லிங்க முத்திரை உடல் எடையை குறைக்குமா?

செய்முறை, நேர அளவு, வேலை செய்யும் விதம், பலன்கள்

[ யோக முத்திரைகள் ]

Does Linga Mudra cause weight loss? - Recipe, time scale, working method, benefits in Tamil

லிங்க முத்திரை உடல் எடையை குறைக்குமா? | Does Linga Mudra cause weight loss?

சிவலிங்கத்தின் பெயரைக் கொண்டு இந்த முத்திரை அமைந்துள்ளது.

லிங்க முத்திரை உடல் எடையை குறைக்குமா?

சிவலிங்கத்தின் பெயரைக் கொண்டு இந்த முத்திரை அமைந்துள்ளது. ஒலி முதலிய புலன்களுக்கும், மனம், வாக்கு இவைகளுக்கு எட்டாததும், அளவற்ற பேரொலியாக இருப்பதும், அருவமாக நிர்மலமாக, உலகத் தோற்றத்துக்கும், ஒடுங்குவதற்கும் ஏற்றதாக உள்ள உருவம் லிங்கம். லிங்கத்தைக் குறி என்றும் சொல்வதுண்டு.

சிவாலயங்களில் பெரும்பாலும் சிவலிங்கமே மூலஸ்தானத்தில் எழுந்தருளி இருக்கும். லிங்கம் என்ற பெயரில் இருந்தே இந்த முத்திரையின் சிறப்பை அறியலாம். இந்த லிங்க முத்திரைக்கு அங்குஸ்த முத்திரை, பெருவிரல் முத்திரை என்ற பெயர்களும் உண்டு.

இந்த முத்திரை, பலவித நோய்களால் உடல் பாதிக்கப்படாமல் பாதுகாக்கிறது. இந்த முத்திரை, உடலின் வெப்பத்தை அதிகப்படுத்தும். எனவே, கோடைக் காலத்தில் குறைந்த அளவிலும், மழைக் காலத்தில் கூடுதலாகவும் செய்ய வேண்டும்.

செய்முறை

இடது கை பெரு விரலை வெளியில் தெரியுமாறு உயர்த்தி வைத்துக்கொண்டு பிற விரல்களை (இரண்டு கை விரல்களையும்) ஒன்றோடொன்று இணைத்துக்கொள்ள வேண்டும். (படத்தில் காட்டியபடி).

நேர அளவு

குறிப்பிட்ட நேரம் எதுவும் கிடையாது. அதேநேரம், நீண்ட நேரமும் செய்யக் கூடாது. தினமும் 45 நிமிடங்கள் செய்யலாம். ஒரே நேரத்தில் செய்வதைவிட, 15 நிமிடங்களாகப் பிரித்து மூன்று வேளை செய்யலாம்.

வேலை செய்யும் விதம்

இரண்டு கை விரல்களையும் இணைக்கும் போது அக்குபிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. உடலின் சூடு அதிகரிப்பதுடன், சளி, மூக்கடைப்பு போன்றவையும் அகலும்.

பலன்கள்

1. உடல் வெப்பம் அதிகரிக்கும். முத்திரை செய்யும் காலத்தில், பால், நெய், தண்ணீர், பழச்சாறு ஆகியவற்றைச் சாப்பிட்டால்,கூடுதல் பலன் கிடைக்கும்.

2. சளி உருவாவது கட்டுப்படுத்தப்படும்.

3. சுவாசப் பை (நுரையீரல்) வலுப்படும்.

4. சளி, காய்ச்சல், சுவாசக் குழாய் நோய்கள் குணமாகும்.

5. உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.

6. எடை குறையும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

யோக முத்திரைகள் : லிங்க முத்திரை உடல் எடையை குறைக்குமா? - செய்முறை, நேர அளவு, வேலை செய்யும் விதம், பலன்கள் [ ] | Yoga Mudras : Does Linga Mudra cause weight loss? - Recipe, time scale, working method, benefits in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்