நாம் யோகம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் ‘யோகாசனம்' யோக முறைகளின் ஒரு பகுதியே ஆகும்.
யோக முறைகள், ஆசனங்கள் அறிய வேண்டுமா?
நாம் யோகம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் ‘யோகாசனம்' யோக முறைகளின் ஒரு பகுதியே ஆகும். யோகம் கீழ்வருமாறு
வகுக்கப்படுகிறது.
ராஜ யோகம்
ஆழ்மனத்தை உற்று நோக்கி அதைத் தன் வழிப்படுத்தி, இறைவனை அடைதலே பிறப்பின் நோக்கம் என்று உணர்ந்து அட்டாங்க
யோகத்தைப் பின்பற்றுவது ராஜ யோகமாகும்.
கரும யோகம்
கருமம் - செயல். தீய எண்ணங்களைக் களைந்து, சுயநலம் இன்றி பிறருக்காக வாழ்ந்து தியாக உணர்வுடன் மனித
சமுதாயத்துக்குத் தொண்டு செய்து அதன்மூலம் இறையை உணர்தல்.
ஞான யோகம்
பிறப்பினால் அறியாத இறைவனை ஞானத்தால் உணர்ந்து, அதை அடையும் அறிவையும் வழிமுறைகளையும் தெளிந்து,
ஆணவம், கன்மம், மாயை என்ற
மூன்று ‘எதிரி' களை நீக்கி இறையை உணரலாம்.
பக்தி யோகம்
மனத்தின் ஆழ்நிலையில் இறைவனை 'உணர்ந்து'
தன்மை உணர்ந்து அன்பு கொண்டு அந்த எண்ணத்திலேயே மூழ்கி உயிர்களுக்குத்
தொண்டு செய்து இறையை உணர்தல்.
இந்த பக்தி யோக முறையில், இறையின்
மீது அன்பு கொண்டு அதன் தன்மையையும் ஆற்றலையும் பாடல்களாகவும், மந்திரங்களாகவும் தொடர்ந்து பாடுவதால், இது ‘மந்திர யோகம்' என்றும் அழைக்கப்படுகிறது.
குண்டலினி யோகம்
‘குண்டலினி' என்னும் உயிர் சக்தியை,
உடலின் ஆறு ஆதாரங்கள் வழியாக மேலே ஏற்றி புருவ மையத்துக்குக் கொண்டு
சென்று அதன் மூலம் முக்காலமும் உணர்தல் ; இறையை உணர்தல்.
இவ்வகை யோகத்தில், மூலாதாரம் என்னும்
கடைசி நரம்பு முடிச்சில் இருந்து சுவாதிட்டானம், மணிபூரகம்,
அநாகதம், விசுத்தி வழியே ஆக்கினை வரை எடுத்துச்
செல்வதாகும். குண்டலினி யோகத்தை, குருவின் அறிவுரைப்படி முறையாகச்
செய்தால், யோகம் செய்யும் போது ஏற்படும் மனசஞ்சலங்களைத் தவிர்க்க
முடியும்.
அத யோகம்
பிராணாயாமத்தையும் ஆசனங்களையும் தியானத்தையும் ஒருங் கிணைத்து இறைநிலையை
அடைதல்.
பிராணாயாமம்
நவீன உலகில், மக்கள் தங்கள் உடலை முறைப்படுத்த
விளையாட்டுக்களிலும் ஓடுவதிலும் நீந்துவதிலும், உடற்பயிற்சிகள்
செய்வதிலும் ஈடுபடுகின்றனர். அவ்வாறு செய்யும் போது இயல்பான சுவாச நிகழ்வுகளை விட சுவாச
எண்ணிக்கையும் பிற நிகழ்வுகளும் உயருகின்றன. அப்போது, சுவாசத்தைக்
கட்டுப்படுத்தும் மத்திய நரம்பு மண்டலமும் உணர்வுகளும் மனதும் தூண்டப்படுகின்றன. ஆனால்,
பிராணாயாமத்தின் போது, தானாக நடக்கும் சுவாசம்
முறைப்படுத்தப்படுவதுடன், உணர் நரம்புகளும், மத்திய நரம்பு மண்டலத்தின் சுவாசப்பகுதியும் அதிகத் தூண்டலுக்கு ஆளாகாமல் இயல்பாக
இயங்குகின்றன.
