நாக முத்திரை ஆன்மிக நாட்டத்தை அதிகரிக்குமா?

செய்முறை, கால அளவு, பலன்கள்

[ யோக முத்திரைகள் ]

Does Naga Mudra increase spiritual pursuits? - Method, Duration, Benefits in Tamil

நாக முத்திரை ஆன்மிக நாட்டத்தை அதிகரிக்குமா? | Does Naga Mudra increase spiritual pursuits?

நாக முத்திரை, ஆழ்ந்த நுண்ணறிவுக்கு அடையாளமாக உள்ளது. இந்து மத வழிபாடுகளில் நாக வழிபாடு முக்கிய இடம் பெற்றுள்ளது. அறிவு, புத்திக்கூர்மை, பலம் ஆகியவற்றின் அடையாளமாகவும் தெய்வீகமான ஒரு முத்திரையாகவும் நாக முத்திரை அமைந்துள்ளது.

நாக முத்திரை ஆன்மிக நாட்டத்தை அதிகரிக்குமா?

நாக முத்திரை, ஆழ்ந்த நுண்ணறிவுக்கு அடையாளமாக உள்ளது. இந்து மத வழிபாடுகளில் நாக வழிபாடு முக்கிய இடம் பெற்றுள்ளது. அறிவு, புத்திக்கூர்மை, பலம் ஆகியவற்றின் அடையாளமாகவும் தெய்வீகமான ஒரு முத்திரையாகவும் நாக முத்திரை அமைந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் நமக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகளைத் தீர்க்கும் முத்திரையாக இது பயன்படுகிறது. ஆன்மிகப் பாதையில் நாம் செயல்படும்போது ஏற்படும் இடையூறுகளை எதிர்கொள்ள இந்த முத்திரை உதவுகிறது. மேலும், மனத் தெளிவும் அதிகரிக்கிறது. மூலம், தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும்.

அக்குபஞ்சர் மருத்துவ முறையில் கூறப்படும் பஞ்சபூதங்களில் நெருப்பு என்ற பூதத்தை மேம்படுத்த உதவுகிறது. உடலில் உள்ள வெப்பத்தின் அடையாளமாக நெருப்பு உள்ளது. இது இதயத்தோடு தொடர்புகொண்டது. ரத்த ஓட்டத்தைச் சீராக வைக்க உதவுகிறது. நாக்கோடு தொடர்புடையது. பேசும் தன்மையைக் கொடுக்கிறது.

நாக முத்திரையைச் செய்வதன் மூலம், நாம் எந்தக் குறிக்கோளுக்காக வாழ்கின்றோமோ அதை நிறைவேற்றிக்கொள்ள முடியும். பஞ்சபூதத்தில் நெருப்பு என்ற பூதம், சக்தி வாய்ந்த மூலப்பொருளாக உள்ளது. இந்த நெருப்பு என்ற பூதம், எரிகிறது, நகருகிறது, நம்மைச் செயல்பட வைக்கிறது. இதன் அடிப்படையில்தான் நெருப்பின் பார்வை சிலவற்றை அமைக்கிறது. நகருதல், சக்தியை வளர்த்தல், மன அழுத்தத்தைக் குறைத்தல் ஆகியவற்றை உண்டாக்குகிறது. நமது மேல் வயிற்றுப் பகுதியில் உண்டாகும் நெருப்பு நமக்கு சக்தியைக் கொடுப்பதுடன், ஒளியையும் கொடுக்கிறது. இந்த ஒளி நமக்கு நல்வழியைக் காட்டுகிறது.

மற்ற முத்திரைகளில் இருந்து இது வித்தியாசமானது. கட்டை விரல் நெருப்புக்கு அடையாளமாகக் கூறப்பட்டுள்ளது. இரண்டு கட்டை விரல்களும் சேரும்போது, நெருப்பு என்ற பூதம் நமது நோய்களையும் பிரச்னைகளையும் தீர்க்கிறது.

செய்முறை

இரு கைகளையும், நெஞ்சுக்கு நேராக வைக்க வேண்டும். இரண்டு கட்டை விரல்களும் சாய்வாக ஒன்றன் மீது ஒன்றாக இருக்க வேண்டும்.

கால அளவு

தினமும் மூன்று வேலை ஐந்து நிமிடங்கள் வீதம் செய்யலாம். நின்ற நிலையிலோ, அமர்ந்த நிலையிலோ செய்யலாம்.

பலன்கள்

1. உடலில் சக்தி அதிகரிக்கும்.

2. மனஇறுக்கம் நீங்கி உற்சாகமாக இருக்கலாம்.

3. மனத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.

4. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

6. வாழ்வில் ஒளியைக் கொடுத்து நல்வழியைக் காட்டுகிறது.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

யோக முத்திரைகள் : நாக முத்திரை ஆன்மிக நாட்டத்தை அதிகரிக்குமா? - செய்முறை, கால அளவு, பலன்கள் [ ] | Yoga Mudras : Does Naga Mudra increase spiritual pursuits? - Method, Duration, Benefits in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்