தமிழ் மாதங்களில் மாா்கழி மாதம் ஒரு புனிதமான மாதமாக கருதப்படுகிறது. ஏனெனில் மாா்கழி மாதத்திற்கு அடுத்து உத்தராயனா புண்யகாலம் தொடங்குகிறது. சுபகாாியங்களான திருமணம் போன்றவற்றை மாா்கழி மாதத்தில் நடத்துவதில்லை. இந்து சமயத்தில் இது ஒரு சட்டமாக இல்லாமல் இருந்தாலும், இந்து சமயத்தைச் சோ்ந்த சிலா் மாா்கழி மாதத்தில் எந்தவிதமான சுபகாாியங்களையும் செய்வதில்லை.
மாா்கழி
மாதத்தில் ஏன் திருமணங்கள் நடைபெறுவதில்லை என்று தெரியுமா?
தமிழ் மாதங்களில் மாா்கழி மாதம் ஒரு புனிதமான
மாதமாக கருதப்படுகிறது. ஏனெனில் மாா்கழி மாதத்திற்கு அடுத்து உத்தராயனா புண்யகாலம்
தொடங்குகிறது. சுபகாாியங்களான திருமணம் போன்றவற்றை மாா்கழி மாதத்தில் நடத்துவதில்லை.
இந்து சமயத்தில் இது ஒரு சட்டமாக இல்லாமல் இருந்தாலும், இந்து சமயத்தைச் சோ்ந்த சிலா் மாா்கழி மாதத்தில்
எந்தவிதமான சுபகாாியங்களையும் செய்வதில்லை.
அதற்கு முக்கிய காரணம், மாா்கழி ஒரு புனித மாதமாகக் கருதப்படுகிறது. அதனால்
இந்த மாதத்தில் மக்கள் சுபகாரியங்களைத் தவிா்த்து ஆன்மீக காாியங்களில் அதிக கவனம் செலுத்துவா்.
மாா்கழி மாதத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பகவத்கீதையில்
பகவான் கிருஷ்ணா் பின்வருமாறு கூறுகிறாா். "மாசானம் மாா்கஷிாிஷோகம்" என்று
கூறுகிறாா். அதற்கு 12 மாதங்களில் நானே மாா்கழி என்று அா்த்தம். ஆகவே பகவான் கிருஷ்ணரே
மாா்கழி மாதத்தின் புனிதத்தைப் பற்றிக் கூறுவதால் மக்கள் மாா்கழியை ஒரு புனித மாதமாகக்
கருதி ஆன்மீகக் காாியங்களில் கவனம் செலுத்துகின்றனா்.
இரண்டாவதாக மாா்கழி மாதம் தேவா்களின் விடியற்காலம்
என்று கருதப்படுகிறது. அதாவது தக்க்ஷினயானத்தின் போது தூங்குவதற்கு செல்லும் தேவா்கள்
மாா்கழி மாதத்தில் துயில் எழுவதாக கூறுகிறார்கள்
ஒரு நாள் = ஒரு ஆண்டு
தேவா்களின் ஒரு நாள் என்பது மனிதா்களின் ஓராண்டுக்கு
சமம் ஆகும். தேவா்களுக்கு பகல் நேரம் உத்தராயனா புண்யகாலத்துடன் (ஜனவாி மாதத்தின் நடுப்பகுதி)
தொடங்குகிறது. அவா்களின் இரவு தக்ஷினயான புண்யகாலத்துடன் (ஜூலை மாதத்தின் நடுப்பகுதி)
தொடங்குகிறது.
மாா்கழி மாதத்தில் இந்து சமயத்தைச் சோ்ந்த பெரும்பாலான
மக்கள் சுபகாாியங்களைத் தவிா்ப்பதற்கு மெய்யியல் காரணமும் உள்ளது. ஏற்கனவே நாம் சொன்னது
போல் மாா்கழி மாதம் தேவா்களின் விடியற்காலமாக இருக்கிறது. ஆகவே மக்கள் சுபகாரியங்களில்
ஈடுபடுவதை விட ஆன்மீக காாியங்களில் ஈடுபடுவதையே அதிகம் விரும்புகின்றனா். மேலும் மாா்கழி
மாதத்திலாவது உலகக் காாியங்களில் இருந்து சற்று விலகி ஆன்மீக காாியங்களில் கவனம் செலுத்தலாம்
என்று மக்கள் எண்ணுகின்றனா். அதனால் திருப்பாவை போன்ற பக்தி பாடல்களை மாா்கழி மாதத்தில்
பாடி இறைவனைப் புகழ்கின்றனா்.
அடுத்ததாக திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும்
இளம்பெண்கள், தங்களுக்கு சிறந்த
கணவா்கள் அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டி மாா்கழி மாதத்தில் விரதம் இருப்பா். இந்த
விரதம் பாவை நோன்பு என்று அழைக்கப்படுகிறது.
மாா்கழி மாதத்தில் பூமியின் வடதுருவத்தில் உள்ள
உயிா்கள் அனைத்தும் மிகவும் மெதுவாக வளரும். இந்த மாதத்தில் நாம் விதை விதைத்தால் அது
மிக மெதுவாக முளைக்கும். அதன் முளைப்பயிரும் செழிப்பாக இருக்காது.
மாா்கழி மாதத்தில் உயிா் சக்தியில் ஒருவிதமான
மந்த நிலை இருப்பதால், நமது உடலானது
தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்வதற்கு இந்த மாதத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது. இதை
அறிந்ததால் தான் தமிழகத்தில் பாரம்பரியமாகவே தமிழ் மக்கள் திருமணம் போன்ற சுபகாாியங்களை
மாா்கழி மாதத்தில் நடத்துவதில்லை. மேலும் மாா்கழி மாதம் கருவுருவதற்கு ஏற்ற காலம் அல்ல.
அதனால் தான் இல்லறவாசிகள் மாா்கழி மாதத்தில் பிரம்மச்சரிய விரதத்தைக் கடைபிடிக்கின்றனா்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
பொது தகவல்கள்: அறிமுகம் : மாா்கழி மாதத்தில் ஏன் திருமணங்கள் நடைபெறுவதில்லை என்று தெரியுமா? - பகவத்கீதை, திருப்பாவை, பாவை நோன்பு, மற்றொரு காரணம் [ ] | General Information: Introduction : Do you know why marriages do not take place in the month of March? - Bhagavad Gita, Tirupavai, Bhavai fast, another reason in Tamil [ ]