தூக்கமின்மை என்ற நோயைக் குணப்படுத்தும் முத்திரையாக இந்தச் சக்தி முத்திரை விளங்குகிறது. தூக்கமின்மை பிரச்னைக்கு பல காரணங்கள் உள்ளன. அந்தப் பிரச்னைகளில் இருந்து நம்மை விடுவித்து நமக்கு நல்ல தூக்கத்தைத் தருகிறது.
சக்தி முத்திரை செய்தால் தூக்கம் நன்றாக வரும்?
தூக்கமின்மை என்ற நோயைக் குணப்படுத்தும் முத்திரையாக இந்தச் சக்தி முத்திரை விளங்குகிறது. தூக்கமின்மை பிரச்னைக்கு பல காரணங்கள் உள்ளன. அந்தப் பிரச்னைகளில் இருந்து நம்மை விடுவித்து நமக்கு நல்ல தூக்கத்தைத் தருகிறது.
சக்தி முத்திரை, கடன்களை நீக்கி மன அமைதி ஏற்படச்
செய்கிறது. பெண்களுக்கு குடல் பகுதியில் ஏற்படும் ஒருவித இழுப்பு நோய் மற்றும்
அதனால் உண்டாகும் பிரச்னைகளையும் குணப்படுத்துகிறது.
நமது உள்ளும் புறமும்
அமைதியான ஒரு சூழ்நிலை ஏற்பட வேண்டும். இந்த முத்திரையைச் செய்யும்போது
தாற்காலிகமாக எல்லாவிதக் கவலைகளையும் நாம் மறந்து, நல்ல பலனை உணர முடியும்.
இந்தச் சக்தி முத்திரை, சுவாசத்தில் ஏற்படும்
திடீர்க் கோளாறுகளை நீக்கி சுவாசத்தை மேம்படுத்துகிறது. கூர்ந்து கவனித்தால்
சுவாசம் சீராக நடப்பதை உணரலாம். ஆனால், இந்த முத்திரையில் சில பக்க விளைவுகள் உண்டு என்பதை
நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த முத்திரையை அதிக நேரம் செய்வதோ, அடிக்கடி செய்வதோ
கூடாது. அப்படிச் செய்தால், சோம்பேறித்தனம் உண்டாகும்.
மோதிர விரலையும், சிறு விரலையும் சேர்த்து
வைக்க வேண்டும். இரண்டுக்கும் இடையே சிறிது இடைவெளி இருக்க வேண்டும். மற்ற இரு
விரல்களை, தளர்வாக
வளைந்திருக்கும்படி வைக்க வேண்டும். கட்டை விரல், உள்ளங்கையைத் தொட்டபடி இருக்க
வேண்டும். மூச்சை மெதுவாக இழுத்துப் பின் வெளியிட வேண்டும்.
இந்த முத்திரையைத்
தினமும், மூன்று முறை 12 முதல் 15
நிமிடங்கள் வரை செய்ய வேண்டும். கூடுமானவரை, அமைதியான சூழ்நிலையில் இந்த முத்திரையைச் செய்ய
வேண்டும். அமர்ந்த நிலையிலோ அல்லது நின்ற நிலையிலோ செய்யலாம். கண்களை மூடியபடி
செய்வது நல்லது.
1. தூக்கமின்மை பிரச்னை
தீரும்.
2. உள்ளுறுப்புகளுக்குச்
சக்தி கிடைத்து நன்றாக இயங்கும்.
3. சுவாச உறுப்புகள்
சீராக இயங்கும்.
4. ஆண்களின் குடல்
பகுதியில் ஏற்படும் இழுப்பு மற்றும் பெண்களுக்கு வரும் மாதவிலக்குப் பிரச்னைகள்
தீரும்.
5. மன இறுக்கம்
குறையும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
யோக முத்திரைகள் : சக்தி முத்திரை செய்தால் தூக்கம் நன்றாக வரும்? - செய்முறை, கால அளவு, பலன்கள் [ ] | Yoga Mudras : Does Shakti Mudra make you sleep better? - Method, Duration, Benefits in Tamil [ ]