உணவை விதவிதமாகவும் சுவையாகவும் சாப்பிடுவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடிக்கும். நாவூரும் சுவையில் தக்காளி குழம்பு... 10 நிமிடத்தில் தயார் செய்யலாம் இவ்வாறு சாப்பிடும் போது நாம் காலை உணவாக எல்லோரது வீட்டிலும் அதிகமாக செய்வது தோசை தான். இந்த தோசையை எவ்வாறு விதவிதமாக செய்யலாம் என்பது பலருக்கும் தெரிந்தது இல்லை. அந்த வகையில் இன்று வித்தியாசமாக பன்னீர் சீஸ் தோசை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மொறுமொறு பன்னீர் சீஸ் தோசை இப்படி செய்ங்க
...மிஸ் பண்ணிடாதீங்க
உணவை விதவிதமாகவும் சுவையாகவும் சாப்பிடுவது குழந்தைகள் முதல்
பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடிக்கும்.
நாவூரும் சுவையில் தக்காளி குழம்பு... 10 நிமிடத்தில் தயார்
செய்யலாம்
இவ்வாறு சாப்பிடும் போது நாம் காலை உணவாக எல்லோரது வீட்டிலும்
அதிகமாக செய்வது தோசை தான். இந்த தோசையை எவ்வாறு விதவிதமாக செய்யலாம் என்பது பலருக்கும்
தெரிந்தது இல்லை.
அந்த வகையில் இன்று வித்தியாசமாக பன்னீர் சீஸ் தோசை எப்படி செய்யலாம்
என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 3 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 6
பச்சமிளகாய் - 2
தக்காளி - 1
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு- 1 டீஸ்பூன்
மிளகாய் தூள்- 2 டீஸ்பூன்
சீரக தூள்- 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
பன்னீர் - 200 கிராம்
கொத்தமல்லி - தேவைக்கு ஏற்ப
சீஸ் - தேவைக்கு ஏற்ப
செய்யும் முறை:
பன்னீர் தோசை செய்வதற்கு முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை
வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கிய பூண்டு
பச்சமிளகாய் போட்டு வெங்காயம் பொன்நிறம் வரும் வரை தாழிக்க வேண்டும்.
இதன் பின்னர் ஒரு பெரிய தக்காளியை சேர்த்துக்கெள்ள வேண்டும்.
இதன் பின்னர் மஞ்சள் தூள் உப்பு மிளகாய் தூள் சீரக தூள் கரம் மசாலா தூள் போன்ற மசாலாக்களை
சேர்த்து கலந்து தாழிக்க வேண்டும்.
இதன் பின்னர் பன்னீரை துருவி சோக்க வேண்டும். இதன் பின்னர் கொஞ்சம்
கொத்தமல்லி இலைகளை நறுக்கி போட வேண்டும் இந்த கலவையை அப்படியே தாழித்து தனியாக எடுத்து
வைக்க வேண்டும்.
இதன் பின்னர் அடுப்பில் ஒரு தவாவை வைத்து அதில் தோசை மாவு ஊற்ற
வேண்டும். அதன் மேல் விரும்பினால் நெய் சேர்த்துக்கொள்ளலாம்.
தோசை நன்கு இரண்டு பக்கமும் வேகியதும் சீஸ் கொஞ்சம் துருவி சேர்க்க
வேண்டும். இதற்கு மேல் நாம் செய்து வைத்திருக்கும் பன்னீர் கலவையை சேர்க்க வேண்டும்.
இதன் பின்னர் சீஸ் சேர்த்து தோசையை மடித்து கொஞ்ச நேரம் வேக
வைக்க வேண்டும். இவ்வாறு செய்து எடுத்தால் மொறுமொறு சீஸ் தோசை தயார். சூடாக இருக்கும்
போது பரிமாறவும்.
வாழ்க வளமுடன்
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
சமையல் குறிப்புகள் : மொறுமொறு பன்னீர் சீஸ் தோசை மிஸ் பண்ணிடாதீங்க - குறிப்புகள் [ ] | cooking recipes : Don't miss the crunchy paneer cheese dosa - Tips in Tamil [ ]