இது எளிமையாகச் செய்யக்கூடிய முத்திரை. ஆனால், அதிக பலனைத் தரக்கூடியது.
கருட முத்திரை ரத்தம் சீராக தடையின்றிச் செல்ல வைக்குமா?
கருடன், மகாவிஷ்ணுவின்
வாகனமாகும். கருடன், பறவைகளின் அரசன். கருட முத்திரை, உள் உறுப்புகளில் ஏற்படும்
நோய்களைக் குணப்படுத்துகிறது. இந்த முத்திரை, உடலில் எல்லாப் பாகங்களுக்கும் ரத்தம் சீராக
தடையின்றிச் செல்ல உதவுகிறது.
இது எளிமையாகச்
செய்யக்கூடிய முத்திரை. ஆனால், அதிக பலனைத் தரக்கூடியது.
இரண்டு கை கட்டை
விரல்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும். உள்ளங்கைகள் உடலை நோக்கியபடி இருக்க
வேண்டும். மற்ற நான்கு விரல்களும் நேராகவும், விரிந்தும் இருக்க வேண்டும். இடது கையின் மேல் வலது கை
இருக்க வேண்டும். இந்தத் தோற்றம், கருடன் சிறகடித்துப் பறப்பதைப்போல் காணப்படுவதால்தான், இதற்கு கருட முத்திரை
என்று பெயர்.
உடலில் நான்கு இடங்களில்
இந்த முத்திரையைப் படும்படி செய்ய வேண்டும். முதலாவதாக, கருட முத்திரையை
அடிவயிற்றுப் பகுதியில் வைக்க வேண்டும். இப்போது நமது சுவாசத்தை நன்கு இழுத்து விட
வேண்டும். இவ்வாறு பத்து முறை சுவாசிக்க வேண்டும்.
இரண்டாவதாக, கருட முத்திரையை நாபிப்
(தொப்புள்) பகுதியில் வைக்க வேண்டும். முன்புபோல் பத்து முறை சுவாசத்தை நன்கு
இழுத்து விட வேண்டும்.
மூன்றாவதாக, கைகளை மேல் வயிற்றில்
நாபிக்கும் விலா எலும்புப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து, பத்து முறை சுவாசத்தை
இழுத்து விட வேண்டும்.
நான்காவதாக, நெஞ்சுப் பகுதியில்
வைத்து, பத்து முறை சுவாசத்தை
இழுத்து விட வேண்டும்.
இவ்வாறு உடலில் நான்கு
முறை நான்கு வெவ்வேறு இடங்களில் வைத்து சுவாசத்தை இழுத்து விட வேண்டும். இதற்கு
சுமார் 5 அல்லது 6 நிமிடங்கள் ஆகும். தினமும் நான்கு முறை செய்யலாம். வெறும் வயிற்றிலோ
அல்லது உணவு உட்கொண்ட பிறகு சுமார் மூன்று மணி நேரம் கழித்தோ செய்ய வேண்டும்.
1. ரத்த ஓட்டம்
சீரடைகிறது.
2. நன்கு மூச்சை
இழுத்துவிடுவதால் உடலுக்குப் பிராண வாயு கிடைத்து, உடல் புத்துணர்ச்சி பெறுகிறது.
4. அடிவயிற்றில் கருட
முத்திரையை வைப்பதால், சுவாதிஸ்டான சக்கரம் தூண்டப்படுகிறது.
5. தொப்புள் பகுதியில்
வைப்பதால்,
நாபிச் சக்கரம்
தூண்டப்படு கிறது.
6. மேல் வயிற்றில்
வைப்பதால்,
மணிபூரகச் சக்கரம்
தூண்டப்படு கிறது.
7. மார்புப் பகுதியில்
வைப்பதால்,
அந அநாஹதச் சக்கரம்
தூண்டப்படுகிறது.
8. உடலின் உட்புறத்தில்
ஏற்படும் நோய்கள் குணமாகின்றன.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
யோக முத்திரைகள் : கருட முத்திரை ரத்தம் சீராக தடையின்றிச் செல்ல வைக்குமா? - செய்முறை, பலன்கள் [ ] | Yoga Mudras : Does Garuda Mudra make the blood flow smoothly and without obstruction? - Recipe, Benefits in Tamil [ ]