வாழையிலையில் சாப்பிட்டால் ஆயுசு பெருகும் என்பார்கள்.. இதற்கு என்ன காரணம் தெரியுமா? வாழையை பொறுத்தவரை தண்டு முதல் இலை வரை அத்தனையும் மருத்துவ குணம் நிறைந்தது.. இந்த வாழையிலையில், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம், செம்பு என ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. கண்கள்: கண்கள் உட்பட உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது இந்த வாழையிலை.. பசும் இலையாக இருந்தாலும் சரி, இலை அறுபட்டபிறகும்கூட, எப்போதுமே குளிர்ச்சியாக இருக்கக்கூடியது வாழையிலை. அதாவது வாழை இலை ஆக்சிஜனை வெளியிட்டுக்கொண்டே இருக்குமாம்.. அதனால்தான், வாழை இலையில் வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் போன்றவை சீக்கரத்தில் வாடிப்போகாது.. பூக்கடைகளில் கட்டிய பூ வாங்கினால் கூட, வாழைநாரில் கட்டி, அதை வாழை இலையில்தான் கட்டித்தருவார்கள்.. குளிர்ச்சி: கண்களுக்கு குளிர்ச்சி தரக்கூடிய வாழை.. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வது.. வைட்டமின் A, C., K போன்றவை உள்ளதால், குடற்புண்களை ஆற்றும் தன்மை வாழையிலைகளுக்கு உண்டு.
வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் பெருகும்..
வாழையிலையில் சாப்பிட்டால் ஆயுசு பெருகும் என்பார்கள்..
இதற்கு என்ன காரணம் தெரியுமா?
வாழையை பொறுத்தவரை தண்டு முதல் இலை வரை அத்தனையும்
மருத்துவ குணம் நிறைந்தது.. இந்த வாழையிலையில், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம், செம்பு என ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.
கண்கள்:
கண்கள் உட்பட உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது
இந்த வாழையிலை.. பசும் இலையாக இருந்தாலும் சரி, இலை அறுபட்டபிறகும்கூட, எப்போதுமே குளிர்ச்சியாக இருக்கக்கூடியது வாழையிலை.
அதாவது வாழை இலை ஆக்சிஜனை வெளியிட்டுக்கொண்டே
இருக்குமாம்.. அதனால்தான், வாழை இலையில் வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் போன்றவை சீக்கரத்தில் வாடிப்போகாது..
பூக்கடைகளில் கட்டிய பூ வாங்கினால் கூட, வாழைநாரில் கட்டி, அதை வாழை இலையில்தான் கட்டித்தருவார்கள்..
குளிர்ச்சி:
கண்களுக்கு குளிர்ச்சி தரக்கூடிய வாழை.. எதிர்ப்பு
சக்தியை அதிகரிக்க செய்வது.. வைட்டமின் A, C., K போன்றவை உள்ளதால், குடற்புண்களை ஆற்றும் தன்மை வாழையிலைகளுக்கு உண்டு.
இந்த இலையின் மேல்புறத்தில், குளோரோபில் என்ற பொருள் நிறைந்திருக்கிறது.. இந்த
வாழையிலையில் தண்ணீரை தெளித்து, அதன்மீது நெய்யை ஊற்றி, இலையில் சூடான உணவுகளை பரிமாறும்போது, இலையில் உள்ள சத்துக்களெல்லாம் குளோரோபில்லுடன்
கரைந்து, உணவுடன்
கலந்து விடுகின்றன. இவைகளை நாம் சாப்பிடும்போது, அனைத்து சத்துக்களும் நமக்குள் சென்று, ஆரோக்கியத்தையும் ஆயுளையும் கூட்டுகின்றன.
ரத்தம் உறைதல்:
ரத்தம் உறைவதை தடுக்ககூடியது வாழையிலைகள்... அதுமட்டுமல்ல, இதிலிலிருக்கும் சாலிசிலிக் அமிலம் புற்றுநோய்
காரணிகளை அடியோடு அழிக்கின்றன.. இலையில் சாப்பிடுபவர்களுக்கு இளநரை அவ்வளவாக வருவதில்லையாம்..
வாய், இரைப்பை, சிறுகுடல் போன்ற பகுதிகளில் உள்ள என்சைம்கள், செரிமான செல்களின் வளர்ச்சி, உற்பத்திக்கு உதவு செய்கின்றன.. வாழை இலையில்
ஆன்டி ஆக்சிடன்ட் அதிக அளவில் உள்ளதால், உடலின் செல் சிதைவு ஏற்படாமல் காக்கின்றன.. இதனால், வயது சுருக்கம் லேசில் ஏற்படுவதில்லை..
தீப்புண்கள்:
மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் இதய நோய்களும் இதனால், தடுக்கப்படுகின்றன. சிறுநீரகம், விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளுக்கு வாழையிலைகள்
மருந்தாகின்றன.. அல்சர் புண்களுக்கும் வாழையிலையே மருந்தாகின்றன.. தீயில் சுட்ட புண்களை
ஆற்றுவதற்கும், இந்த
வாழை இலையே மருந்தாகின்றன.
அதனால்தான் வாழையில் பரிமாறுவதுடன், வாழையிலையை வைத்தே சமைக்கவும் செய்வார்கள்.. கேரளாவில்
மீன் பொழிச்சது இந்த வாழையிலையில்தான் செய்கிறார்கள்..!!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
சுவாரஸ்யம்: தகவல்கள் : வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் பெருகும் - குறிப்புகள் [ ] | Interesting: information : Eating banana leaves increases longevity - Notes in Tamil [ ]