பிராணாயாமத்தின் வகைகள்:
1. உஜ்ஜயி பிராணாயாமம்
2. விலோம பிராணாயாமம்
3. அனுலோம் பிராணாயாமம்
4. பிரதிலோம பிராணாயாமம்
5. கபாலபதி பிராணாயாமம்
6. பஸ்திரிகா பிராணாயாமம்
7. சீதல பிராணாயாமம்
8. சீதகாரி பிராணாயாமம்
9. பிராமரி பிராணாயாமம்
10. மூர்ச்ச பிராணாயாமம்
11. இடகலை (சூரிய பேத ) பிராணாயாமம்
12. பிங்கலை (சந்திர பேத) பிராணாயாமம்
பிராணாயாமத்தின் போது மனம் ஒன்றுபட்டு, உடலுக்குப் பெரும் சக்தியைத் தருகிறது.
யோகாசனம் (இருக்கை நிலை)
ஒரு குறிப்பிட்ட இருக்கை நிலையில் இருந்து உடலையும் மனத்தையும் ஒருங்கிணைப்பது
யோகாசனமாகும். இது யோக நிலைகளில் ஒன்றாகும். எனினும், தற்போது நோய்களை நீக்கும் சிகிச்சை முறையாகவும் பயன்படுத்தப்படுகிறது.
திரிகோணாசனம்
இடுப்பு, தொடை, கால் தசைகளுக்கு வலுவைத் தருகிறது. தண்டுவட வலி தீருகிறது.
பர்வதாசனம்
கால்கள், முழங்கால், தொடை இவற் றுக்குப் பலம் அளிக்கிறது. உடலின் சம நிலைக்கும் உதவுகிறது. தோள்பட்டை,
கைகள், முழங்கால் இவற்றில் ஏற்படும் வலியைப் போக்குகிறது.
புஜங்காசனம்
பாம்பு தலையை தூக்கியது போல் இருப்பதாலும், கைகளைத் தூக்கியவாறு இருப்பதாலும் இது புஜங்காசனம் என்று
அழைக்கப்படுகிறது. கழுத்து, இடுப்பு, முதுகுப்புற
தசைகளுக்கு வலு அளிக்கும் தன்மையுடையது. இது கழுத்தின் எலும்புத் தேய்வு நோய்களுக்கும்,
தோள்பட்டையின் வலிக்கும் ஏற்றது. இந்த ஆசனம் செய்யும் போது வயிறு,
குடல், கல்லீரல், மண்ணீரல்
பகுதிகள் இழுக்கப்படுவதால் இவை சார்ந்த பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
தடாசனம்
கால்களுக்கும் பாதங்களுக்கும் பலம் தருகிறது.
அர்த்தசந்ராசனம்
பாதி நிலவின் வடிவம் போல் உடலை வளைப்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. வயிற்று
உள் உறுப்புகளுக்கும், ஜீரண உறுப்புகளுக்கும்
புத்துணர்ச்சி தரும். உடலுக்கு நல்ல தோற்றத்தைக் கொடுக்கும்.
ஹலாசனம் (கலப்பை ஆசனம்)
முதுகுத்தண்டு வலி, மாதவிடாய்க் கோளாறுகளுக்கு
ஏற்றது.
பச்சிமோதாசனம்
பச்சிமோ என்றால் மேற்கு அல்லது பின்புறம் என்று பொருளாகும். பின்புறத்
தசைகளையும், முதுகுத் தண்டையும் நன்கு வளைக்கும்
தன்மையுடையது. இந்த ஆசனம் வயிற்றுப் பகுதியில் இருக்கும் தசைகளை இறுக்கும் தன்மையுடையது.
மலச்சிக்கல், பசியின்மைக்கு மிகவும் ஏற்ற ஆசனமாகும். மனச்சிதைவு,
அதிக ரத்த அழுத்தம், மன அமைதியின்மை, தூக்கமின்மை இவற்றுக்குச் சிறந்த ஆசனமாகும். விதைப்பை,, கருப்பை, சிறுநீர்ப் பை சார்ந்த நோய்களுக்கும் ஏற்ற ஆசனமாகும்.
