமாகும்.
கும்பகர்ணன் இராவணனின் இளைய சகோதரர் ஆவார். நல்ல புத்தி கூர்மையும், நெறி தவறா வாழ்க்கை முறையையும், இரக்க குணத்தையும் ஒருங்கே கொண்டவனாக திகழ்ந்தான்.
இந்திரன் தேவர்களின் தலைவனாவான். இவனுக்கு கும்பகர்ணனின் புத்திக்கூர்மையையும்
அசாத்திய வீரத்தையும் பார்த்து பொறாமை எனும் தீயை நெஞ்சத்தில் வைத்து, கும்பகர்ணனை பழி தீர்க்க தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக்
காத்திருந்தான்.
கும்பகர்ணன் தனது அண்ணன்கள் இராவணன் மற்றும் விபீஷணனுடன்
பிரம்ம தேவரிடம் வரம் வேண்டி தீவிர யாகம் செய்தான். இந்த யாகத்தைக் கண்டு மகிழ்ந்த
பிரம்மன், கும்பகர்ணனைப்
பார்த்து என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார்.
சகோதரர்கள் மகிழ்ச்சியுடன் இருந்த நேரத்தில் அவர்கள் இந்திரனின்
ஆசனமான இந்திராசனா என்ற வரத்தை எதிர்பார்த்தனர். ஆனால் கும்பகர்ணன் நித்ராசனா என்ற
வரத்தைக் கேட்டார்.
இந்திராசனத்திற்கு பதிலாக நித்ராசனாவை கேட்டதை உணர்ந்த கும்பகர்ணன்
தன் தவறை உணர்ந்தார். இந்த நேரத்தில் பிரம்ம தேவர் தந்தேன் என சொல்லிவிட்டார். எனினும், பிரம்ம தேவரிடம் இந்த வரத்தை நீங்கள் கொடுக்க வேண்டாம் எனக்
கேட்டார், கும்பகர்ணன்.
ஆனால் பிரம்மனால் அந்த வரத்தின் வீரியத்தை ஓராண்டில் இருந்து
6 மாதங்களாக குறைக்கத்தான்
முடிந்ததே தவிர பிரம்மனால் திரும்ப பெற முடியவில்லை.
இதற்குமுன் கும்பகர்ணன் மேல் பொறாமை கொண்டிருந்த இந்திரன், சரஸ்வதியிடம் சென்று கும்பகர்ணனை இந்திராசனத்திற்கு பதிலாக நித்ராசனத்தை
கேட்கச் செய்யுங்கள் என மன்றாடி கேட்டுக்கொண்டான்.
சரஸ்வதியும் இந்திரன் கோரிக்கைக்கு செவிமடுத்து அவ்வாறே
செய்தார். இதன் காரணமாக 6 மாதங்கள்
தூங்கவும், விழித்திருக்கும்
6 மாதங்களில் எதிர்வரும் அனைத்தையும் சாப்பிடவும் தொடங்கினார், கும்பகர்ணன்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மிக பக்தி கதைகள் : கும்பகர்ணன் ஏன் 6 மாதம் தூங்குகிறார் என்று தெரியுமா - கதைகள் [ ] | Spiritual devotional stories : Do you know why Kumbakarna sleeps for 6 months? - stories in Tamil [ ]