ஜாதகத்தில் விதி என்று ஒன்றைச் சொன்னால், அதற்கு விதிவிலக்கு என்று நான்கு விஷயங்கள் இருக்கின்றன.
நினைத்தது நடக்க வேண்டுமா?
*ஜாதகத்தில் விதி என்று
ஒன்றைச் சொன்னால், அதற்கு
விதிவிலக்கு என்று நான்கு* *விஷயங்கள் இருக்கின்றன*.
*ஆனால்*
*பிரபஞ்ச சூட்சும
விதிகள் மிகத் தெளிவாக இயங்குகிறது.*
*ஜாதகத்திலேயே*
*கிடைக்கப் பெறாது என்று கூறப்படும்* *அனைத்தையும்*
*எண்ணங்களின்*
*வலிமையினால் பிரபஞ்ச விதிகளின்படி மனதை நிலைநிறுத்தினால் அவை* *சாத்தியமாகின்றன
என்பதே நிதர்சனமான உண்மை 👍🙏🌸🌸*
*நீங்கள் செய்யும் செயல்களிலே
உங்களுக்கே 1௦௦% நம்பிக்கை, அதுவும் முழுமையான நம்பிக்கை இல்லாத பொழுது அந்த
செயல்கள் எந்த தருணத்திலும் உங்களுக்கு வெற்றியைத் தந்து விடாது.* மாறாக 1௦௦ சதவீதத்திற்கு
மேலே வைக்கிற ஒவ்வொரு சதவீதத்திலுமே உங்களுக்கான வெற்றியின் விரைவுத் தன்மை
இருக்கிறது. அதற்க்கு நம்பிக்கையின் சதவீதம் நூற்றுக்கு மேலே பன்மடங்கு ஆத்மார்த்த
முழுமையான, நிறைவான எந்தவித கடுகளவு சந்தேகமும் நுழையா வண்ணம் உங்கள் மனம் இருக்க
வேண்டும். வெற்றி தான் செயலின் முடிவாக கருத வேண்டும். உங்கள் செயல்களோ விரைவில்
வெற்றி அடைய வேண்டும் வழிகளில் இருக்க வேண்டுமே தவிர செயல்களில் வரும் தடைகளின்
வலிகளில் இருக்க கூடாது.
*வெற்றி தான் இலக்கு.
அதை நோக்கித் தான் இந்த ஒட்டு மொத்த வாழ்க்கை பயணமும்*
*சின்ன சின்ன தோல்விகளில்
ஏதோ ஒன்றாவது புதிதாக நமக்குத் தேவையான எதையாவது ஒன்று கற்றுக் கொள்ள முடியுமா
எனப் பாருங்கள்.*
*நம்முடைய தோல்விகளின்
மூலமாக கற்றுக் கொள்கின்ற பாடத்தை விட எவருடைய சாதனை சரித்திர வரலாறுகளும், வெற்றிக்
கதைகளுமே அந்த அனுபவத்தை எளிதில் யாருக்கும் தந்து விடப் போவதில்லை*
*யாரிடம் செல்வத்தை
பற்றி தீரா தாகமும், கொழுந்துவிட்டு
எரியும் ஆவலும் இருக்கிறதோ அவர்கள் நிச்சயம் அதை அடைவது உறுதி*
*🌟❤️தினமும் ஒரு அதிசயம் நடைபெற்று வருகிறது 🌟பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி❤️🌟*
*கிடைத்ததெல்லாம் எண்ணி,
எண்ணி பார்த்தால், எண்ணியது தான் கிடைத்திருக்கும். எண்ணத்தின் வலிமை
புரிந்திருக்கும்.*
த - தரம்
கு - குணம்
தி - திறமை
தரம்
தரமான சிந்தனைகளின் தாய் வீடாக மனம் இருக்கட்டும், ஏனெனில் சிந்தனையின்
தரமே செயல்களின் தரமாக மலர்கின்றது.
குணம்
குணமும் பண்பும் நிலையான அடையாளங்களை மனித மனங்களில்
ஏற்படுத்துகின்றன.
திறமை
நாம் சந்திக்கும் சவால்கள், தடைகள், பிரச்சனைகள் தான் நம்முடைய
திறமைகளை வெளியே கொண்டு வருவதற்கு சரியான, பொருத்தமான, ஏற்ற வாய்ப்புகளை
உருவாக்கிக் நமக்கு கொடுக்கிறது. அவைகளை தீர்க்கும் ஆற்றலையும் பெருக்குகின்றன. ஆகவே
தகுதியை வளர்த்துக் கொள்வோம். ஆற்றலை பெருக்கிக் கொள்வோம்
💫பாதையை தேடுபவன் சாதாரண மனிதன்.....
