🌺 மன அழுத்தம் என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின் விளைவாக ஏற்படுவதில்லை🍂 🌺 உங்களை நீங்களே நிர்வகிக்க முடியாததன் விளைவாக ஏற்படுகிறது🍂
மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது தெரியுமா?
விடுபடுவது எப்படி?
🌺 மன அழுத்தம் என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின் விளைவாக ஏற்படுவதில்லை🍂
🌺 உங்களை நீங்களே நிர்வகிக்க முடியாததன் விளைவாக ஏற்படுகிறது🍂
🌺 வாழ்க்கையை நீங்கள் ஒரு சாத்தியமாகப் பார்த்தால் எங்கும் சாத்தியங்களையே காண்பீர்கள்🍂
🌺 வாழ்க்கையை நீங்கள் ஒரு பிரச்சனையாகப் பார்த்தால் எங்கும் பிரச்சனைகளையே காண்பீர்கள்🍂
🌺 உங்கள் மனதை நீங்கள் ஆட்டுவிக்க வேண்டும் உங்கள் மனம் உங்களை ஆட்டுவிக்கக் கூடாது🍂
🌺 சவாலான சூழ்நிலைகள் எழும்போது தான் மனிதர்கள் சாதாரணமாக தாங்கள் இருக்கும் நிலையைவிட🍂
🌺 மேன்மையான ஒரு நிலைக்கு உயரமுடியும்🍂
🏵📿🏵📿🏵📿🏵📿🏵📿
🍁 இந்த மாய உலகில் மாறாத ஒன்று மாற்றங்கள் மட்டுமே
எந்த
மாற்றங்களிலும் மாறாத ஒன்று எல்லாம் வல்ல
இறைவனின் அன்பும் ஆதரவும் மட்டுமே என்று நினைவில் கொள் மனமே🍁
🌸 இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் எண்ணுவது என்னவெனில் “வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம்
வேண்டும்” என்பது தான்🌸
🌸 வெற்றி என்பது அவர்கள் கையில் வந்து விழும்” என்று கனவு காண்கிறார்கள். இது பாலைவனத்தில் தோன்றும் கானல் நீர் போன்றது தான்🌸
🌸 நாம் சிறிய வயதில் காணும் வலிமையான கனவுகள் நம் வாழ்வில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் வலிமை வாய்ந்தவை🌸
🌸 ஆனால் தொடர்ந்து ஏற்ப்பட்ட தோல்விகளால் அதன் மீது நம்பிக்கை இன்மையும்,சரியான முயற்சி
இன்மையால் கை விட்டு விட்டோம்🌸
🌸 கடின உழைப்பின் மூலமாக, சவால்களைச் சமாளித்து, அவரவர் கனவுகளுக்கு உயிர் கொடுத்து, தொடர்ந்து விடாமுயற்சி
செய்தால் மட்டுமே “வெற்றி பெற சரியான வழியாகும்🌸
🌸 மன வலிமையும், லட்சியக் கனவும், கடின உழைப்பும்
விடாமுயற்சியும் இல்லை
என்றால் எவ்வளவு திறமை இருந்தாலும் வெற்றி பெறுவது கடினம்👍
👉🌹இதுதான் வாழ்க்கை! இவ்வளவு தான் வாழ்க்கை !
🌷 உடையின்றி பிறந்தோம்!
🌷 உடையின்றி இறப்போம்!
🌷 பொருள் செல்வம் இன்றி பிறந்தோம்!
🌷 பொருள் செல்வம் எதுவும் இல்லாமல் செல்வோம்!
🌷நமது முதல் குளியலை
🌷 யாரோ ஒருவர் செய்தார்கள்!
🌷 நமது கடைசி குளியலை
🌷 சொந்தங்கள் செய்வார்கள்
🌷 இவ்வளவு தான் வாழ்க்கை!
🌷 எதற்கு இத்தனை வெறுப்பு!
🌷 இத்தனை கோபம்!
🌷 இத்தனை பொய்!
🌷 இத்தனை சுயநலம்!
🌷 இத்தனை பேராசை!
🌷 அன்புடன் இருப்போம்!
🌷 நல்லதை செய்வோம்!
🌷 பூமியில் வாழும் நாட்கள் குறைவு!
🌷 தேவை இல்லாத விடயத்தில் நமது நேரத்தை வீணாக்க
வேண்டாம்!
☘ தெய்வம் உங்கள் வாழ்வில் செய்ய நினைத்தது எதுவும் தடைபடாது, ஆகவே எதைக்குறித்தும் கலங்காதீர்கள்.
