உயர்வு மனப்பான்மை நம்மைப் பற்றி மிகையாகக் கணிப்பீடு செய்கிறது.. தாழ்வு மனப்பான்மை நம்மை குறைத்து மதிப்பிட்டு போட்டியிலிருந்தே ஒதுங்க வைக்கிறது.. சமநிலை மனப்பான்மை அனைத்தையும் உள்ளது உள்ளப்படி துல்லியமாக கணிக்க உதவுகிறது!
தகுதி
உயர்வு மனப்பான்மை
நம்மைப் பற்றி மிகையாகக்
கணிப்பீடு செய்கிறது..
தாழ்வு மனப்பான்மை
நம்மை குறைத்து மதிப்பிட்டு
போட்டியிலிருந்தே ஒதுங்க வைக்கிறது..
சமநிலை மனப்பான்மை
அனைத்தையும் உள்ளது உள்ளப்படி துல்லியமாக கணிக்க
உதவுகிறது!
ஒவ்வொரு மனிதனும்
தன்னுடைய தகுதியை உயர்த்திக்கொள்ள வேண்டுமென்று ஆசை இருக்கின்றது. அதற்காக அவன்
பலவிதத்தில் முயற்சி செய்துவருகிறான்.
'தகுதி ' என்ற மூன்றெழுத்தில்
என்னதான் ரகசியம் இருக்கின்றது.???
இதோ அந்த சூத்திரம்..
தகுதி என்ற
மூன்றெழுத்தில்...
த - தரம் என்ற
மூன்றெழுத்து...
கு - குணம் என்ற
மூன்றெழுத்து...
தி - திடம் என்ற
மூன்றெழுத்து...
தரம்.
தரமுள்ள மனிதன் என்றுமே
தாழ்ந்து போனதாக சரித்திரம் இல்லை. பளிங்கு கல் என்ன தான் பளபளப்பாக இருந்தாலும்
அது வைரத்திக்கு ஈடு இணையாகுமா?
போலியான தரம் உண்மையான
மதிப்புக்கு சமமாகாது!
தரம் என்பது பல திறமைகள்
சரியான விகிதத்தில் கலந்து இருப்பது.
அதாவது ஒரு வார்த்தையின்
தரம், தேர்ந்தெடுக்கப்பட்ட
எழுத்துக்களை ஒன்று சேர்த்தலில் இருக்கின்றது.
ஒரு பாடலில் இனிமை, தரமான அழகிய இராகங்களை
கலந்து கொடுப்பதில் இருக்கின்றது.
ஒரு தோட்டத்தின் அழகு, தரமான அழகிய பூச்செடிகளை
பொறுத்து இருக்கின்றது. தரம் எந்தகாலத்திலும் நிரந்தரம்.
குணம்.
தண்ணீர் ஒரு தங்க
பாத்திரத்தில் அல்லது வெள்ளி பாத்திரத்தில் அல்லது மண்பாத்திரத்தில் இருந்தாலும்
அதன் குணம் மாறுவதில்லை.
அதுபோல உங்கள் நிலை
உயர்ந்தாலும் ,
தாழ்ந்தாலும் மனிதனின்
குணமான அன்பு,
கருணை, பாசம், இரக்கம் , பொறுமை போன்ற குணங்களை
மாறாமல் கடைப்பிடித்தல் அவசியம்.
திடம்.
தரம், குணம் இவைகள் இருந்தால் 'திடம் ' தானாக வந்துவிடும்.
இங்கு திடம் என்பது
உன்மீதுள்ள உறுதியான நம்பிக்கை.
இதைத் தவிர வாழ்கையில்
தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:
1. நீங்கள் வாழ்கையில்
எதற்கு வேண்டுமானாலும் காத்திருங்கள். ஆனால் அது வீணாக போய்விடக்கூடாது.
2. நமது எண்ணங்களினால்
தான் நாம் இன்று இந்த நிலைமையில் இருக்கின்றோம்.
3. நீங்கள் வாழ்கையில்
எந்த வேலை வேண்டுமானாலும் செய்ய நினைக்கலாம். ஆனால் அதை ஆரம்பிப்பதில் தான் அதன்
வெற்றி இருக்கின்றது.
4. நமது 'வருங்காலம்' என்கிற பாறையை
செதுக்கும் சிற்பி நாம் தான். அது நன்றாக செதுக்குவதும் , மட்டமாக செதுக்குவதும்
நம் கையில் தான் இருக்கின்றது.
5. உங்களுக்கு எதற்கும்
நேரம் கிடைக்காது. உங்களுக்குத் தேவையான நேரத்தை நீங்கள் தான் ஏற்படுத்திக்
கொள்ளவேண்டும். அவசியமான வேலைக்கு முன்னுரிமை கொடுப்பது மூலம் சாத்தியப்படும்.
வாழ்கையில் உங்கள் 'தகுதி'யை உயர்த்திக்
கொள்ளுங்கள்! மூன்றெழுத்து மூல மந்திரத்தின் உதவியினால்!
சளைக்காமல் கடின
உழைப்புக் கொள்!
சாதனை மீது சவாரி செய்,
வேகமாகச் செல்ல விவேகம்
கொள்!
அபார சாதனைதான் உன்னை
அடையாளப்படுத்தும்!
உற்சாகத்தைத் தட்டிக்
கொடு,
தோல்வியை விட்டுக் கொடு!
அது வெற்றியாக மாற்றிக்
கொடுக்கும்!
தோல்வி என்பது மைல் கல், அதனைக் கடந்து போ!
ஒருவன் என்ன செயல்
செய்கிறானோ,
அதுவாகவே அவன்
ஆகிவிடுகிறான்;
ஆதலால், ஒவ்வொருவனும் தன்னைத்தானே
உருவாக்கிக் கொள்கிறான்.
