நீலகிரி பிளம்ஸ் பழம் ஏன் உலக பேமஸ் தெரியுமா அப்படி என்ன ஸ்பெஷல்

குறிப்புகள்

[ பழங்கள் - பலன்கள் ]

Do you know why Nilgiri plums are world famous and what is so special about them? - Notes in Tamil

நீலகிரி பிளம்ஸ் பழம் ஏன் உலக பேமஸ் தெரியுமா அப்படி என்ன ஸ்பெஷல் | Do you know why Nilgiri plums are world famous and what is so special about them?

நீலகிரியில் விளையும் பிளம்ஸ் பழங்கள் இயற்கையாகவே அதிகச் சுவை கொண்டதாக இருப்பதால் மக்கள் அதை அதிகம் விரும்பி உண்கின்றனர். பழங்கள் பெரும்பாலும் உடலுக்கு நன்மை அளிப்பதாக இருந்தாலும் சீசனுக்கு மட்டும் கிடைக்கும் பழங்கள் அந்த பருவத்திற்கு ஏற்ற மிகவும் சிறந்த பழங்களாகத் திகழ்கின்றன. கோடைக்காலத்தில் நுங்கு, பலாப்பழம், மாம்பழம் போன்றவற்றை அதிகம் காண முடிவது போல பிளம்ஸ் பழங்களையும் கோடைக்கால சீசனில் தான் அதிகம் காண முடியும். சிவப்பு நிறத்தில் சிறிய ஆப்பிள் போன்று தோற்றமளிக்கும் பிளம்ஸ் பல மகத்துவமான மருத்துவ குணங்களைக் கொண்டதெனக் கூறப்படுகிறது. இனிப்பு, புளிப்புடன் லேசாக கசப்பு சுவையும் கொண்ட இந்த பழத்தில் விட்டமின் பி1, விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் கே, விட்டமின் பி 2, பி 3, பி 6, விட்டமின் E போன்ற பல சத்துக்கள் உள்ளது. பிளம்ஸ் பழம் சாப்பிடுவதால் உடல் எடையை சீரமைக்க முடியும். இந்த பழம் கொழுப்பைக் குறைக்கிறது. ரத்த ஓட்டத்தை சீரமைக்கிறது. மேலும் இந்த பழத்தில் விட்டமின் சி இருப்பதால் முகப்பொலிவை மேம்படுத்த உதவுகிறது. பிளம்ஸ் மரம் வளர்வதற்குக் குளிர்ச்சியான காலநிலை தேவைப்படுகிறது. நீலகிரியில் கோடைக்காலங்களில் மழைப்பொழிவு மற்றும் குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் பிளம்ஸ் பழம் இயற்கையாகவே வளர்கிறது. இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் ஆங்காங்கே இந்த பிளம்ஸ் பழ மரங்களைக் காண முடிகிறது.

நீலகிரி பிளம்ஸ் பழம் ஏன் உலக பேமஸ் தெரியுமா..? அப்படி என்ன ஸ்பெஷல்?

 

நீலகிரியில் விளையும் பிளம்ஸ் பழங்கள் இயற்கையாகவே அதிகச் சுவை கொண்டதாக இருப்பதால் மக்கள் அதை அதிகம் விரும்பி உண்கின்றனர்.

 

பழங்கள் பெரும்பாலும் உடலுக்கு நன்மை அளிப்பதாக இருந்தாலும் சீசனுக்கு மட்டும் கிடைக்கும் பழங்கள் அந்த பருவத்திற்கு ஏற்ற மிகவும் சிறந்த பழங்களாகத் திகழ்கின்றன. கோடைக்காலத்தில் நுங்கு, பலாப்பழம், மாம்பழம் போன்றவற்றை அதிகம் காண முடிவது போல பிளம்ஸ் பழங்களையும் கோடைக்கால சீசனில் தான் அதிகம் காண முடியும்.

 

சிவப்பு நிறத்தில் சிறிய ஆப்பிள் போன்று தோற்றமளிக்கும் பிளம்ஸ் பல மகத்துவமான மருத்துவ குணங்களைக் கொண்டதெனக் கூறப்படுகிறது.

 

இனிப்பு, புளிப்புடன் லேசாக கசப்பு சுவையும் கொண்ட இந்த பழத்தில் விட்டமின் பி1, விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் கே, விட்டமின் பி 2, பி 3, பி 6, விட்டமின் E போன்ற பல சத்துக்கள் உள்ளது.

 

பிளம்ஸ் பழம் சாப்பிடுவதால் உடல் எடையை சீரமைக்க முடியும். இந்த பழம் கொழுப்பைக் குறைக்கிறது. ரத்த ஓட்டத்தை சீரமைக்கிறது. மேலும் இந்த பழத்தில் விட்டமின் சி இருப்பதால் முகப்பொலிவை மேம்படுத்த உதவுகிறது.

 

பிளம்ஸ் மரம் வளர்வதற்குக் குளிர்ச்சியான காலநிலை தேவைப்படுகிறது. நீலகிரியில் கோடைக்காலங்களில் மழைப்பொழிவு மற்றும் குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் பிளம்ஸ் பழம் இயற்கையாகவே வளர்கிறது. இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் ஆங்காங்கே இந்த பிளம்ஸ் பழ மரங்களைக் காண முடிகிறது.

 

 

இவ்வாறு தனித்து வளரும் மரத்தில் சுமார் 10 கிலோ அளவிற்கு பிளம்ஸ் பழங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. அவ்வாறு எந்த செயற்கை மருந்துகளும் இல்லாமல் இயற்கை முறையில் கிடைக்கும் பழங்களை இங்குள்ள மக்கள் உண்டு மகிழ்ந்து வருகின்றனர்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

பழங்கள் - பலன்கள் : நீலகிரி பிளம்ஸ் பழம் ஏன் உலக பேமஸ் தெரியுமா அப்படி என்ன ஸ்பெஷல் - குறிப்புகள் [ ] | Fruits - Benefits : Do you know why Nilgiri plums are world famous and what is so special about them? - Notes in Tamil [ ]