☘ காற்றே விஷமாக மாறி கழுத்தை நெறிக்கும் நிலை வந்தாலும் கலங்காதீர்கள்.
☘ ஆல கால விஷத்தையே அமிர்தமாக்கி உங்களை காத்திட நீங்கள் வணங்கும் இறைவன் இருக்கிறார் பயப்படாதீர்கள் .
☘ இறைவன் பாதம் பணிந்து பயணிப்பவர்களுக்கு எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அவைகள் அனைத்தும் வீழும், அல்லது அதன் வீரியம்
படிப்படியாக குறையும்.
"ஏதாவது பேசு"
என்பதற்கும் "வாய மூடு" என்பதற்கும் இடைப்பட்டதே இல்லறம்..
துக்கத்தை விட
கொடியது
உறவினர்களின்
கருணை.......!!
விட்டுப்போன பின்பும்
ஒட்டிக்கொண்டு இருக்கும் நினைவுகள்தான் காதலின் வரமும் சாபமும்.
எவ்வளவு பிடித்தவராக
இருந்தாலும் மனம் வெறுக்கத்தான் செய்கிறது..!!
நம் அன்பை அலட்சியம்
செய்யும் போது.
ஆசைக்கும் அன்புக்கும்
ஒருபோதும் அடிமையாகாதே இரண்டுமே ஒரு நாள் உன்னை கொல்லும்.
பல கஷ்டங்கள் இடையிலும்
சிரித்து பாரு அந்த சிரிப்புக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.
அடிமைகளுக்கு அன்பான
வார்த்தைகளோ ஆறுதல் வார்த்தைகளோ தேவை இல்லை, அவர்களுக்கு தேவை "கட்டளையே".
ஒருவர் உன்னை பிடிக்கும்
என்று சொல்லிவிட்டால் வாழ்க்கை முழுவதும் பிடிக்கும் என்று நினைத்து விடாதே இன்று
பிடிப்பவர்களுக்கு நாளை பிடிக்காமல் போகலாம்.
யாரும் யாருக்கும் இங்கு
நிரந்தரம் இல்லை இருந்தால் உறவு பிரிந்தால் நினைவு அவ்வளவுதான் வாழ்க்கை..
மாற்றம் வேண்டும் எனப்
போராடிக் கொண்டே இருந்தாலும்,
நம்மை மட்டுமே மாற்றி
விடுகிறது இந்த வாழ்க்கை.
சிந்தித்து
செயலாற்றுங்கள்.
வெற்றி நிச்சயம்.
1. மாதம் ஒரு
புத்தகமாவது படியுங்கள்
2. ஆரோக்கியம் தராத உணவு
வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.
3. உங்களுக்கு என்ன
வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில்
பங்கெடுங்கள்.
4. வருமானத்திற்கான வழி
மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.
5. முடிந்தவரை கடன்களைக்
கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.
6. விடியும் முன்னால்
எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.
7. முப்பதுகளைக்
கடக்கும் முன்,
மற்றவர்கள் சொல்லாமலே
சர்க்கரை, உப்பு ஆகியவற்றை
கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.
8. எக்காரணம் கொண்டும்
காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.
9. நிற்கையில் நேராக
நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.
10. புன்னகை முகமும்
இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.
11. வாரம் மூன்று முறை
யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.
12. சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல்
எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.
13. ஒருவர் இல்லாதபோது
அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.
14. அரட்டைப்
பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்
15. மற்றவர்களின்
தவறுகளை மன்னி யுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.
16. உங்கள் வாழ்வின்
ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.
17. குடும்பம் என்கிற
எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.
18. மாதம் ஒரு முறையாவது
உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்
19. மற்றவர்களைப் பேச
விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.
20. உங்கள் நேரத்
திற்கும், மற்றவர்கள்
நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.
21. உங்களிடம் இல்லாத
தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.
22. உங்கள் திறமைகளை
நீங்களே விவரித்துக் கொண்டிரா தீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.
23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல்
இருங்கள்
24. தண்ணீரையும்
மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவது தான் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்.
25. உங்கள் தனிப்பட்ட
நம்பிக்கைகளையும் பழக்கங் களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
தன்னம்பிக்கை : மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? விடுபடுவது எப்படி? - எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ் [ ] | self confidence : Do you know why stress occurs? How to get rid of it? - 25 Tips to Always Win in Tamil [ ]