வாயு முத்திரையை நாம் தொடர்ச்சியாகச் செய்துவந்தால், நம் உடலில் உள்ள காற்று சமநிலையில் இருக்கும். இந்த முத்திரையை வஜ்ராசனத்தில் அமர்ந்து செய்வது அதிக பலனைத் தரும்.
வாயு முத்திரை சுவாசத்தை சரி செய்யுமா?
நாம் உணவின்றி சில
நாள்கள் வாழ முடியும். தண்ணீர் இல்லாமல் ஒரிரு நாள்கள் வாழலாம். ஆனால், காற்று இல்லாமல் வாழ
முடியாது. ஏன், சில நிமிடங்கள்கூட தாக்குப்பிடிக்க முடியாது.
அந்தவகையில், ஆக்ஸிஜன் எனப்படும் பிராண வாயு நாம் சுவாசிக்க மிகவும்
அவசியமாகிறது.
வாயு முத்திரையை நாம்
தொடர்ச்சியாகச் செய்துவந்தால், நம் உடலில் உள்ள காற்று
சமநிலையில் இருக்கும். இந்த முத்திரையை வஜ்ராசனத்தில் அமர்ந்து செய்வது அதிக
பலனைத் தரும்.
சுட்டு விரல் எனப்படும்
ஆள்காட்டி விரலை மடக்கி அதன் மேல் பெரு விரலை வைத்து அழுத்தும்போது, வாயு முத்திரை
கிடைக்கும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும்.
இந்த முத்திரையை முதலில்
ஐந்து நிமிடங்கள் செய்ய வேண்டும். பிறகு, படிப்படியாக நேரத்தை
அதிகரிக்க வேண்டும். அதிகபட மாக 45 நிமிடங்கள் செய்யலாம்.
வாயு முத்திரையைச்
செய்யும்போது, நம் உடலில் உள்ள சுழுமுனை நாடியில் பிராண சக்தி பாயத்
தொடங்குகிறது. இதனால் மன அமைதி, சுறுசுறுப்பு உண்டாகும். காற்று
சமநிலையில் இருக்கும். எல்லாவித நோய்களும் குணமாகும்.
1. பக்க வாதம்
குணமாகும்.
2. உடல் வலிகள்
நீங்கும்.
3. முதுகுத் தண்டுவட
வலிகள் நீங்கும்.
4. மூட்டு வலிகள்
நீங்கும்.
5. வயிற்றில் உண்டாகும்
வாயுத் தொல்லை நீங்கும்.
6. முகத்தில் உண்டாகும்
வாத நோய்கள் குணமாகும்.
7. படபடப்பு நீங்கும்.
8. அஜீரணம்,வாயுத் தொல்லை, பசியின்மை அகலும்.
9. மன இருக்கம்
நீங்கும்.
10. தெம்பு உண்டாகும்.
11. தொண்டையில் ஏற்படும்
அடைப்புகள் நீங்கும்.
இந்த முத்திரையை எல்லாக்
காலங்களிலும் செய்ய வேண்டியதில்லை. நோய்கள் குணமானதும் நிறுத்திவிடலாம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
யோக முத்திரைகள் : வாயு முத்திரை சுவாசத்தை சரி செய்யுமா? - செய்முறை, நேர அளவு, பலன்கள் [ ] | Yoga Mudras : Does a gas seal fix breathing? - Recipe, time scale, benefits in Tamil [ ]