எல்லா உயிர்களையும் படைத்த இறைவன், அனைத்தும் தானாகவே ஆகி வியாபித்து நிற்கும் காலமே பிரதோஷம் என்பதால், பிரதோஷ விரதம் இருப்பதும், அன்று அரனை தரிசிப்பதும், அனைத்து வளமும் நலனும் கிட்டச் செய்யும்.
பிரதோஷ விரத பலன்கள் தெரிய வேண்டுமா? எல்லா உயிர்களையும் படைத்த இறைவன், அனைத்தும் தானாகவே ஆகி வியாபித்து நிற்கும் காலமே பிரதோஷம் என்பதால், பிரதோஷ விரதம் இருப்பதும், அன்று அரனை தரிசிப்பதும், அனைத்து வளமும் நலனும் கிட்டச் செய்யும். சாண்டில்ய முனிவரிடம் உபதேசம் பெற்று இவ் விரதத்தைக் கடைப்பிடித்த ஓர் ஏழைப் பெண், விரத பலனால் அரச வாழ்வு பெற்றாள் என்கிறது புராணம். ''அரி நாமம் சொல்ல அதிகாலை நேரமும், அரன் நாமம் சொல்ல அந்தி நேரமான பிரதோஷ காலமும் சிறப்பானது'' என்கிறார், காஞ்சி பரமாச்சார்யார். "தேவரும் முனிவரும் பிரதோஷ வேளையில் ஈசனைப் பணிவதோடு, அவனை வணங்கிடும் அடிய வர்க்கு அனைத்து நலன்களையும் மனமுவந்து அளிக் கிறார்கள்'' பிரமோத்ரகாண்டம், இப்படிச் சொல்கிறது. • ஞாயிற்றுக்கிழமையில் வரும் பிரதோஷ வழிபாடு சுப மங்களம் தரும். • திங்கட்கிழமை செய்யும் பிரதோஷ வழிபாடு, நல்லெண்ணம் ஏற்படுத்தும், • செவ்வாய்க் கிழமை பிரதோஷ வழிபாடு பஞ்சம், பட்டினி அகற்றும். • புதன்கிழமை செய்யும் பிரதோஷ வழிபாட்டினால் சந்தான பாக்யம் கிட்டும். • வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷ விரதத்தினை அனுஷ்டிப்பது, அறிவையும் ஞானத்தையும் தரும். • வெள்ளிக்கிழமை வரும் பிரதோஷம் எதிர்ப்புகளை அகற்றும். • சனிக்கிழமைகளில் அனுஷ்டிக்கும் மஹாப் பிரதோஷம், பதவி, புகழ் போன்றவற்றைத் தருவதோடு மாயைகளில் மாட்டிக் கொண்டு அலைக்கழியாத நிலையையும் அளிக்கும். எனவே, எல்லாமே ஒன்றான பரம்பொருளாக இறைவன் விளங்கும் பிரதோஷ காலத்தில் நாமும் ஆண்டவனை வணங்கி, நலமும் வளமும் பெறலாமே! சகல தோஷமும் போக்கி சந்தோஷம் அளிக்கும் பிரதோஷ விரதம் இருந்து விடைவாகனன் அருளால் பேறுகள் பலவும் பெற்றிடுங்கள். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: சிவன் : பிரதோஷ விரத பலன்கள் தெரிய வேண்டுமா? - சிவன் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: sivan : Do you want to know the benefits of pradosha fast? - sivan - Spiritual Notes in Tamil [ spirituality ]