ஆஞ்சநேயருக்கு மாருதி என்று இன்னொரு பெயர் உண்டு.
மருத்துவர் மாருதி
ஆஞ்சநேயருக்கு மாருதி என்று இன்னொரு பெயர் உண்டு.
யுத்தகளத்தில் எதிரிகள் வீசிய மாயக் கணைகளால் இலக்குவன் உள்ளிட்ட படைவீரர்கள் பலர்
மயக்கமுற்றனர். அவர்களை உயிர்ப்பிக்க அருமருந்தான மூலிகைச் செடி. சஞ்சீவி மலையில்
இருக்கிறது என்று அறிந்ததும், அங்கு விரைகிறார் ஆஞ்சநேயர். எந்த மூலிகைச் செடி என்று
எப்டித் தேடுவது, அதற்கு
அவகாசமும் இல்லை. ஆகவே. தனது ஆற்றலால் மலையையே தூக்கி வந்துவிட்டார். வீரர்கள்
உயிர் பிழைத்தார்கள்.
ராவண வதம் முடித்து இராமன் முதலானோர் அயோத்தி திரும்பி,
இராமன் முடி சூட்டிய பின், தனக்கு உதவி செய்தவர்களுக்குத் தக்க வழங்கிக் பரிசுகளை
கொண்டி ருக்கிறார். எப்போதுமே எ ல் ல் ா ரும் எல்லோரிடத்திலும் ஏதாவது ஒரு உதவியை
எதிர்பார்த்து செய்வது கிடையாது. சிலர் எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் சில
உதவிகளைச் செய்வதும் உண்டு. அப்படி யாதொரு பரிசினையும் எதிர்பாராத அனுமன் வர,
இராமபிரான் அனுமனை ஆரத் தழுவிக்கொண்டு,
அனுமன் செய்த உதவிகளுக்கெல்லாம் எப்பரிசினாலும் ஈடுகட்ட
முடியாது எனப் புகழ்கிறார். சீதாப்பிராட்டிக்கோ அவருக்கு ஏதாவது ஒரு பரிசு தங்கள்
நினைவாகக் கொடுக்க வேண்டும் என்ற ஆவல்எழ, தன் கழுத்தில் அணிந்திருந்த இரத்தினங்கள் பதித்த விலை
உயர்ந்த மாலையைப் பரிசளிக்கிறார். அதைப் பெற்றுக் கொண்ட அனுமன்,
அந்த ரத்தினங்களை வெளியே எடுத்து, அதில் இராமர்சீதை தெரிகிறார்களா எனப் பார்க்கிறார். ஏனெனில்
அவர்களைவிட அவருக்கு உயர்வானது வேறொன்றுமில்லை. இதை அறியாத ஒரு சிலர் அனுமனைப்
பார்த்து நகைக்க, அனுமனோ
அனைவரும் அறியும் வண்ணம் தனது மார்பினைத் திறந்து. தன் இதயத்தில் இராமர் சீதை
வீற்றிருப்பதைக் காட்டுகிறார். ஆக இதுதான் அனுமன் தன் நெஞ்சைப் பிளந்து இராமர்
சீதை இருப்பதைக் காட்டிய நிகழ்வு.
இராமாயணத்தைப்போல மகாபாரதத்திலும் அனுமன் பற்றிய கதை
சொல்லப்படுகிறது. இங்கே பாண்டவர்களில் ஒருவனான பீமனுக்கு ஒரு வகையில் அண்ணன்
உறவாகச் சொல்லப்படுகிறார் அனுமன். பாண்டவர்கள் வனவாசத்தில் இருக்கும்போது. காட்டு
வழியே பீமன் பயணிக்கிறார். அங்கே வயோதிக் குரங்கு ஒன்று படுத்துக் கொண்டிருக்க,
அதன் வாலோ நீண்டு பீமன் நடந்து செல்லும் பாதையை அடைத்துக்
கொண்டிருந்தது.
பீமன் அதன் வாலைத் தள்ளி வைத்து விட்டுச் செல்லலாம் என
எண்ணி. வாலைத் தூக்க யத்தனிக்கிறார். ஆனால் சிறந்த பலசாலி எனப் பெயர் பெற்ற
பீமனாலேயே அந்த வாலினை அப்புறப்படுத்த இயலவில்லை.
பின்னர் பீமன், அது சாதரணக் குரங்கில்லை என உணர்ந்து,
மிகுந்த மரியாதையுடன் யாரென வினவிட, அனுமன் தான் யாரென்பதை பீமன் அறியச் செய்கிறார்.
வைகாசியில் அனுமன் ஜெயந்தி
அனுமனை நினைவு கூர அனுமன் ஜெயந்தியைக் கொண்டாடுகின்றனர்.
தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டும் அனுமான் ஜெயந்தி மார்கழி மாதம்,
அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று,
அனைத்து அனுமார் கோவில்களிலும், வைணவக் கோவில்களிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஆனால் பிற மாநிலங்களில் வைகாசி மாதம் வளர்பிறையில் வரும். தசமி திதியன்று,
அனுமன் ஜெயந்தியைக் கொண்டாடுகிறார்கள்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
ஆன்மீகம்: ஆஞ்சநேயர் : மருத்துவர் மாருதி - அனுமன் இதயத்தில் இராமர் - சீதை, வைகாசியில் அனுமன் ஜெயந்தி [ ஆன்மீகம் ] | spirituality: Anjaneya : Doctor Maruti - Rama in Hanuman's heart - Sita, Hanuman Jayanti in Vaikasi in Tamil [ spirituality ]