பாதையை உருவாக்குபவன் சாதனை மனிதன்..
💫விடாமுயற்சி என்ற ஒற்றை நூல் சரியாக
இருந்தால், வெற்றி எனும் பட்டம் நம் வசமே...
👉அடுத்தவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள்
என்பதை அறிந்தால் அது அறிவு....😎*_
நாம் எவ்வாறு இருக்கிறோம் என்பதை உணர்ந்தால்
அதுஞானம்...😇*
எத்தனை சிறப்பான மிகப்பெரிய புரிதல் தன்மைகள் இருந்த போதிலும்,
சில நேரங்களில் நம்முடைய நடவடிக்கைகள் சந்தேகம் வரத் தூண்டுமானல் அந்த இடத்தில ’நம்பிக்கை’
சற்று உடைய ஆரம்பிக்கும்...
☘️☘️☘️
*வெறுமனே வேடிக்கை
பார்ப்பவர்களை வெற்றியும் வேடிக்கை தான் பார்க்கும் வளர்ச்சியும் வேடிக்கை தான்
பார்க்கும் இந்த சமூகமும் வேடிக்கை தான் பார்க்கும். ஒருபோதும் அழகுபடுத்தி
பார்க்காது.*
*கேட்டால்தான் கொடுக்கும் -*
🌹 *ஈர்ப்பு
விதி..*🌹
*கேட்காமலே கொடுக்கும்* -
💞 *பிரபஞ்சம்*..💞
*ஆனால் பிரபஞ்சத்தோடு லிங்க் ஆக வேண்டும் அவ்வளவுதான்...*
*வாழ்க்கையில்*
*நிறைய
மாற்றங்கள்*
*வரும்*
*ஆனால்
நாம்*
*எடுக்கும்
முடிவுதான்*
*மாற்றங்களை*
*கொண்டு
வரும்*
*என்பதை*
*மறந்து
விடாதீர்கள்.
அடைய வேண்டிய இலக்கு எவ்வளவு பெரியது என்பது
முக்கியம் அல்ல... உன் தன்னம்பிக்கையும் துணிச்சலும் அதைவிட பெரிது என்பது தான்
முக்கியம்.!
உலகில் எதுவுமே நிரந்தரம் என்பதே கிடையாது. இன்னும்
சொல்லப்போனால் மற்றவர்கள் உங்களை பற்றி மனதில் வைத்திருக்கும் மனப்பதிவுகள் கூட இங்கே
நிரந்தரம் கிடையாது.
*நாம எது நினைச்சாலும்
நடக்கும் ஆனால் என்ன ஆத்மார்த்தமான முறையில் கடுகளவு கூட சந்தேகமில்லாமல் நினைச்சா
நடக்கும்...
எவ்வளவு சீக்கிரம் நடக்கும்? அதுவும் உங்கள்
எண்ணங்களில் தான் இருக்கிறது...
*மனதால் நாம் கோடீஸ்வரராக முதலில் மாறி விட்டால்* *பணத்தால்
கோடீஸ்வரராவது மிக எளிது.*
*வாழ்க்கையில
சாதிக்கணும்னு எல்லாரும் நினைக்கிறாங்க* ஆனா எங்க, எப்படி சாதிப்பதுனு தெரியாம இருப்பது தான் நிறைய பேரோட
வேதனை.*
முடியாது என்று முடங்கி விட்டால் வேதனை.*_
முடியும் என்று எழுந்து விட்டால் சாதனை!*
உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது அதுவே எல்லாருடைய வாழ்க்கையிலும்
வரக் கூடியது. அதுவே நிலையானது; அனால் அந்த
மாற்றங்களுக்கு ஏற்ப நாம் மாறுதல் என்பதே அனைவருடைய வாழ்க்கையின் அனைத்து வெற்றியைத்
தீர்மானிக்கிறது!
சிலவற்றை யூகிக்க கற்றுக் கொள்ளுங்கள்....! அப்போதுதான் சில
உண்மைகள் மனதிற்கு விளங்க ஆரம்பிக்கும்........!
*முடிவெடுப்பவர்
முன்னேறிக்கொண்டே போகிறார்கள் முனங்கிக் கொண்டே இருப்பவர்கள் மூலையில் முடங்கி
கிடக்கிறார்கள்.
