சுமங்கலிகள் ஏன் குங்குமத்தை விரும்புகிறார்கள் தெரியுமா?

நடமாடும் கோவில் பற்றி தெரிந்து கொள்வோமா?

[ பொது தகவல்கள்: அறிமுகம் ]

Do you know why Sumangalis love saffron? - Let's know about the moving temple? in Tamil

சுமங்கலிகள் ஏன் குங்குமத்தை விரும்புகிறார்கள் தெரியுமா? | Do you know why Sumangalis love saffron?

குங்குமம், லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காதஅருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது.

சுமங்கலிகளின் ஏன் குங்குமத்தை விரும்புகிறார்கள் தெரியுமா?

 

குங்குமம், லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காதஅருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது.

 

1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

 

2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம், சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

 

3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

 

4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

 

5. பெண்கள் குங்குமத்தை, தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

 

6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

 

7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

 

8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும், வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

 

9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

 

10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

 

11. குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

 

12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.

 

மங்களம் தரும் குங்குமத்தை அணிந்து, இன்னும் மங்களகரமாக இருக்க, உங்கள் வீட்டு இளந்தளிர்களுக்கு இந்த நல்ல நாளில் ஆரம்பித்து படிப்படியாக சொல்லிகொடுங்கள்.

 

எந்த  ஒரு வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.

 

நடமாடும் கோவில் பற்றி தெரிந்து கொள்வோமா?

 

நாம் ஒருவரை விரும்புகிறோம் என்றால் நம் விருப்பத்தைப் பல வழிகளில் வெளிப்படுத்திகிறோம்.

 

அவருக்கு அன்பளிப்புத் தருகிறோம். எதாவது தேவையென்றால் நிறைவேற்றுகிறோம், துன்பம் நேர்ந்தால் உதவுகிறோம். வீட்டுக்கு அழைத்து, விருந்து தருகிறோம்.

 

இறைவன்மீது நமக்கு இருக்கும் விருப்பத்தை எப்படி வெளிப்படுத்துவது?

 

இதற்கு திருமூலர் ஓர் அருமையான வழியைச் சொல்கிறார்.

 

இறைவனுக்கு நீ எதாவது கொடுக்க விரும்பினால், தேவைப்பட்ட மனிதர்களுக்கு கொடு.

 

அது இறைவனுக்குப் போய்ச் சேர்ந்துவிடும் என்கிறார்.

 

ப(ந)டமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

ப(ந)டமாடக் கோயில் பகவற்கு அதுஆமே

 

(திருமந்திரம் : -1857)

 

(படமாடக் கோயில் = இறைவன் உருவத்தை ஓவியமாக எழுதி வைத்துள்ள இடம், பகவன் = இறைவன்.

நடமாடக் கோயில் நம்பர் = நடமாடும் கோயிலாகிய மனிதர்கள், ஆமே = போய்ச் சேரும்)

அது என்ன ‘நம்பர்க்கு’ என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழுகிறது; ‘நம்பர்’ என்ற சொல் ‘நம்மவர், எம்மைப்போன்ற மனிதர்கள்’ என்ற பொருள் தரும்.

 

மனிதரின் உள்ளத்தில் இறைவன் குடி கொண்டுள்ளான். எனவே மனிதர்கள் இறைவனின் நடமாடும் கோயில்கள்.

 

நடமாடும் கோயில்களாகிய நம்மை போன்ற போன்ற மனிதர்க்கு ஒன்று கொடுப்பது இறைவனுக்குக் கொடுப்பதற்கு ஒப்பாகும்.

 

ப(ந)டமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில் --- நடமாடடும் கோயில் - மனிதனின் உள்ளம்தான் நடமாடும் கோயில்.சிவ சிந்தனையில் இருக்கும் சிவயடியார்களுக்கு அன்னமிட்டால் அது ஈசனுக்கு போய் சேரும் -

 

கோயில்கள் இரண்டு வகை.

ஒன்று - மண், மரம், கல் போன்ற பொருள்களால் கட்டுவது.

 

மற்றொன்று மனித உடல்.

 

படமாடம் என்றால், கூடாரம் என்று பொருள்.

 

பழங்காலத்தில் ஏதேனும் ஒரு வழிபாடு பொருளை வத்து, அதன்மீது துனி போன்ற பொருள்களால் கூடாரம் போன்று அமைப்பார்கள்.

 

அதனால் திருமூலர் படமாடக் கோயில் என்கிறார்.

 

இங்கே படமாடக் கோயில் என்பது, கட்டப்பட்ட எல்லாக் கோயில்களையும் குறிக்கும்.

 

‘நடமாடும் கோயில்’ என்ற சொல்லின் மூலம் ஒரு பெரிய ஞானக் கருத்தை உணர்த்த விரும்புகிறார் திருமூலர்.

