இந்த சளி முத்திரை மற்றும் ஆஸ்துமா முத்திரை இரண்டும் சுவாசக் கோளாறுகளை நீக்குகின்றன. இந்த இரண்டு முத்திரைகளையும், ஒன்றன்பின் ஒன்றாக சிறிது நேர இடைவெளியில் செய்ய வேண்டும். இவற்றை இரு கைகளிலும் செய்ய வேண்டும்.
சளி முத்திரை (Bronchial Mudra)
செய்தால் மூச்சுத் திணறல் நீங்குமா?
இந்த சளி முத்திரை
மற்றும் ஆஸ்துமா முத்திரை இரண்டும் சுவாசக் கோளாறுகளை நீக்குகின்றன. இந்த இரண்டு
முத்திரைகளையும், ஒன்றன்பின் ஒன்றாக சிறிது நேர இடைவெளியில் செய்ய
வேண்டும். இவற்றை இரு கைகளிலும் செய்ய வேண்டும்.
சுவாசக் கோளாறு
ஏற்படும்போது,
தனிமை உணர்வு, மூச்சுத் திணறல், இல்வாழ்வில் பிரச்னைகள், கவலைகள் ஆகியவை
உருவாகின்றன. இத்தகைய உணர்வுகளால் மனநிலை பாதிக்கப்பட்டு மனஇறுக்கம் ஏற்படுகிறது.
நமக்குள் ஏற்படும்
எதிர்மறை உணர்வுகள் மற்றும் மனநிலையால் பெரிய அளவிலான சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.
இதனால், உடல் ரீதியாகத் தளர்ச்சி
ஏற்படுவதுடன் மன உளைச்சலும் அதிகமாகும். பயம்,சோகம்,மனநிறைவின்மை, எந்தப் பிரச்னையையும் பெரிதாக நினைத்தல், மனம் புண்படுதல் ஆகியவை
முக்கியக் காரணங்களாக அமைந்துவிடுகின்றன. இதனால், சுவாசக் கோளாறுகள் எளிதில்
நம்மைப் பற்றிக்கொள்கின்றன.
சளி முத்திரையை, தினமும் ஐந்து
நிமிடங்கள் வீதம் செய்து வர வேண்டும்.
கட்டை விரலின்
அடிப்பாகத்தை சுண்டு விரல் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். கட்டை விரலின் நடுப்
பகுதியை மோதிர விரல் தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். சுண்டு விரலும், மோதிர விரலும் இணைந்தபடி
இருக்க வேண்டும். நடு விரலானது கட்டை விரலின் மேல் பகுதியைத் தொட்டுக்கொண்டிருக்க
வேண்டும். ஆள்காட்டி விரல் நீட்டியபடி இருக்க வேண்டும். இந்த முத்திலையச் செய்யும்
போது மனம் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும்.
அந்த மன உணர்வு, மேல் வயிறு, அடி வயிறு, தொண்டை, முன் தலைப்பகுதி, உச்சந்தலைப் பகுதி
ஆகியவற்றுடன் ஒட்டி நிற்பதுபோல் இருக்க வேண்டும். சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே
விட வேண்டும். சுவாசத்தை வெளியே விடும்போது, தலை முதல் கால் வரை மன உணர்வு சென்று பின் இயல்பு
நிலைக்கு வர வேண்டும். அதாவது, ஒவ்வொரு பகுதியையும் நினைத்துப் பார்க்க வேண்டும். இந்தச் சளி
முத்திரையைச் செய்து முடித்த பின், ஆஸ்துமா முத்திரையையும் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.
அமர்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ இந்த
முத்திரையைச் செய்யலாம்.
1. எதிர்மறை உணர்வுகளை
ஏற்றுக்கொள்வதால் சுவாசம் சீராக இருக்கும்.
2. மூச்சுத் திணறல்
நீங்கும்.
3. சளி வெளியேறும்.
4. தனிமை உணர்வுகள்
அகலும்.
5. மனஇறுக்கம் குறையும்.
6. படிப்பில் கவனம்
செல்லும்.
7. வெறுப்புணர்ச்சிகள், உடல் வேதனைகள் நீங்கும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
யோக முத்திரைகள் : சளி முத்திரை (Bronchial Mudra) செய்தால் மூச்சுத் திணறல் நீங்குமா? - கால அளவு, செய்முறை, நிற்கும் நிலை, பலன்கள் [ ] | Yoga Mudras : Does Bronchial Mudra relieve shortness of breath? - Duration, Method, Standing Position, Benefits in Tamil [ ]