மண்டூகாசனம்
தவளையின் அமைப்பைப் போன்ற இந்த ஆசனத்தைச் செய்யும் போது, வயிற்றின் உள் உறுப்புகள் அழுத்தப்படுவதால் வயிற்று நோய்கள்
தீரும். கைகளுக்கும் கால்களுக்கும் பலம் தருகிறது.
சிரசுபாதாசனம்
இந்த ஆசனத்தின்போது, தலையின் மீது பாதம்
வைக்கப்படுகிறது. இது தனுராசனத்தைப் போன்று இருந்தாலும் சில குறிப்பிட்ட பலன்களைத்
தரவல்லது. முதுகுத் தண்டு தசைகளுக்கு வலு அளிக்கக் கூடியது. கழுத்து, தோள்பட்டை, தொடைகள், கால்களின்
தசைகளுக்கு வலு அளிக்கக் கூடியது. சிறுநீரகக் கோளாறுகளுக்கு ஏற்றது. வயிறு மற்றும்
தொடைப் பகுதிகளில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும் தன்மை உடையது.
உக்கட்டாசனம்
நாற்காலியைப் போன்ற தோற்றமுடைய இந்த ஆசனத்தைச் செய்தால் தோள்பட்டை வலி, கழுத்து வலி, முழங்கால் வலி நீங்கும்.
இதயத் துடிப்பைச் சீராக்குவதுடன், உதரவிதானத்தின் செயலை முறைப்படுத்துகிறது.
சலபாசனம்
இடுப்பு, நுரையீரல், கழுத்து, தோள்பட்டை இவற்றுக்கு வலு சேர்க்கும்.
விருக்சாசனம்
மரத்தைப் போன்ற அமைப்புடைய இந்த ஆசனத்தைச் செய்தால் மனத்தின்மையும், மனம் ஒன்றுபடுதலும் ஏற்படும். கால்களில் வலி,
முழங்கால் வலி, பிற மூட்டுகளின் வலி தீரும்.
தனுராசானம்
சிறுகுடல், பெருங்குடல் நோய்கள்,
மலச்சிக்கல் போன்றவை தீரும்.
பத்மாசனம்
உடலுக்கும் உள்ளத்துக்கும் வலு அளிக் கிறது. மனத்தை ஒருங்கிணைக்கிறது.
மச்சாசனம்
கழுத்து வலி, மூலம், இடுப்பு வலி தீரும்.
கருடாசனம்
கழுகின் தோற்றத்தைப் போன்ற இந்த ஆசனத்தைச் செய்வதால், கை, கால்களுக்குப் பலம் கிடைக்கும்.
கெண்டைக்கால் சதையில் ஏற்படும் வலி நீங்கும்.
மயூராசனம்
மலச்சிக்கல், வயிற்று நோய்கள்,
ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கு ஏற்றது.
பாதஹஸ்தாசனம்
நின்ற நிலையில், கைகளையும் கால்களை
யும் சேர்க்கும் இந்த ஆசனத்தைச் செய்வதால் வயிறு, கல்லீரல்,
சிறுநீரகம் இவற்றின் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மலச்சிக்கல்,
குடல் நோய்கள், இடுப்புவலி, குதிகால் வலி தீரும்.
நடராச ஆசனம்
உடலுக்கு வலிமையையும் அழகையும் தருகிறது. கால்களுக்கு வலு சேர்க்கிறது.
சக்கராசனம்
சக்கரத்தைப் போன்ற அமைப்பு உடையதாக இருப்பதால், சக்கராசனம் என்று அழைக்கப்படுகிறது. எனினும்,
முழு சக்கரத்தின் அமைப்பைத் தரும் ஆசனம் பூரண சக்கராசனம் என்று அழைக்கப்படுகிறது.
முதுகு, இடுப்பு வலிகளுக்கு ஏற்ற ஆசனமாகும். இந்த ஆசனத்தின்போது,
கழுத்திலும் முதுகிலும் இடுப்பிலும் கால்களிலும் உள்ள எல்லா தசைகளுக்கும்
வலுவளிக்கப்படுகிறது. தொண்டை நோய்க்கும் தலைவலிக்கும் ஏற்ற ஆசனமாகும். கண்ணின் பார்வைத்
திறனை அதிகரிக்கக் கூடியது.
