வீட்டில் நடைபெறும் அனைத்து சுப காரியங்களிலும் விநாயகரை வேண்டி பிரார்த்தனை செய்துகொள்வதும் பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதும் வழக்கமாக கையாளுகிறோம்.
வினைகளை தீர்க்கும் விநாயகர் ஏன் சொல்கிறோம் தெரியுமா?..!!
🌟 வீட்டில் நடைபெறும் அனைத்து சுப காரியங்களிலும் விநாயகரை வேண்டி பிரார்த்தனை செய்துகொள்வதும் பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதும் வழக்கமாக கையாளுகிறோம்.
🌟 நாம் கடைபிடிக்கும் விரதங்களில் விநாயகர் சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்றாகும். முழுமுதற்கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான ஆண்டுதோரும் ஆவணி மாத
சுக்கிலபட்ச சதுர்த்தி திதியன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகின்றது. அன்றைய
தினம் உலகெங்கிலும் உள்ள மக்கள் பயபக்தியோடு விநாயகரை வழிபட்டு, உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர்.
🌟 மஞ்சளோ, பசுமாட்டுச்சாணமோ, களிமண்னோ ஒரு இலையில் பிடித்து
வைத்தால் அவர் விநாயகராக அருள் தருவார். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை
நாம் நம்பிக்கையோடு வழிபட்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும். துன்பங்கள்
தூர விலகி ஓடும்.
🌟 இவ்விழா மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி ஆட்சி காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது. அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும்
கொண்டாடப்பட்டிருக்கிறது. பின்னர் பீஷ்வாக்கள் ஆட்சி காலத்திலும் விநாயகர் வழிபாடு
தொடர்ந்து நடந்திருக்கிறது. பிறகு அது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக
மாறிவிட்டது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்தார்கள்.
🌟 சுதந்திர போராட்ட தியாகி பாலகங்காதர திலகர் இதை வருடந்தோறும் பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார்.
அதன் பிறகுதான் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதி படைத்தவர்கள் தங்கள் வசதிக்கேற்ப
விநாயகர் சிலைகளை செய்து,
தங்கள் பகுதி மக்களுடன் சேர்ந்து
கொண்டாடும் விழாவாக நடத்தினர். ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும், ரூபாய் நோட்டுகளையும் இப்பண்டிகையில்
வழங்கினர். வெகுகாலத்திற்கு பின்னரே தமிழகத்தில் இவ்விழா அறிமுகமாகி
கொண்டாடப்பட்டது.
🌟 அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகரும், கணங்களுக்கெல்லாம் அதிபதியும், விக்னங்கள் யாவற்றையும் நீக்கி
பக்தர்கள் வேண்டும் வரங்களை வாரி வழங்கும் வள்ளலுமாகிய விநாயக பெருமானை விநாயகர்
சதுர்த்தி அன்று நோன்பிருந்து வணங்கி பேரருள் பெறுவோம்.
🌟 "வினை தீர்ப்பார் விநாயகர்"✍🏼
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
விநாயகர்: வரலாறு : வினைகளை தீர்க்கும் விநாயகர் ஏன் சொல்கிறோம் தெரியுமா?..!! - பிடித்துவைத்தால் பிள்ளையார், விநாயகர் சதுர்த்தி வரலாறு [ ] | Ganesha: History : Do you know why we say Ganesha solves verbs?!! - The history of Pillaiyar, Vinayagar Chaturthi if caught in Tamil [ ]