யாருக்கு எப்போ அதிர்ஷ்டம் அடிக்கும் என்று சொல்லவே முடியாது. சில பேர் மண்ணைத் தொட்டாலும் அது பொன்னாக மாறிவிடும். சில பேர் திருமணம் செய்யும் நேரம், அவர்களை வாழ்க்கையின் உச்சிக்கே கொண்டு சென்றுவிடும். வீட்டுக்கு வந்தவளோட ராசி என்று கூட சொல்லுவார்கள்! சிலபேர் குடிபோகும் வீடு அதிர்ஷ்டத்தை தேடி தரும். இப்படி இருக்க, இந்த அதிர்ஷ்டமானது நமக்கு எப்போது அடிக்கும் என்று காத்துக் கொண்டே இருந்தால், வாழ்க்கையே அதற்குள் முடிந்து போய்விடும்! நம்மையும் அதிர்ஷ்டம் தேடி வர வேண்டுமென்றால், என்ன செய்யலாம்? ஒருவருக்கு அதிர்ஷ்டம் உண்டாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதிர்ஷ்டம் ஏற்படாமல் இருக்க சில காரணங்களே உள்ளன. ஒருவருடைய ஜாதக கட்டத்தில் தீராத தோஷம் இருந்தால், அதிர்ஷ்டம் வராது. வீட்டில் வாஸ்து பிரச்சனை இருந்தால் அதிர்ஷ்டம் வராது. பூர்வஜென்ம வினை இருந்தால், அதிர்ஷ்டம் நம்மைத் தேடி கட்டாயம் வராது. அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைத்தாலும் அதிர்ஷ்டம் வராது. அடுத்தவர்களைப் பார்த்து பொறாமை பட்டாலும் அதிர்ஷ்டம் வராது. மேற்குறிப்பிட்டுள்ள சில தவறுகளை பரிகாரங்கள் செய்து, பிராயச்சித்தத்தை தேடிக் கொள்ளலாம். சிலவற்றை திருத்திக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது. சரி. இப்போது நமக்கு அதிஷ்டத்தை தரப்போகும் அந்த ஒரு பொருள் என்ன என்பதைப் பற்றி பார்த்துவிடுவோம். ஒருவரை அதிர்ஷ்டசாலிகள் என்று எதை வைத்து கூறுவார்கள். முதலில் மன அமைதியான வாழ்க்கை, அடுத்தது செல்வந்தர்களாக வாழும் வாழ்க்கை. இவை இரண்டும் இருந்து விட்டால் நிச்சயம் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள் தான். ஒருவருடைய வாழ்க்கையில் மன நிம்மதி மட்டும் இருந்தால், நல்ல வாழ்க்கை அமைந்து விடாது. பணம் மட்டும் இருந்தாலும் நல்ல வாழ்க்கை அமைந்து விடாது. இரண்டையும் ஒருசேர அமைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். நல்ல வழியில் நாம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் அந்த பணமானது, நம்முடைய பணப் பெட்டியில் இருந்து வீண் விரயம் ஆகாமல் இருந்தாலே பிரச்சனையில் பாதி முடிந்துவிடும். பண வரவு அதிகமாக இருந்தால், மன நிம்மதி, தானாக வரும் என்று கூட சொல்லலாம். தவறில்லை. இப்படி உங்களுடைய பணப்பெட்டியில் உள்ள பணத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு கதவை தட்டவே மாட்டேங்குதா?
அப்படின்னா இந்த ஒரு பொருள் உங்க வீட்டில இல்லைன்னு அர்த்தம்.
யாருக்கு எப்போ அதிர்ஷ்டம் அடிக்கும் என்று சொல்லவே
முடியாது. சில பேர் மண்ணைத் தொட்டாலும் அது பொன்னாக மாறிவிடும்.
சில பேர் திருமணம் செய்யும் நேரம், அவர்களை வாழ்க்கையின் உச்சிக்கே கொண்டு சென்றுவிடும்.
வீட்டுக்கு வந்தவளோட ராசி என்று கூட சொல்லுவார்கள்!
சிலபேர் குடிபோகும் வீடு அதிர்ஷ்டத்தை தேடி தரும்.
இப்படி இருக்க, இந்த
அதிர்ஷ்டமானது நமக்கு எப்போது அடிக்கும் என்று காத்துக் கொண்டே இருந்தால், வாழ்க்கையே அதற்குள் முடிந்து போய்விடும்! நம்மையும்
அதிர்ஷ்டம் தேடி வர வேண்டுமென்றால், என்ன செய்யலாம்?
ஒருவருக்கு அதிர்ஷ்டம் உண்டாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதிர்ஷ்டம் ஏற்படாமல் இருக்க சில காரணங்களே உள்ளன.
ஒருவருடைய ஜாதக கட்டத்தில் தீராத தோஷம் இருந்தால், அதிர்ஷ்டம் வராது. வீட்டில் வாஸ்து பிரச்சனை இருந்தால்
அதிர்ஷ்டம் வராது.
