நமது கர்மாவை உடைப்பதில் தானங்களுக்கு தனியிடம் உண்டு. இந்த தானத்தை செய்தால் இந்த பலன் கிடைக்கும் என்று சொன்னாலும், எல்லோராலும் தானத்தை செய்ய இயலாது. ஆனால் அவரவர் சக்திக்கு ஏற்ப தானங்களை செய்யலாம்.
தானங்களும் அவற்றின் பலன்களும் :
நமது கர்மாவை உடைப்பதில் தானங்களுக்கு தனியிடம் உண்டு. இந்த தானத்தை
செய்தால் இந்த பலன் கிடைக்கும் என்று சொன்னாலும், எல்லோராலும் தானத்தை செய்ய இயலாது. ஆனால் அவரவர்
சக்திக்கு ஏற்ப தானங்களை செய்யலாம்.
பொதுவாக தானங்களில் பல வகை உண்டு. நாம் செய்யும் ஒவ்வொரு
தானத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன் உண்டு
தானத்தில் மிகச் சிறந்தது அன்னதானம். பசியால் வாடும் ஏழைகளுக்கு
வயிறார உணவளிப்பது சிறந்தது. உணவு தானம் அளிப்பதன் மூலம் கடன் தொல்லைகள் அனைத்தும்
விலகி வீட்டில் செல்வம் நிறையும்.
அரிசி தானம்:
மடி பிச்சை கேட்டு பலர் வருவதுண்டு. அப்படி வருபவர்களுக்கு அரிசி
தானம் அளிப்பது சிறந்தது. அதோடு உணவின்றி வாழும் ஏழை குடும்பத்திற்கு அரிசியை
தானம் அளிப்பதன் மூலம் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்.
வஸ்திரதானம்:
உடுத்த ஆடை இன்றி தவிக்கும் ஏழைகளுக்கு ஆடைகளை தானமாக அளிப்பதன் மூலம்
ஆயுள் விருத்தியடையும்.
பூமிதானம்:
கோவில் கட்டுவதற்கு இடத்தை தானமாக அளிப்பது, வீடின்றி தவிக்கும் ஏழை எளியோருக்கு வீடு
கட்டிக்கொள்ள இடத்தை தானமாக அளிப்பது போன்ற செயல்களை செய்வதன் மூலம் ஏதோ ஒரு
வகையில் சிவனை தரிசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
பழங்கள் தானம்:
நோயுற்ற ஏழை எளியோருக்கு பழங்களை தானமாக அளிப்பதன் மூலம் நம் புத்தி
தெளிவடையும்.
கோவில்களில் உள்ள தீபத்திற்கு எண்ணெயை தானமாக கொடுத்தால் கண் பார்வை
சிறப்பாக இருக்கும். அதோடு நம் பித்ருக்கள் பாவம் செய்து அவர்களை இருள்
சூழ்ந்திருந்தால் அந்த அருள் அவர்களை விட்டு விலகும். இதன் மூலம் பித்ருக்களின்
ஆசி நமக்கு கிடைக்கும்.
பால் தானம்:
நோயுற்ற ஏழை எளியோருக்கு பாலை தானமாக அளிப்பதன் மூலம் நம் வாழ்வில்
உள்ள துக்கங்கள் அனைத்தும் விலகும்.
நெய் தானம்:
இறைவனின் அபிஷேகத்திற்கு நெய்யை தானமாக அளிப்பதன் மூலம் நோய்கள்
நீங்கும்.
தேங்காய் தானம்:
நற்காரியங்களுக்காக தேங்காயை தானமாக அளிப்பதன் மூலம் நாம் செய்யும்
காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
தேன் தானம்:
கடவுளின் அபிஷேகத்திற்காக தேனை தானமாக அளிப்பதன் மூலம் புத்திர
பாக்கியம் உண்டாகும்
இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக
தகவல்களுடன் நமது ஆன்மீக பயணம் தொடரும்!
ஓம் நமசிவாய!
இறைபணியில்
அன்புடன்....
༺🌷༻தமிழர் நலம்༺🌷༻
💥நன்றி!
கற்போம் கற்பிப்போம்!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
🌷🌷முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த நாள் இனிய நாளாகட்டும்...
வாழ்க 🙌 வளமுடன்
அன்பே🔥இல்லறம்
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
💦💦💦💦💦💦💦💦💦💦💦💦
ஆன்மீக குறிப்புகள் : தானங்களும் அவற்றின் பலன்களும் - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Donations and their benefits - Tips in Tamil [ spirituality ]