வடயனாசனம்
குதிரையைப் போன்ற தோற்றம் அளிக்கக் கூடிய இந்த ஆசனத்தைச் செய்வதால் முட்டி
வலி, கால் வலி நீங்கும். கைகளுக்கும் விரல்களுக்கும் நல்ல
பலம் கொடுப்பதால் கைவினைஞர்களுக்கும், நுண்வேலைகள் செய்பவர்களுக்கும்
ஏற்றது.
சுத்தவீராசனம்
வீராசன நிலையிலேயே படுத்திருப்பது சுத்த வீராசனமாகும். கழுத் துக்குப்
பலம் தருகிறது. ஜீரணத்தை அதிகப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. இரவில் சாப்பிட்ட
பிறகு, படுக்கச் செல்வதற்கு முன் இந்த ஆசனத்தை செய்வது நல்லது.
வஜ்ராசனம்
வைரத்தின் தோற்றத்தைப் போல் இருக்கும் இந்த ஆசனத்தைச் செய்வதால், இளமையும் வலிமையும் வீரியமும் உண்டாகும். ஆண்மைக் குறைபாடு
இருப்பவர்களுக்கும், விந்து உற்பத்திக் குறைபாடு இருப்பவர்களுக்கும்
ஏற்ற ஆசனமாகும்.
மச்சாசனம்
மீனைப் போன்று தோற்றம் அளிக்கும் இந்த ஆசனத்தைச் செய்வதால், கழுத்து, தோள்பட்டை வலி நீங்கும்.
சுவாச உறுப்புகள் சீரடையும். முதுகுத்தண்டு தசைகள், இடுப்புத்
தசைகள் வலுப்பெறும்.
சுகாசனம்
எளிதாகவும் வசதியாகவும் இருக்கும் இந்த ஆசனம், மன மகிழ்ச்சிக்கும், மன ஒருங் கிணைப்புக்கும்
ஏற்றது. கால் மூட்டுகள், தொடைகளில் ஏற்படும் வலியைப் போக்கும்.
நவாசனம்
படகின் வடிவத்தைப் போன்ற இந்த ஆசனம், இடுப்பு வலி மற்றும் கால் தசைகளின் வலிக்கு ஏற்றது.
சிம்மாசனம்
சிம்மம் எனப்படும் சிங்கத்தைப் போன்று தோற்றம் அளிக்கக் கூடிய இந்த ஆச
னத்தைச் செய்வதால், முகத்துக்கு அழகையும்,
முக உணர்ச்சிகளை வெளிக்காட்டும் தசைகளுக்கு வலுவும் தரக்கூடியது. ஆசிரியர்கள்,
பாடகர்கள், பேச்சாளர்களுக்குக் குரல் வளத்தை மேம்படுத்த
இந்த ஆசனம் உதவும். காது களுக்குக் கூர்மையும், கண்களுக்குப்
பார்வைக் கூர்மையும் தருகிறது.
உசர்ட்டாசனம்
ஒட்டகத்தைப் போன்று தோற்றம் அளிக்கும் இந்த ஆசனத்தைச் செய்வதால், தோள்களுக்குப் பலமும், இடுப்புகளுக்கு
வலுவும் கிடைக்கும். நினைவுத் திறன்களை கூட்டும். சிறுநீரக நோய்களுக்கு ஏற்ற ஆசனமாகும்.
கோமுகாசனம்
பசுவின் தலையைப் போன்ற அமைப் புள்ள இந்த ஆசனத்தைச் செய்வதால், உடலின் எல்லா முட்டிகளின் வலியும் நீங்கும். கைகள்,
கால்களுக்கு வலு அளிக்கும். இடுப்பு வலி தீரும்.
குக்குடாசனம்
சேவலின் தோற்றத்தைப் போன்ற இந்த ஆசனத்தைச் செய்வதால், இடுப்பு வலி நீங்கும். அடிவயிறு சம்பந்தமான நோய்கள் தீரும்.
விளையாட்டு வீரர்களுக்கு ஏற்ற ஆசனமாகும். கைகளுக்கும் பலம் தருவதால், கைவினைஞர்களுக்கும் ஓவியர்களுக்கும் ஏற்ற ஆசனம்.
