சூன்யம் என்றால் ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்ட நிலையைக் குறிப்பது. சிலர், தங்களுடைய வாழ்க்கை சூன்யமாகிவிட்டதாகக் குறிப்பிடுவதுண்டு. வாயு மண்டலத்துக்கு மேலே உள்ள வெற்றிடம் தான் சூன்ய பகுதி. அதையே ஆகாயம் என்று அழைக்கிறோம்.
சூன்ய முத்திரை செய்தால் காது நன்றாக கேட்குமா?
சூன்யம் என்றால் ஒன்றும்
இல்லாமல் ஆகிவிட்ட நிலையைக் குறிப்பது. சிலர், தங்களுடைய வாழ்க்கை
சூன்யமாகிவிட்டதாகக் குறிப்பிடுவதுண்டு. வாயு மண்டலத்துக்கு மேலே உள்ள வெற்றிடம்
தான் சூன்ய பகுதி. அதையே ஆகாயம் என்று அழைக்கிறோம்.
நமது கையில் உள்ள நடு
விரல், ஆகாயம் என்ற பூதத்தை
குறிப்பிடும் அடையாளமாக உள்ளது. இந்த முத்திரை, ஆகாயம் என்ற பஞ்சபூதத்தின் நுழைவாயிலாக அமைந்துள்ளது.
நடு விரலைக் கட்டை
விரலின் அடிப்பகுதியில் இணைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்களும், நேராக மேல் நோக்கியபடி
இருக்க வேண்டும். இந்த முத்திரையை ஒரே நேரத்தில் இரண்டு கைககளிலும் செய்யலாம்.
பத்மாசனம் அல்லது
சுகாசனத்தில் அமர்ந்த நிலையில் இதைச் செய்யலாம். கழுத்தும் முதுகும் நேராக இருக்க
வேண்டும்.
இந்த முத்திரையை தினமும்
15 நிமிடம் வீதம் மூன்று வேளைகளிலும் செய்யலாம். பின்னர் படிப்படியாக அதிகரித்து
45 நிமிடங்கள்வரை செய்யலாம். ஏற்கெனவே நாம் பார்த்த ஆகாய முத்திரையைத் தொடர்ந்து
இந்த முத்திரையைச் செய்யலாம்.
சூன்ய முத்திரை
செய்யும்போது தியானத்திலும் ஈடுபடலாம். மனம் சூன்யம் ஆகி, தூய்மை அடைவதுடன், தனிமை, வெறுமை உணர்வுகளும்
மறையும். ஆனால்,
நடந்துகொண்டோ உணவு
உட்கொள்ளும்போதோ இந்த முத்திரையை செய்யக் கூடாது.
1. காது சம்பந்தமான
நோய்கள் குணமாகும்.
2. கேட்கும் திறன்
அதிகரிக்கும். பிறவியில் செவிடாகப் பிறந்தவர் களின் காதுகளின் செவிட்டுத்தன்மையை
மாற்றி கேட்கும் திறனை அதிகரிக்கிறது.
3. ஏதாவது அதிர்ச்சியால்
உடலும் மனமும் பாதிக்கப்பட்டால், சூன்ய முத்திரையைச் செய்வதன் மூலம் மன இறுக்கம் மாறித் தளர்வான
நிலை உண்டாகும்.
4. காது வலி குணமாகும்.
5. ஆகாயம் என்ற
பஞ்சபூதம் சமன்படும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
யோக முத்திரைகள் : சூன்ய முத்திரை செய்தால் காது நன்றாக கேட்குமா? - செய்முறை, நேர அளவு, பலன்கள் [ ] | Yoga Mudras : Does the ear hear better if you make a null stamp? - Recipe, time scale, benefits in Tamil [ ]