சங்கு முத்திரை செய்தால் குரல் வளமாகுமா?

செய்முறை, நேர அளவு, பலன்கள்

[ யோக முத்திரைகள் ]

Does Conch Stamping Improve Voice? - Recipe, time scale, benefits in Tamil

சங்கு முத்திரை செய்தால் குரல் வளமாகுமா? | Does Conch Stamping Improve Voice?

சங்குகளில் பல வகை உண்டு. அவற்றில் வலம்புரி சங்கே சிறப்பானது. சங்கு என்றால் 'நன்மையைக் கொண்டு வருவது' என்று பொருள்.

சங்கு முத்திரை செய்தால் குரல் வளமாகுமா?

சங்குகளில் பல வகை உண்டு. அவற்றில் வலம்புரி சங்கே சிறப்பானது. சங்கு என்றால் 'நன்மையைக் கொண்டு வருவது' என்று பொருள்.

நமது உடலில் உள்ள விசுத்தி சக்கரத்தில் ஏற்படும் நோய்களை இந்த முத்திரை குணப்படுத்துகிறது. விசுத்தி சக்கரத்தின் சக்தி மையம் தொண்டைப் பகுதியில் இருக்கிறது. சங்கு நேர்மறை சக்தியை அளிப்பதாக இந்துக்களிடையே நம்பிக்கை உள்ளது. சங்க முத்திரையை செய்யும்போது 'ஓம்' என்று பலமுறை சொல்ல வேண்டும். அப்போது, நம் உடலுக்குள் ஏற்படும் அமைதியான சூழ்நிலையை உணரலாம். இந்த முத்திரையைச் செய்வதன் மூலம் கோபத்தைக் கட்டுப்படுத்தி அமைதிகாண முடியும்.

செய்முறை

முதலில் இடது கட்டை விரலை வலது உள்ளங்கையில் பதியவைத்து, கட்டை விரல் தவிர மற்ற வலது கை விரல்களால் இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும். வலது பெரு விரல், இடது கையின் மற்ற நான்கு விரல்களைத் தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். இப்போது சங்கு போன்ற அமைப்பு கைகளில் உருவாகி இருக்கும். வலது கையின் பெரு விரலுக்கும் (கட்டை விரலுக்கும்), ஆட்காட்டி விரலுக்கும் இடையே சங்கின் வாய் போன்ற ஒரு ஓட்டை உருவாகி இருக்கும். இந்த ஓட்டை வழியே ஊதினால் சங்கொலி கேட்கும்.

இந்த முத்திரையை வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் இருந்தபடி செய்யலாம்.

நேர அளவு

ஆரம்ப நிலையில் 15 நிமிடங்கள் செய்யலாம். தினமும் மூன்று வேலைகளிலும் செய்யலாம். இதேபோல், கைகளை மாற்றியும் செய்யலாம். விரும்புகின்ற அளவில், விருப்பத்தைப் பொருத்துச் செய்யலாம். நம்முடைய தேவைகள் நிறைவேறும் காலம் வரை செய்யலாம்.

இடது கை கட்டை விரலோடு (நெருப்பு என்ற பூதம்), வலது கையில் காற்று, ஆகாயம், நீர், நிலம் என நான்கு விரல்கள் சேர்கின்றன.

பலன்கள்

1. உடல் வலிமை அடையும்.

2. மன அமைதி உண்டாகும்.

3. விசுத்தி, மணிபூரகச் சக்கரங்கள் வலுவடையும்.

4. குரல் வளம் பெருகும்.

5. திக்குவாய் சரியாகும்.

6. தொண்டை சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

7. உணவு நன்கு ஜீரணமாகும்.

8. குடல் நோய்கள் குணமாகும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

யோக முத்திரைகள் : சங்கு முத்திரை செய்தால் குரல் வளமாகுமா? - செய்முறை, நேர அளவு, பலன்கள் [ ] | Yoga Mudras : Does Conch Stamping Improve Voice? - Recipe, time scale, benefits in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்