பூர்வஜென்ம வினை இருந்தால், அதிர்ஷ்டம் நம்மைத் தேடி கட்டாயம் வராது. அடுத்தவர்களுக்கு
கெடுதல் நினைத்தாலும் அதிர்ஷ்டம் வராது. அடுத்தவர்களைப் பார்த்து பொறாமை பட்டாலும்
அதிர்ஷ்டம் வராது.
மேற்குறிப்பிட்டுள்ள சில தவறுகளை பரிகாரங்கள்
செய்து, பிராயச்சித்தத்தை
தேடிக் கொள்ளலாம். சிலவற்றை திருத்திக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது. சரி.
இப்போது நமக்கு அதிஷ்டத்தை தரப்போகும் அந்த ஒரு
பொருள் என்ன என்பதைப் பற்றி பார்த்துவிடுவோம். ஒருவரை அதிர்ஷ்டசாலிகள் என்று எதை வைத்து
கூறுவார்கள்.
முதலில் மன அமைதியான வாழ்க்கை, அடுத்தது செல்வந்தர்களாக வாழும் வாழ்க்கை. இவை
இரண்டும் இருந்து விட்டால் நிச்சயம் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள் தான்.
ஒருவருடைய வாழ்க்கையில் மன நிம்மதி மட்டும் இருந்தால், நல்ல வாழ்க்கை அமைந்து விடாது. பணம் மட்டும் இருந்தாலும்
நல்ல வாழ்க்கை அமைந்து விடாது. இரண்டையும் ஒருசேர அமைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
நல்ல வழியில் நாம் சம்பாதித்துக் கொண்டிருக்கும்
அந்த பணமானது, நம்முடைய
பணப் பெட்டியில் இருந்து வீண் விரயம் ஆகாமல் இருந்தாலே பிரச்சனையில் பாதி முடிந்துவிடும்.
பண வரவு அதிகமாக இருந்தால், மன நிம்மதி, தானாக வரும் என்று கூட சொல்லலாம். தவறில்லை. இப்படி
உங்களுடைய பணப்பெட்டியில் உள்ள பணத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
இதற்கு எல்லாவகையான தோஷத்தை நீக்கும், முருகப் பெருமானின் வாகனமான மயில் இறகை உங்களது
பணப்பெட்டியில் வைக்கவேண்டும்.
இந்த மயில் இறகை, முறைப்படி உங்களது பணப் பெட்டியில் வைத்தால் நிச்சயம்
அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும்.
நீங்கள் பணம் வைக்கும் பெட்டியிலோ, அல்லது பீரோவிலோ முதலில் கருநீல துணியை விரித்துக்
கொள்ள வேண்டும். அந்த துணியானது வெல்வெட் துணி அல்லது பட்டுத்துணியாக இருந்தால் மேலும்
சிறப்பு.
அதன்மேல் மயிலிறகு ஒன்றை வைத்து, அதன் மேல் நீங்கள் பணத்தை பர்சிலோ அல்லது அந்த
மயில் இறகின் மேல் நேரடியாக கூட, பணத்தை வைத்து சேமித்து வரலாம்.
இப்படி செய்யும் பட்சத்தில் உங்களது பணம் வீண்
விரயம் ஆகாமல் சேமிப்பு அதிகரிக்கும் என்று சில குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.
குறிப்பாக வட மாநிலத்தவர்கள் தங்களுடைய பீரோவில்
இந்த கரு நீல வெல்வெட் துணி இல்லாமல் பணத்தை வைக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்க
ஒன்று.
மயிலிறகை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். இந்த ஒரு
மயிலிறகிற்க்கு பல வகையான சக்தி அடங்கியுள்ளது.
இந்த மயில் இறகில் 9 மயிலிறகை எடுத்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து, வழிபட்டால் சனியால் உண்டாகும் தோஷங்கள் அனைத்துமே
நீங்கிவிடும்.
மூன்று மயிலிறகை ஒன்றாக வைத்து முருகப் பெருமானையும்
உங்களது குலதெய்வத்தையும் வேண்டிக் கொண்டு பூஜை அறையில் வைத்து வழிபட்டால், நீங்கள் செய்த பாவத்திற்கு விமோசனம் கிடைக்கும்.
சாதாரணமாகவே உங்களது வீட்டில் ஆங்காங்கே இந்த மயிலிறகை
அழகுக்காக வைத்தாலும், அது மிகவும் நல்லதுதான்.
எந்த ஒரு கெட்ட சக்தியும், எந்த ஒரு கெட்ட தோஷமும், கண் திருஷ்டியும் உங்களை தாக்காது என்பது குறிப்பிடத்தக்க
ஒன்று.
அதிர்ஷ்டமானது நம்மைத் தேடி வரும் வரை காத்திருக்காமல், சின்னச்சின்ன பரிகாரங்களை செய்து அந்த
அதிர்ஷ்டத்தை தேடி நாம் சென்றால் தவறில்லை என்ற
கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு கதவை தட்டவே மாட்டேங்குதா? அப்படின்னா இந்த ஒரு பொருள் உங்க வீட்டில இல்லைன்னு அர்த்தம். - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Does luck never knock on your door? If so, it means that this one item is not in your house. - Notes in Tamil [ ]