சுரபி முத்திரை மன அமைதியை கொடுக்குமா?

செய்முறை, நேர அளவு, பலன்கள்

[ யோக முத்திரைகள் ]

Does Surabi Mudra give you peace of mind? - Recipe, time scale, benefits in Tamil

சுரபி முத்திரை மன அமைதியை கொடுக்குமா? | Does Surabi Mudra give you peace of mind?

சுரபி முத்திரையே காமதேனு முத்திரை என்றும் கூறுவர். காமதேனு கேட்டவற்றைத் தரக்கூடியது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. கை விரல்களில் சுரபி முத்திரையைச் செய்யும்போது, பசுவின் பால் சுரக்கும் காம்புகளைப்போல் தோன்றும்.

சுரபி முத்திரை மன அமைதியை கொடுக்குமா?

சுரபி முத்திரையே காமதேனு முத்திரை என்றும் கூறுவர். காமதேனு கேட்டவற்றைத் தரக்கூடியது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. கை விரல்களில் சுரபி முத்திரையைச் செய்யும்போது, பசுவின் பால் சுரக்கும் காம்புகளைப்போல் தோன்றும்.

எதைக் கேட்டாலும், கேட்டதைக் கொடுக்கக்கூடியது அமுதசுரபி. அந்த வகையில், நாம் நினைப்பதை நிறைவேற்றும் முத்திரையாக இந்த சுரபி முத்திரை இருக்கும். தியானத்தின் இறுதி நிலையான சமாதி என்ற நிலையை அடைய முயற்சிப்பவர்களுக்கு ஏற்படும் தடைகளை நீக்கும் முத்திரை இது.

செய்முறை

இந்த முத்திரையைச் செய்வது கொஞ்சம் சிரமம். அதனால், நிதான மாகச் செய்ய வேண்டும். கட்டை விரல்கள் இரண்டும் தொடாமல் இருக்க வேண்டும். வலது ஆள்காட்டி விரல் நுனி, இடது நடு விரல் நுனியுடனும், வலது நடு விரல் நுனி, இடது ஆள்காட்டி விரல் நுனி யுடனும்; வலது மோதிர விரல் நுனி, இடது சுண்டு விரல் நுனி யுடனும்; வலது சுண்டு விரல் நுனி, இடது மோதிர விரல் நுனியுடனும் இணைந்திருக்க வேண்டும். இதுவே சுரபி முத்திரையாகும். விரல்களில் அதிக அழுத்தம் தேவையில்லை.

நேர அளவு

தொடக்கத்தில் இந்த முத்திரையைச் செய்வது சிரமமாக இருந்தாலும், படிப்படியாகப் பழக்கப்பட்டுவிடும். நன்றாகப் பழக்கப்பட்ட பின்பு இதை பதினைந்து நிமிடங்கள் முதல் இருபது நிமிடங்கள்வரை செய்யலாம். பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்தபடி செய்யலாம். இந்த சுரபி முத்திரை, அண்டவெளி சக்தி அனைத்தையும் ஒன்றிணைத்து பெருக்கி உடலுக்கு சக்தியைக் கொடுக்கிறது.

தியானம் செய்யும் போது 15 நிமிடங்கள் சுரபி முத்திரையைச் செய்தால், நற்சிந்தனைகள் வளரும். சுரபி முத்திரையைச் செய்யும் போது, கீழ்கண்டவாறு சிந்திக்க வேண்டும்.

'ஒவ்வொரு முறை சுவாசிக்கும்போதும் என் உடலுக்குள் ஒளி பரவி நிற்கிறது. எனது உடலும் ஆத்மாவும் சுத்தமாகிவிட்டன. நான் கேட்கும்போது உலகம் தோன்றும்'.

பலன்கள்

1. மன அமைதியையும், செயல்களில் முழு ஈடுபாட்டையும் தருகிறது.

2. தொடர்ந்து செய்துவந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

3. நமது விருப்பங்கள் நிறைவேறும்.

4. நமது உடலில் பஞ்சபூதங்களைச் சமப்படுத்துகிறது.

5. உடலிலுள்ள அசுத்தங்கள் வெளியேறும்.

6. உடலில் உள்ள பலவித சுரப்பிகளை சமநிலையில் வைக்கிறது.

7. மன நோய்கள் நீங்கும்.

8. அண்டவெளி சக்தி உடலுக்கும் நுழைந்து சக்தியை அளிக்கிறது.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

யோக முத்திரைகள் : சுரபி முத்திரை மன அமைதியை கொடுக்குமா? - செய்முறை, நேர அளவு, பலன்கள் [ ] | Yoga Mudras : Does Surabi Mudra give you peace of mind? - Recipe, time scale, benefits in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்