உங்களுக்கு பயம் விலக வேண்டுமா? எளிய பரிகாரம் இதோ..!!

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Do you want to get rid of fear? Here is a simple solution..!! - Tips in Tamil

உங்களுக்கு பயம் விலக வேண்டுமா? எளிய பரிகாரம் இதோ..!! | Do you want to get rid of fear? Here is a simple solution..!!

உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒவ்வொரு விதமான சூழ்நிலையில் தனது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

உங்களுக்கு பயம் விலக வேண்டுமா? எளிய பரிகாரம் இதோ..!!

 

உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒவ்வொரு விதமான சூழ்நிலையில் தனது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

 

 ஒருசிலருக்கு பணப்பிரச்சனை, ஒருசிலருக்கு மன பிரச்சனை என பலவித பிரச்சினைகளை மனிதன் தனது வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறான்.

 

ஆனால் இவற்றையும் தாண்டி ஒரு சிலருக்கு இனம் புரியாத பயம் இருந்துக்கொண்டிருக்கும். இந்த பயம் எதற்காக என்றும் தெரியாது.

 

 ஒரு சிலருக்கு தன்னை சுற்றி எவருக்கேனும் பிரச்சனை வருவதாக இருந்தாலும் அல்லது தனது வீட்டில் ஏதேனும் எதிர்மறை சூழல் வரப் போவதாக இருந்தாலும் இந்த பய உணர்வு ஏற்படும்.

 

 அவ்வாறு மற்றவர்களின் தீய எண்ணத்தால் நமது இல்லங்களில் எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்து கொண்டே இருக்கும்.

 

 இவ்வாறு நம்மை சுற்றி இருக்கும் இந்த எதிர்மறை அதிர்வலைகளை அடியோடு விரட்டவும், நமது மனதிற்குள் இருக்கும் பயத்தை ஒழிக்கவும் செய்ய வேண்டிய எளிய பரிகாரத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாம் வாழும் வீடு என்பது லட்சுமி கடாட்சத்துடன் இருக்க வேண்டும்.

 

 நமது வீட்டில் எப்போதும் நேர்மறை அதிர்வுகள் இருக்க வேண்டும். இவ்வாறு நமது வீடு சுபிட்சத்துடனும், மகாலட்சுமி அம்சத்துடனும் இருந்தது என்றால் வீட்டிற்குள் வரும் தீயவர்களின் எண்ணமும், அவர்கள் செய்ய நினைக்கும் தீமையும் பலிக்காமல் போகும்.

 

 ஆனால் ஒரு சிலரின் மன பயத்தின் காரணமாக இரவில் அவர்களுக்கு உறக்கம் வராது.

 

யாரோ தன்னை பின் தொடர்வது போன்ற உணர்வு ஏற்படும். எப்பொழுதும் பதட்டத்துடனே இருப்பார்கள்.

 

 தங்கள் வீட்டில் நடக்கும் இனிய சம்பவங்களில் கூட அவர்களின் மனது முழுமையாக ஈடுபடாது. இப்படி எதிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருப்பார்கள்.

 

 இவ்வாறான பிரச்சனைகளில் இருந்து விடுபட நமது இல்லங்களில் வாரம் தோறும் செய்ய வேண்டிய சில பூஜை முறைகள் இருக்கின்றன.

 

அதற்கு முதலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும்.

 

 அதிலும் சாம்பிராணிப் புகை போட்டு வீடு முழுவதும் காண்பிக்க வேண்டும்.

 

இவ்வாறு செய்வதன் மூலம் நமது வீட்டிலிருக்கும் எதிர்மறை அதிர்வுகள் அடியோடு அழிந்துவிடும்.

 

 அடுத்ததாக அனைவரும் தங்கள் இல்லங்களில் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வழிபடுவது வழக்கம் தான். ஆனால் வீட்டில் சுபிட்சம் நிலவவும், அதிர்ஷ்டம் வருவதற்கும் பஞ்சகவ்யா தீபத்தை ஏற்ற வேண்டும்.

 

இந்த பஞ்சகவ்யா தீபம் ஐந்து விதமான பொருட்களில் இருந்து செய்யப்பட்டது. இது பஞ்ச பூதத்தின் சக்தியை கொண்டுள்ளது.

 

 பஞ்சபூதங்களின் சக்திகள் நமது இல்லங்களில் பரவி இருந்தால் எந்த வித துர்சக்தியும் நமது வீட்டில் இருக்க முடியாது.

 

 இவ்வாறு வாரம் தோறும் பஞ்சகவ்ய விளக்கு ஏற்றுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

 

 அடுத்ததாக ஒரு சிறிய மண் பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதனை காலை சூரிய ஒளி படுகின்ற இடத்தில் வைத்துவிட வேண்டும்.

 

 பிறகு மாலை சூரியன் மறைந்ததும் இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விட வேண்டும்.

 

இவ்வாறு செய்வதன் மூலம் அனைத்திற்கும் முதன்மையானவராக சூரிய பகவானின் அருள் பெற்ற இந்த நீர் வீடு முழுவதும் பரவியிருக்க, நமது வீடு தூய்மை அடைந்துவிடும்.

 

 இதனையும் தொடர்ந்து செய்து வர நல்ல பலன் கிடைக்கும்🌹💐


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : உங்களுக்கு பயம் விலக வேண்டுமா? எளிய பரிகாரம் இதோ..!! - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Do you want to get rid of fear? Here is a simple solution..!! - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்