ஆகவே, நம் செயல்களிலிருந்து
நாம் தப்பிக்க முடியாது!
பணத்தால் கிடைக்கும்
புகழ் நம்மிடம் பணம் இருக்கும்
வரை மட்டுமே
நிலைக்கும்..
குணத்தால் கிடைக்கும்
புகழ் இறந்த பின்பும் நிலைக்கும்.
🍁🍁🍁
எல்லோருமே சராசரி
மனிதராக இருக்க விரும்புவதில்லை. வாழ்வில் வெற்றியாளராக மிளிரவே ஆசைப்
படுகிறார்கள். அதற்கான திறமையும் மெனக்கெடலும் தனித்துவமான பண்புகளும் அவசியம்
வெற்றியாளர்களின் தனித்துவமான ஆளுமைப் பண்புகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1. இலக்குகள்
வாழ்வில் மிக உறுதியான
இலக்குகளை கொண்டவர்கள் வெற்றியாளர்கள். வெறுமனே நண்பர்களுடன் அமர்ந்து பேசும்போது
மட்டும் தன்னுடைய ஆசைகளை இலக்குகளாக குறிப்பிடாமல் தன்னுடைய ஆழ்மன விருப்பங்களை
இலக்குகளாக அமைத்துக் கொள்கிறார்கள். அதை நோக்கி பெரு விருப்பத்துடன் கடுமையான
செயல்படுகிறார்கள். அதனால் அவர்களது இலக்கை எப்படியேனும் அடைந்து வெற்றி
பெறுகிறார்கள்.
2. தோல்வியிலிருந்து விரைவில் மீண்டு எழுதல்
வெற்றியாளர்கள்
தங்களுடைய செயல்களில் தோல்வியை தழுவினால் அதற்காக கவலைப்படுவதோ அல்லது முயற்சியைக்
கைவிடுவதோ இல்லை. தோல்வியை ஒரு அனுபவப் பாடமாக எடுத்துக்கொண்டு மேலும் முயற்சி
செய்து வெற்றியடைகிறார்கள்.
3. சுய ஒழுக்கம்
அவர்கள் சுய ஒழுக்கத்தை
உயிராக மதிக்கிறார்கள். அதிகாலையில் எழுவது, உடல் பயிற்சி, சத்தான உணவு, தீய பழக்கங்கள் இன்றி இருத்தல், என வாழ்கிறார்கள்.
குறித்த நேரத்தில் தங்களுடைய வேலைகளை செய்கிறார்கள். குறுகிய கால இன்பங்களை
தியாகம் செய்கிறார்கள். அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் அவர்களுடைய செயல்பாடுகளை
மேம்படுத்துவதாக எப்போதும் இருக்கும்.
4. நம்பிக்கை
தோல்வி மனப்பான்மை
உடையவர்கள் சாதாரண விஷயங்களுக்கு கூட மனம் உடைந்து போவார்கள். முயற்சியை
கைவிடுவார்கள். ஆனால் வெற்றியாளர்கள் தங்களை முழுமையாக நம்புகிறார்கள். தங்களுடைய
செயல்பாடுகளில் தடங்கல்கள் சிக்கல்கள் ஏற்பட்டாலும் அவற்றை கடந்து தங்களால்
ஜெயிக்க முடியும் என்று முழு மனதோடு நம்புகிறார்கள். தன்னை சுற்றி உள்ளவர்களையும்
ஊக்குவிக்கிறார்கள்.
5. மாற்றத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்
உலகம் மாறுவதற்கு ஏற்ப
தன்னையும் ஒரு வெற்றியாளர் மாற்றிக் கொள்கிறார். புதிய சூழ்நிலைகள் புதிய
சிந்தனைகள் புதிய வாய்ப்புகள் என அவருடைய செயல்பாடுகள் அமைந்திருக்கும். தன்னுடைய
சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு தொடர்ந்து முன்னேறுகிறார்.
6. பேரார்வம்
தாங்கள் செய்யும்
செயலில் மிகுந்த பேரார்வம் கொண்டிருப்பார்கள் வெற்றியாளர்கள். ஒரு பணியை எடுத்து
அதை தொடங்கி விட்டால் அதில் மூழ்கி அரைகுறையாக செயல்படாமல் முழு மனதோடு
ஈடுபாட்டுடன் உற்சாகத்தோடு செயல்படுகிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த நிறுவனத்தை
நடத்தினாலும் சரி அல்லது பிற நிறுவனத்தில் பணி செய்தாலும் அதை முழு மனதோடு
அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்கிறார்கள். அந்த பேரார்வமே அவர்களுக்கு வெற்றியை
தேடித் தருகிறது.
7. உணர்ச்சி நுண்ணறிவு
எமோஷனல் இன்டெலிஜென்ஸ்
எனப்படும் உணர்ச்சி நுண்ணறிவு இவர்களுக்கு அதிகமாக இருக்கும் மக்களை நன்றாக
புரிந்து கொள்கிறார்கள். பிறருடைய
இடத்தில் இருந்து அவர்களது உணர்வுகளை சரியாக புரிந்து கொள்வதால்தான் இவர்கள்
வெற்றியாளர்களாக வலம் வர முடிகிறது.✍🏼
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை
துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே நினைப்போம்
நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன்
இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த நாள் இனிய
நாளாகட்டும்
வாழ்க 🙌 வளமுடன்
அன்பேசிவம்
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
தன்னம்பிக்கை : தகுதி - வெற்றி, வெற்றியாளர்களின் 7 தனித்துவமான ஆளுமைப்பண்புகளை பற்றித் தெரியுமா? [ ] | self confidence : Eligibility - Do you know the 7 unique personality traits of success and winners? in Tamil [ ]