சிவபெருமானின் குரு வடிவமே தட்சிணாமூர்த்தி ஆகும். ஆலயங்களில் கர்ப்பக்கிரகத்தின் தென் பாகத்தில், தென் திசை நோக்கி வீற்றிருப்பார்.
சிலைகளில் முத்திரைகள் இருக்க காரணம் தெரியுமா?
சிவபெருமானின் குரு வடிவமே
தட்சிணாமூர்த்தி ஆகும். ஆலயங்களில் கர்ப்பக்கிரகத்தின் தென் பாகத்தில், தென் திசை நோக்கி வீற்றிருப்பார்.
அதனால், இவரைத் தென்முகக் கடவுள் என்றும்
சொல்வார்கள். யோக ஆசனத்தில் சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் உபதேசிக்கும்
முறையில் வீற்றிருக்கும் இவரது நான்கு கரங்களில் வலப்பக்கம் உள்ள ஒரு கை சின்
முத்திரையைத் தாங்கி நிற்கும்.
சித் முத்திரை = சின் முத்திரை. ஞானத்தைக் கையால் காட்டும் அடையாளமே
இந்த சின் முத்திரை. சுட்டு விரலால் பெருவிரலின் அடியைச் தொட்டு மற்ற மூன்று
விரல்களையும், வேறாக ஒதுக்கிக் காட்டும் முத்திரை.
பெருவிரல் இறைவனையும், சுட்டு விரல் ஆன்மாவையும் குறிக்கிறது.
மற்ற மூன்று விரல்களில், நடுவிரல் ஆணவ மலத்தையும், மோதிர விரல் கன்ம மலத்தையும், சுண்டு விரல் மாயா மலத்தையும்
குறிக்கும். இந்த மலங்களை ஒதுக்கி, பேரின்பமான
இறைவனை ஆன்மா அடைந்து இன்புறுவதையே இந்தச் சின் முத்திரை காட்டுகிறது.
இந்தச் சின் முத்திரையைத் தன் கைகளில்
தாங்கி இருப்பதன் மூலம், சாந்தமூர்த்தியாக தட்சிணாமூர்த்தி
காட்சி தருகிறார். உள்ளே என்ன இருக்கிறதோ அதுவே முத்திரையாக வெளிப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு விதமான
முத்திரையைத் தாங்கி நிற்பார்கள். வியாசருடைய சிற்பத்தைப் பார்த்தால், அவர் ஒரு விரலைக் காட்டுவதுபோலத்
தெரியும். காஞ்சிபுரத்தில்,
வரதராஜப் பெருமாள் கோவிலில், தாயார் சந்நிதியில், வியாச பகவான் ஜடா முடியுடன்
உட்கார்ந்திருப்பது போலவும், அவருக்கு
எதிரில் ஆதிசங்கரர் நின்றுகொண்டிருப்பது போலவும் காணப்படும். அதில், வியாச மூர்த்தி இரண்டற்ற ஒரு பொருளைக்
காட்டுவதற்காக ஒரு விரலைக் காட்டிக்கொண்டிருக்கிறார்.
தட்சிணாமூர்த்தி, இரண்டும் ஒன்று என்ற அத்வைத கொள்கையைக்
காட்ட இரண்டு விரல்களை ஒன்றாகச் சேர்த்துக் காட்டிக்கொண்டிருக் கிறார்.
மத்வாச்சாரியாரின் விக்கிரகத்தைப் பார்த்தால், இரண்டு
விரல்களைக் காட்டிக்கொண்டிருப்பார். இது துவைதக் கொள்கையைக் காட்டும்.
முருகப் பெருமானின் பன்னிரண்டு
கரங்களும், பன்னிரண்டு தொழில்களைச்
செய்துகொண்டிருக்கின்றன. இவற்றுள் ஒன்பதாவது விரல், கைவளைகளுடனே மேலே சுழன்று, களவேள்விக்கான
முத்திரையைக் காட்டுகிறது.
அபய முத்திரை
மகாமேருவில் உள்ள சக்கரராஜம் என்று
சொல்லப்படும் தேவியின் இருப்பிடமான பிந்து ஸ்தானத்தைச் சுற்றியுள்ள பதினைந்து
நித்யா தேவிகள் தங்கள் கரங்களில், அபய
முத்திரை அல்லது வர முத்திரையே காட்டி நிற்கின்றனர்.
காமேஸ்வரி, தனது கரங்களில் ஒன்றில், வரத முத்திரையைக் காட்டி நிற்கிறாள்.
நித்யச்லினா தேவி, வலது கீழ் சுரத்தில் அபய முத்திரை
யுடன் நிற்கிறாள். ஸ்ரீபேருண்டா தேவி, ஸ்ரீவஹ்னிவாசினி
தேவி, ஸ்ரீ த்வரிதா தேவி, ஸ்ரீகுலசுந்தரி, ஸ்ரீநித்யா, ஸ்ரீநீலபதாகா, ஸ்ரீசர்வமங்களா தேவி, ஸ்ரீநித்ராதேவி ஆகியோரும் தங்கள்
கரங்களில் அபய முத்திரை காட்டியே நிற்கின்றனர்.
எந்த ஆலயத்துக்கும் சென்று தெய்வங்களை
நாம் தரிசிக்கும்போது கவனித்தால், ஒவ்வொரு
சிலையிலும் ஏதாவது ஒரு முத்திரையை அந்தத் தெய்வங்கள் காட்டுவதுபோல்
வடிவமைக்கப்பட்டிருக்கும்.
புத்தரின் சிலைகள், அவருடைய கைகள் பலவித முத்திரைகளைக்
காட்டுவதுபோலவே வடிவமைக்கப்படுகிறன்றன. குறிப்பாக, ஞான முத்திரை,
சின் முத்திரை, தியான முத்திரை, அபய முத்திரை, வரத முத்திரை ஆகியவற்றைக் கூறலாம்.
பரத நாட்டியத்திலும் பல முத்திரைகள்
இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, முகுள
முத்திரை, அஞ்சலி முத்திரை, புஷ்பபுட முத்திரை, சிவலிங்கம், சங்கம், மகரம் என்று யோக முத்திரைகள், நடன
மாதர்களால் விரல்களில் அபிநயமாக செய்து காட்டப்படுகின்றன.
விரல்களில் அப்படி என்ன சக்தி
இருக்கிறது. ஐந்து விரல்களும் பஞ்ச பூதத் தத்துவங்களாக உள்ளன.
கட்டை விரல் - நெருப்பு
ஆட்காட்டி விரல் - காற்று
நடுவிரல் - ஆகாயம்
மோதிர விரல் - நெருப்பு
சுண்டு விரல் - நீர்
இவற்றில், நோய்க்குத் தகுந்தபடி விரல்களை
முறைப்படி வைத்து முத்திரைகளைச் செய்ய வேண்டும். இந்தப் புத்தகத்தில், மொத்தம் ஐம்பது வகையான முத்திரைகள்
தரப்பட்டுள்ளன. அவற்றைச் செய்வது எப்படி, அவற்றின்
மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
யோக முத்திரைகள் : சிலைகளில் முத்திரைகள் இருக்க காரணம் தெரியுமா? - சின் முத்திரை [ ] | Yoga Mudras : Do you know why statues have seals? - Seal of Chin in Tamil [ ]