*உங்கள் ஆழ்மனம் என்ன
வேண்டும் என தீர்க்கமாக நினைக்குதோ அதை அந்த ஆண்டவன் தீர்க்கமா நிறைவேற்றிக்
கொடுத்துட்டுத்தான் மறுவேலையைவே பார்ப்பார்.*
*ஆதலால் முடிவெடுக்க
வேண்டியது நீங்கள் மட்டுமே.*
*கனவு காணுங்கள் உங்கள்
வாழ்க்கை வசந்தம் ஆகும்*
*கனவு என்பது
தூக்கத்தில் வருவது இல்லை உன்னை தூங்க விடாமல் செய்வது கனவு*
*உங்களுக்கான இலக்கை
ஆழ் மனதில் நினைத்து அந்த இலக்கு நடந்து இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக
இருப்பீர்களோ அதே மகிழ்ச்சியுடன் அடிக்கடி உங்கள் கற்பனையில் ஒரு சினிமா படம்
பார்ப்பது போல காட்சிப்படுத்தி பாருங்கள் நிச்சயமாக சர்வ சாதாரணமாக நடப்பதற்கு
உண்டான அனைத்து வழிகளையும் பிரபஞ்சம் ஏற்படுத்தி கொடுக்கும்*
*" ஒத்ததை
ஒத்தது ஈர்த்தே தீரும் "*
பிரார்த்தனைகளும், நம்பிக்கைகளும் நம்முடைய கண்ணுக்கு தெரியாத புலப்படா விஷயங்கள்.
ஆனால் அதே நேரத்தில் நமக்கு நடக்கவே நடக்கா, முடியவே முடியாது போன்ற அனைத்து
செயல்களையும் முடித்து காட்டும் மிகப் பெரிய வலிமை உடையவை*
*வருமானத்தில் ஐந்து
அல்லது பத்து சதவீதத்தை தானதிற்கென போட்டு வையுங்கள், மாதம் ஒருநாள் அதை தானமாக கொடுங்கள்,
கொடுப்பது பெருகும்*
*நம்முடைய செயலகள் பணத்திற்காக
மட்டும் வேலை செய்யும் சிந்தனைகளை, யோசனைகளை விட்டுவிட்டு, பணம் உங்களுக்காக வேலை செய்யும் வித்தைகளைப் பற்றி
கற்றுக்கொள்ள முயற்சி கொள்ளுங்கள்*
*செல்வந்தர்கள் இதனைத்தான் செய்கிறார்கள்*
*ஆழ்மனம் ஈசியாக
எளிமையாக பணத்தை சம்பாதிக்க வைக்கும்*
*பிச்சைக்காரர்கள் கூட
பிரபஞ்சத்தின் ரகசியங்களை என்னவென்று தெரியாமலே அதை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள்
நம்மால் முடியாதா என்ன?*
*நம்பிக்கைதான்
மனத்தின் ஆணிவேர். அந்த நம்பிக்கையானது ஒன்றரக் கலக்கும்போது ஆழ்மனம் அந்த அதிர்வை
உடனடியாக கிரகித்துக் கொள்கிறது பிறகு ஆழ்மனம் அதை முடிவில்லா பேரறிவுடன் அனுப்பி
வைக்கிறது*
*ஆகவே நமது இலக்கை முழு
நம்பிக்கையோடு முழுமனதோடு ஆழ்மனதில் பதிய வைத்தால், அதை அது பிரபஞ்ச பேராற்றலுக்கு அதிர்வலைகளாக அனுப்பி நம்
இலக்கினை அடைவதற்கான வாய்ப்புகளை நமக்குத் தொடர்ந்துக் கொடுத்துக் கொண்டே
இருக்கிறதl
நீங்கள் சும்மா படிக்க படிக்க உங்கள் ஆழ்மனதில் பதிந்து
நடக்க ஆரம்பித்து விடும் ..
அதனால்தான் நல்லது பேசு, நல்லது படி, நல்லது பாரு என்றெல்லாம்
சொன்னாங்க முன்னோர்கள் .....அந்த பெரியோர்களுக்கு நன்றி நன்றி. முதலில் நன்றி
உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். சின்ன சின்ன உதவிகளுக்கு எல்லாம் நன்றி சொல்ல
ஆரம்பியுங்கள்...
*அடுத்த கட்ட நகர்வு என்பது
அசால்ட்டாக நடந்து கொண்டிருக்கிறது*
*நீங்கள் மிகப்பெரிய
அளவில் வெற்றியையும் வளர்ச்சியையும் காண விரும்புகிறீர்களா...*
*அப்படின்னா சாக்கு
போக்குகளை கூறிக்கொண்டே இருக்காதீர்கள்.*
*அடுத்து அடுத்து
என்னவென்று துணிந்து செயல்பட தொடங்குங்கள்..*
*காலத்தை காதலியுங்கள்...*💞
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஊக்கம் : நினைத்தது நடக்க வேண்டுமா? - தகுதி, ஒத்ததை ஒத்தது ஈர்த்தே தீரும் [ motivation ] | Encouragement : Do you want what you want to happen? - Merit, like attracts like in Tamil [ முயற்சி ]