பூதி முத்திரையை 'திரவ முத்திரை' என்றும் சொல்லலாம். நமது உடல் எடையில் பாதி அளவு நீரால் ஆனது. உடலில் உள்ள நீர் அதிகரிக்காமலும், குறைந்துவிடாமலும் சமநிலையில் வைக்க இந்த முத்திரை உதவுகிறது.
பூதி முத்திரை உடலில் நீர்ச்சத்தை கொடுக்குமா?
பூதி முத்திரையை 'திரவ முத்திரை' என்றும் சொல்லலாம். நமது
உடல் எடையில் பாதி அளவு நீரால் ஆனது. உடலில் உள்ள நீர் அதிகரிக்காமலும், குறைந்துவிடாமலும்
சமநிலையில் வைக்க இந்த முத்திரை உதவுகிறது.
நமது உடல் பாகங்கள்
அடிக்கடி நீர்ச்சத்து குறைவால் உலர்ந்து காணப்படும். உதாரணமாக, வாய் உலர்ந்துபோதல், கண்கள் ஈரமின்றி
காணப்படுதல் ஆகிய குறைபாடுகள் உருவாகலாம். இந்தக் குறைபாடுகளை, இந்தப் பூதி முத்திரை
சரி செய்கிறது.
மேலும், சிறுநீரகப்
பாதிப்புகளையும் இந்த முத்திரை சரி செய்கிறது. சிறுநீர்ப் பையில் ஏற்படும்
கோளாறுகளையும் சரி செய்கிறது. நாக்கில் சுவையை உணரவைக்கும் சக்தியை அதிகரிக்கச்
செய்கிறது. அதிகமாக உலர்ந்துபோகும் உடல் பாகங்களையும், வெப்பம் அல்லது
நெருப்பின் காரணமாக உலர்ந்துபோகும் பாகங்களையும் சரி செய்து, நீர்ச்சத்து
இருக்கும்படி செய்கிறது.
கட்டை விரலும், சுண்டு விரலும்
தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள், தளர்வாக நீட்டியபடி இருக்க வேண்டும். இரண்டு கைகளிலும்
செய்ய வேண்டும்.
தினமும் மூன்று முறை, பதினைந்து நிமிடங்கள்
வீதம் செய்ய வேண்டும். நின்ற நிலையிலோ, அமர்ந்த நிலையிலோ செய்யலாம்.
1. நாவின் சுவை உணர்வு
அதிகரிக்கும்.
2. உடலில் உள்ள
நீர்ச்சத்து சம நிலையில் இருக்கும்.
3. கண், வாய் ஆகியவை
உலர்ந்துபோகாமல் தடுக்கப்படும்.
4. சிறுநீரகக் கோளாறுகள்
குணமாகும்.
5. சிறுநீர்ப் பையில்
உள்ள தடைகள் அகலும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
யோக முத்திரைகள் : பூதி முத்திரை உடலில் நீர்ச்சத்தை கொடுக்குமா? - செய்முறை, கால அளவு, பலன்கள் [ ] | Yoga Mudras : Does boodhi mudra hydrate the body? - Method, Duration, Benefits in Tamil [ ]