உலகத்தின் இயக்கமே சூரியனின் இயக்கத்தைக் கொண்டு தான் நடக்கிறது. சூரியோதயத்திற்கு முன் காலையில் விழித்து அன்றாடக் கடமைகளை செய்யவேண்டும். மனிதர்கள் மட்டுமில்லாமல் எல்லா உயிர்களும் சூரியோதயத்தின் போது கண்விழிக்கின்றன.
வாரத்தின் முதல் நாளாக ஞாயிறு ஏன் உள்ளது தெரியுமா?
உலகிற்கு ஒளி வீசும்
கதிரவனின் நாளான ஞாயிறு, ஏன் வாரத்தின் முதல் நாளாக உள்ளது தெரியுமா?
உலகத்தின் இயக்கமே
சூரியனின் இயக்கத்தைக் கொண்டு தான் நடக்கிறது. சூரியோதயத்திற்கு முன் காலையில்
விழித்து அன்றாடக் கடமைகளை செய்யவேண்டும். மனிதர்கள் மட்டுமில்லாமல் எல்லா
உயிர்களும் சூரியோதயத்தின் போது கண்விழிக்கின்றன.
ஓரறிவு முதல் ஆறறிவு வரை
எல்லா உயிர்களுக்கும் ஜீவாதாரமாக சூரியன் திகழ்கிறது. அதனால், வாரத்தின் முதல்நாளில்
சூரியனுக்குரிய நாளாக ஏற்படுத்தினர். தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் முதல்
நூலான சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தின் தொடக்கமே ஞாயிறு போற்றுதும் என்றே
தொடங்குகிறது. மற்ற இயற்கை வழிபாடுகளான நிலா, மழை போன்ற தெய்வங்கள் சூரியனுக்கு பின்னரே
குறிக்கப்படுகின்றன.
சூரிய வழிபாடு
ஆதிநாள் முதலே அகிலம்
முழுதும் சூரிய வழிபாடு நடந்து கொண்டுதான் இருக்கிறது. சூரியனே உலகின் முதல்வன்
என்கின்றன வேதங்கள். கண்களால் காணமுடியும் தெய்வம் சூரியனே என்று அவனையே
முன்னிலைப்படுத்தி மந்திரங்கள் பலவும் ரிக்வேதத்தில் சொல்லப்பட்டுள்ளன.
உலகத்தின் இருளைப்
போக்குவதற்கான ஜோதியினை உருவாக்குபவன் சூரியனே என்கிறது யஜுர் வேதம்.
உலகம் கதிரவனை நம்பியே
இருப்பதாலும் அதையே சுற்றி வருவதாலும் கால மாற்றங்கள் சூரியனை வைத்தே நடக்கிறது
என்பதாலும் இந்திய விண்வெளி கணக்கீடுகள் ஞாயிறை வைத்து ஆரம்பிக்கிறது. அதனால், வாரத்தின் முதல்நாளில்
சூரியனுக்குரிய நாளாக ஏற்படுத்தினர்.
மற்ற இயற்கை வழிபாடுகளான
நிலா, மழை போன்ற தெய்வங்கள்
சூரியனுக்கு பின்னரே குறிக்கப்படுகின்றன. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமையை
வாரத்தின் முதல் நாளாக வைத்துள்ளனர்.✍🏼
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
பொது தகவல்கள்: அறிமுகம் : வாரத்தின் முதல் நாளாக ஞாயிறு ஏன் உள்ளது தெரியுமா? - குறிப்புகள் [ ] | General Information: Introduction : Do you know why Sunday is the first day of the week? - Tips in Tamil [ ]