 

மனிதனே நடமாடும் கோயிலாக இருக்கிறான்.

 

“ உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்

தெள்ளத் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் பலன் ஐந்தும் காளா மணிவிளக்கே...”

 

என்றும் சொல்கிறார் திருமூலர்.

 

மனித உடல்தான் மகேசனின் ஆலயம் என்பதை உணர்த்துவதற்காகதான், கோயில்கள் மனித உடல்

அமைப்பில் கட்டப்படுகின்றன.

 

மனிதன் தனக்குள்ளேயே இறைவனை வைத்துக்கொண்டு, அவனை வழிபட வெளியே செல்கிறான்.

 

நடமாடும் கோயில், நடமாடாத கோயிலுக்குப் போகிறது.

 

உயிருடைய கோயில், உயிரில்லாத கோயிலுக்குப் போகிறது.

 

கோயில், கோயிலை வண்ங்குகிறது.

 

‘நடமாடும் கோயில்’ என்ற சொற்களில் இவ்வளவும் தொனிக்கிறது.

 

‘உனக்குள் இறைவன் இருப்பதைப் போலவே, உன் சக மனிதனுக்குள்ளும் இறைவன் இருகிறான்.

 

எனவே, இறைவனுக்கு நீ ஏதேனும் தர விரும்பினால், சக மனிதனுக்கு கொடு.

 

அவனுக்கு உள்ளே இருக்கும் இறைவன் அதைப் பெற்றுக்கொள்வான்’ என்கிறார் திருமூலர்.

 

கிருபானந்த வாரியார் இதை எளிமையாக சொன்ன கலியுக உதாரணம் பற்றி சொல்லட்டுமா?

 

தெரு ஓர அஞ்சல் பெட்டியில் ஒரு தபால் போட்டால், தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு போகும்,

 

ஆனால்

 

தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தபால் போட்டால் எக்காலத்திற்கும் தெரு ஓர போஸ்டு பாக்சுக்கு தபால் வராது.....

 

ஒரு முறை சென்னையில் உள்ள பிரபலமான கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன் அவரது நண்பருடன் திருப்பதிக்கு சென்றுள்ளார்.

 

அவரது நண்பர் கையில் உள்ள சூட்கேஸ் ஒன்றில் ஐந்து லட்ச ரூபாய்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்த கொண்டு வந்துள்ளதை அறிந்து கொள்கின்றார்.

 

அவர் அந்த சூட்கேஸிலுள்ள ஐந்து லட்ச ரூபாய்களுக்கும் கட்டண தரிசன டிக்கட்டுகளாக வாங்கி வந்து தர்ம தரிசன வரிசையில் நிற்பவர்களிடம் கொடுத்து விரைவில் தரிசனம் பெற உதவுகின்றார்.

 

அவரது நண்பரிடம் இந்த ஐந்து லட்ச ரூபாய்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்தினால் அது ஆலயத்திற்கு மட்டுமே நேரிடையாக சென்று சேரும்.

 

ஆனால் ஐந்து லட்ச ரூபாய்களுக்கும் கட்டண தரிசன டிக்கட்டுகளாக வாங்கி பக்தர்களிடம் கொடுத்ததன் மூலம் ஐந்து லட்ச ரூபாய்களும்  ஆலயத்திற்கு சேர்ந்து விட்டது.

 

அதன் மூலம் வாங்கிய கட்டண தரிசன டிக்கட்டுகளை பக்தர்களுக்கு வழங்கியதன் மூலம் அந்த பக்தர்களின் மனங்களில் நிறைந்துள்ள இறைவனிடம் நேரடியாக போய் சேர்ந்து விட்டது என்றார்.

 

மூலவருக்கு அன்னம் படைத்து வணங்குவதாலும் நமது காணிக்கையாக பணம், நகைகள் போன்றவற்றை உண்டியலில் செலுத்துவதாலும் அவை  இறைவனிடம் போய் சேருவதில்லை

 

நடமாடும் கோயில்களாக வறுமையில் இருப்பவர்களுக்கும்,

இறை சிந்தனையில் உள்ளவர்களுக்கும் ஆதரவற்றுவர்களுக்கும் அன்னதானமாகவோ,

பணம் நகை போன்ற பொருட்களையோ வழங்கி உதவினால் அவ்வுதவி இறைவனிடம் நேரிடையாக போய் சேரும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

பொது தகவல்கள்: அறிமுகம் : சுமங்கலிகள் ஏன் குங்குமத்தை விரும்புகிறார்கள் தெரியுமா? - நடமாடும் கோவில் பற்றி தெரிந்து கொள்வோமா? [ ] | General Information: Introduction : Do you know why Sumangalis love saffron? - Let's know about the moving temple? in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்