அகங்காரம்

குறிப்புகள்

[ மனம் ]

Ego... - Tips in Tamil

அகங்காரம் | Ego...

ஒருவரிடம் பழகினால் என்ன கிடைக்கும் என்று நினைக்காத உறவே ........... நினைவிலும் நீங்கா இடம் பதிக்கும் ..........!!

அகங்காரம்

Ego...

ஒருவரிடம் பழகினால் என்ன கிடைக்கும் என்று நினைக்காத உறவே ...........

நினைவிலும் நீங்கா இடம்  பதிக்கும் ..........!!

நான் தான் எல்லாம்...

நான் சொல்வது மட்டும்தான் சரி.

எனக்கு மட்டும் தான் தெரியும்...

என்ற கருத்துக்கள் ஒருவரிடம் இருக்குமானால் அவனால் எந்தளவு உயரத்தையும் எட்ட முடியாது .

 

உறவுகள் பலப்பட வேண்டும் என்றால் இருதரப்பினரும் ஒரே கருத்தை வைத்து கொண்டு வாதாடினால் எதுவும் நிகழாது.

யாரோ ஒருவர் தனது ego .. ( அகங்காரம் ) குணத்தை விட்டுவிடு  ஏற்றுக்கொண்டு வாழ்ந்தாலே வாழ்வு செம்மையாக அமையும்.✍🏼🌹

சந்தேகமாய்  கேட்கப்படும் கேள்விகளுக்கு,......... பதில்கள் வேண்டுமானால் வரலாம்..........

உண்மைகள் அல்ல..............!!

 

காலையில் எழுந்தவுடன் ராசி பலன் பார்க்காதீங்க.

 

மனதில் ஆழமாக பதிந்து விட்டால்,

அந்த பலனுக்கு ஏற்றவாறு உங்கள அன்றைய செயல்கள் இருக்கும்.

 

என் நண்பர் ஒருவர் ராசியில்

இன்று குழப்பம் என்று இருந்ததாம்.

 

என்ன குழப்பமாக இருக்கும்? என்று யோசித்து யோசித்து உண்மையிலேயே குழப்பம் வந்துடுச்சு என்று சொல்லி சொல்லி சிரித்தார்.

 

காலையில் எழுந்தால் நல்ல உற்சாகமூட்டும் நேர்மறை வாக்கியங்கள் சொல்வதை பழக்கபடுத்தி கொள்ளலாம்.

 

🌱உங்கள் மனதில் உள்ள காயத்தை நீங்கள் தான் குணப்படுத்திக் கொள்ள வேண்டும்🌱

 

🌱இல்லையேல் காயத்தால் வந்தக் கோவம், உங்களுள் தேங்கி நின்று உங்கள் மனதை அசுத்தமாக்கி, உங்களைச் சுற்றியிருக்கும் அனைவரையும் காயப்படுத்தும்🌱

 

🌱காயமே அது பொய்.இப்போது எழுந்து சென்று அடுத்த வேலையைச் செய்🌱

 

🌱அதாவது கிடைக்காத வரை அனைத்தும் பெரியதாகத் தெரியும்🌱

 

🌱கிடைத்தப் பின் எதுவும் அற்பமானதாகத் தெரியும்🌱

 

🌱இது மனிதர்களின் இயல்புகள்🌱

 

🌱உங்களுக்குப் பிடித்தவர்களிடம் குறைநிறைகளைக் கூறுங்கள்🌱

 

🌱உங்களை விரும்புபவரிடம் நல்வழியைக் கூறுங்கள்🌱

 

🌱உங்களை நன்றாகப் புரிந்தவரிடம் அன்பைக் கொடுங்கள்🌱

 

🌱உங்கள் பிரச்சனை மற்றும் சவால்கள் எதுவாக இருந்தாலும் சரி 🌱

 

🌱சற்று விலக்கி வை, ஓய்வெடு, நிதானமாக யோசி,பின் செயல்படு

எல்லாம் சுலபமாக முடியும்🌱

 

🌱பொறுமை ஒன்றே உன்னை வெற்றிக்கான நல்நிலைக்கு கொண்டு செல்லும்.ஆகையால் முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம் 👍

 

பூக்கும் புது நாள்

புன்னகையில்

மலரும் விழிகள்!!

 

தாக்கும் எண்ணங்கள்

காக்கும்

வாழ்வை!!

 

சிந்தனை

சிதறலில்

வந்திடும்

கற்பனை!!!

 

எந்தனை

எழுப்பிடும்

எழுத்துக்கள்

கொடுப்பினை!!"

 

எத்தனை

கவலைகள்

வாழ்வினில்

வந்தாலும்..

 

அத்தனையும்

மறக்க

அன்னை தமிழ்

தானிருக்கு!!"

 

கொஞ்சிடும்

குழவிபோல்

கெஞ்சிடும்

அதன் எழில்!!!

 

மிஞ்சிடும்

மற்றதை... தஞ்சமே

உன்னிடம்

தாய்மடி போலவே!!

 

உயிரது

உதிரும் வரை

உன்னருள்

வேண்டுமே...

உமையே அழகே...

 

காலங்கள்

நோயின்றி

கவனமாய்

கடந்திட..

நின்னருள்

வேண்டுமே

என்னில் இறையே

குருவாய் அவனே!!

 

பிளந்திருக்கும் பாறாங்கல்லினை ஊசி நூலெடுத்து தையலிடுவது போலத்தான் விரிசலுக்குப் பின் போராடும் சமாதானச் சொற்கள்.

 

பேசுகையில் வார்த்தையோடு நிதானத்தையும் மனித மனங்களையும் நினைத்து இணைத்துப் பேசுங்கள்

உங்களுக்கு பேசுவது எவ்வளவு சுலபமான ஒன்றோ அவ்வளவு கடினமான ஒன்று பேசிய பேச்சை மீட்பதும் எதிராளிக்கு வலியை கொடுப்பதும்

மவுனமும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள் மனிதராகவே வாழுங்கள்.

 

💝💝💝 🫢 💝💝💝


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

மனம் : அகங்காரம் - குறிப்புகள் [ ] | The mind : Ego... - Tips in Tamil [ ]