பகாசனம்
கொக்கு நிற்பதைப் போன்ற தோற்ற முடைய இந்த ஆசனம் கைகளுக்கும், தோள்பட்டை தசைகளுக்கும் வலு அளிக்கக் கூடியது. அடி வயிறு
மற்றும் தொடையின் மேல் பகுதிக்கு வலு அளிக்கக் கூடியது. வயிற்றுப் பகுதியில் இருக்கும்
அதிகப்படி கொழுப்பை கரைக்கும் தன்மை உடையது. சுவாச நோய்கள், வயிற்று
நோய்களைத் தீர்க்கும் தன்மையுடையது.
விருச்சிக ஆசனம்
தேள் போன்ற அமைப்பைக் கொண்டு இருப்பதால் விருச்சிக ஆசனம் என்று அழைக்கப்படுகிறது.
வயிறு, குடல் சார்ந்த நோய்களுக்கும், சிறுநீரக,
சிறுநீர்ப்பை, முதுகுத் தண்டு நோய்கள் போன்றவற்றுக்கும்
ஏற்ற ஆசனம். மன உளைச்சலைக் குறைக்கும் தன்மை யுடையது. மன ஒருங்கிணைப்புக்கு ஏற்றது.
கால்கள், முழங்கால், தொடைப் பகுதிகளுக்கு
வலு அளிக்கக் கூடிய ஆசனமாகும்.
சர்வாங்காசனம்
இதன் பெயரை வைத்தே உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஏற்ற ஆசனம் என்பது புரியும்.
தலையும் கழுத்தையும் தவிர, முழு உடம்பும் மேல் நோக்கியிருக்கும்
இந்த ஆசனத்தைச் செய்வதால் உடல் முழுவதும் புத்துணர்ச்சி, கண்களுக்குப்
புத்துணர்ச்சி, ஞாபக சக்தி அதிகரித்தல், வயதாவதைக் குறைக்கும் தன்மை, மன அழுத்தம், தூக்கமின்மை, மலச்சிக்கல், வயிற்று
நோய்கள் போன்றவை குணமாகும்.
விபரீதகரணி
உடல் மட்டும் மேல்நோக்கி இருக்கும் இந்த ஆசனம், உடல் எடையைக் குறைப்பதில் பெரிதும் உதவும் ஆசனமாகும்.
உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. சுவாச நோய்கள், மூளையின் ஞாபக சக்தி தொடர் பான நோய்களுக்கு ஏற்ற ஆசனமாகும். முகம்,
கழுத்து இவற் றுக்கு வலுவையும் பொலிவையும் அளிக்கக் கூடிய ஆசனமாகும்.
கூர்மாசனம்
ஆமையின் வடிவத்தைப் போன்ற இந்த ஆசனத்தைச் செய்வதால், மனத்துக்கு மகிழ்ச்சியும், மன ஒருங்கிணைப்பும்,
மன அமைதியும் கிடைக்கும். அதிக ரத்த அழுத்தம், மனக்கவலை, மன உளைச்சல் இவற்றுக்கு ஏற்ற ஆசனமாகும்.
சித்த மருத்துவத்தில் ஏராளமான ஆசனங்கள் இருக்கின்றன. இருந்தாலும் அவற்றில்
முக்கியமான சில ஆசனங்கள் மட்டும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. எல்லா ஆசனங்களும் முறை
யாகக் கற்றுத்தேர்ந்தவர்களின் மேற்பார்வையிலும் அறிவுரை யின் படியும் செய்தால் உடல்
நலத்துக்கு நல்லது. குறிப்பாக, சில நோயாளிகளுக்கு
சிலவகை ஆசனங்கள் தவிர்க்கப்பட வேண்டும். எனவே, ஆசனங்களை முறையான
மேற்பார்வை யாளர் அறிவுரைப்படி செய்தல் அவசியமாகும்.
சித்தா மருத்துவம் : யோக முறைகள், ஆசனங்கள் அறிய வேண்டுமா? - சித்தா மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : Do you want to know yoga postures and asanas? - Siddha medicine in Tamil [ Health ]