அதில் அவ்வளவுதான் என்ற எண்ணமே சலிப்பு என்ற உணர்வை தூண்டுகின்றது !! உண்மையில் அப்படியா ?? என்று கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் .. அப்படியில்லை நமக்கு அதில் உள்ள புதுமை புலப்படவில்லை !! புலப்படைவதை உணரும் பக்குவம் இல்லை என்பதே மெய் ஆகும் ..
எதிலும் சலிப்பு என்ற உணர்வு ஏன் உண்டாகின்றது தெரியுமா?
அதில் அவ்வளவுதான் என்ற
எண்ணமே சலிப்பு என்ற உணர்வை தூண்டுகின்றது !!
உண்மையில் அப்படியா ?? என்று கொஞ்சம் ஆழ்ந்து
பார்த்தால் ..
அப்படியில்லை நமக்கு
அதில் உள்ள புதுமை புலப்படவில்லை !! புலப்படைவதை உணரும் பக்குவம் இல்லை என்பதே
மெய் ஆகும் ..
உதாரணமாக
நாம் வாழ்நாளில்
எத்தனையோ நாட்களை எதிர்கொண்டு இருப்போம் ..
ஆனால்
ஓர் நாள் போல்
இதுவரையில் ஒருநாள் கூட அதே போல இருந்தது இல்லை என்பதே மெய் ..
இறைப்பேராற்றல்
இயக்கத்தின் உன்னதம் அதுவே ..
பிரபஞ்ச இயக்கத்த்தில்
நாளும் புதுப்புது பரிமாணங்கள் தான் ..
அதை அனுபவிக்கும் நாமும் அங்கனமே புதுப்பிக்க படுகிறோம் என்பதும்
மெய்யே ..
ஒரே வானம் !! ஒரே
சூரியன் !! ஒரே நிலவு !! அதில் உள்ள விண்மீன்கள் என்று ஒன்றே இருந்தாலும் அது இந்த
பூமியை நெருங்கும்விதம் !! ஒளி கதிர்களை பாச்சும் வீதம் !! அன்றைய இயற்கை சூழல் ..
அதை
அனுபவிக்கும் நம்மின்
வளர்ச்சி, முதிர்ச்சி, பக்குவம், மனநிலை என்று நாமும்
நேற்றுபோல இன்று இல்லை ..
நாம் அனுபவிப்பதும்
நேற்றுபோல இன்று இல்லை...
ஆனால்
மனம் அதுவா அதில்
அவ்வளவுதான் என்று ஓர் மாயா பிம்பத்தை நம்முள்ளே ஊன்றிவிடுகிறது ..
அதன் வெளிப்பாடே சலிப்பு
என்ற உணர்வு ...
நீங்கள் எதில்
சலித்தாலும் கொஞ்சம் சுற்றி பாருங்கள் ..
உங்கள் அருகில்
இருக்கும் மரம் புதிய இலையை புதிய நிறத்தில் துளிர்த்து இருக்கும், பழைய இலை பழுத்து
உதிர்ந்து இருக்கும் ,,
அப்படியே உங்களையும்
கொஞ்சம் கவனியுங்கள் நேற்று நம்மோடு நாமாக ஒட்டியிருந்த முடி உதிர்ந்து இருக்கும்
இல்லை வளர்ந்து இருக்கும், நேற்று கற்றுக்கொண்டது இன்றைய படிக்கட்டாய் நம்மை
தாங்கி அடுத்த படிப்பினைக்கு நம்மை ஏற செய்துகொண்டு இருக்கும் ..
ஏதும் அப்படியே என்றும்
இல்லை !!
நேற்றைய துரோகி இன்றைய
நண்பனாவான் !!
இன்றைய நண்பன் தனக்கான
வாய்ப்புக்கு காத்து இருப்பான் !!
எனவே எதையும் இப்போது
தான் புதிதாக பார்ப்பதை போல, அதன் பரிணாம மாற்றத்தை
ஏற்றுக்கொண்டு பாருங்கள் !!
எதையுமே, அதை, அப்போது, அப்படியே அனுபவித்து
கடந்து விடுங்கள் ..
எல்லாம் நம்மை ஒத்த
மாற்றத்தில் தான் ..
சுழற்சியின் சூட்சமம்
ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்பதே இயற்கையாகிய இறையின் நியதி ..
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
வாழ்க்கை பயணம் : எதிலும் சலிப்பு என்ற உணர்வு ஏன் உண்டாகின்றது தெரியுமா? - குறிப்புகள் [ ] | Life journey : Do you know why there is a feeling of boredom in anything? - Tips in Tamil [ ]