நாகை மாவட்டம் கீழ்வேளூரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் கீழ்வேளூர்-தேவூர் சாலையில் எமசம்ஹாரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது
எம பயம் போக்கும் எம சம்ஹாரேஸ்வரர் ஆலயம்!
நாகை மாவட்டம் கீழ்வேளூரில் இருந்து
சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் கீழ்வேளூர்-தேவூர்
சாலையில் எமசம்ஹாரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. நாகப்பட்டினம், திருவாரூரில் இருந்து பேருந்து, ரெயில் வசதிகள் இருக்கின்றன.
இவ்வாலயத்திலுள்ள அம்மன் குங்குமவல்லித்
தாயார், மாங்கல்ய பாக்கியத்தை அளிப்பதோடு பெண்களின்
குங்குமத்தைக் காப்பவள் ஆவார். இந்த அம்பிகையை நான்கு வெள்ளிக் கிழமைகள் நினைத்து, இருந்த இடத்திலேயே தீபம் ஏற்ற கணவனுக்கு
வரும் நோய்கள் தீருவதோடு திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் கை கூடும் என்றும் இவ்வாலய
தலபுராணம் கூறுகிறது!
மேலும், அருமருந்து விநாயகர், கால சம்ஹார சுப்ரமணியர் துர்க்கை, ஸ்ரீ நிவாசன், கால பைரவர் மற்றும் நவக்கிரகங்கள்.
சண்டிகேசுவரர், சமய நால்வர்களுக்கும் சன்னிதிகள் இங்கே
காணப்படுகின்றன.
மேஷம், ரிஷபம் உள்ளிட்ட 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு பரிகாரத்தலம்
உண்டு. விருச்சிக ராசிக்கு பரிகாரத் தலமாக நாகை மாவட்டம், கீழ் வேளூர் தாலுகா கூறத்தங்குடி கிராமத்திலுள்ள
குங்குமவல்லி அம்பிகா சமேத எமசம்ஹாரேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.ஆயிரம் ஆண்டுகள்
பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு தேவாரம் படைத்த திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற பெருமை
உண்டு. மூலவர்எம சம்ஹாரேஸ்வரர், சுயம்புலிங்கமாக
காட்சி தருகிறார்!
பக்தர்களுக்கு எமபயம் போக்குவதோடு மட்டுமின்றி
அவர்களுக்கு மரண பயம் இல்லாமலும் இருக்க அனுக்கிரகம் செய்து மோட்சம் கொடுப்பதோடு, அவர்கள் இறக்கும் தருவாயில் தரிசனம்
கொடுத்து அவர்களை ஆட்கொள்பவர் எமசம்ஹாரேஸ்வரர். இந்த ஆலயம் புராண வரலாற்றுடன் தொடர்புடையது.
பாண்டவர்கள் வன வாசத்தின் போது மனம் குழம்பிய நிலையில் இருந்தனர்.
அப்போது இங்கு வந்து ஸ்ரீ குங்குமவல்லியையும், எம சம்ஹாரேஸ்வரரையும் வழிபட.... சுவாமி
அவர்களுக்கு அருள் புரிந்ததாக வரலாறு கூறுகிறது!
திருக்கடையூருக்கும், ஸ்ரீவாஞ்சியத்துக்கும் இணையான ஆலயமாகப்
போற்றப்படும் இக்கோவில் சுவாமிக்கு மட்டும் தான் 'எமசம்ஹாரேஸ்வரர்' என்ற நாமம் வழங்கப்படுகிறது?
எமபயம் மற்றும் சனிதோஷ்ம் நீக்கும்
தலமாக இக்கோவில் கருதப்படுகிறது!
எமனுடைய சாபத்தை சம்ஹாரம் செய்து மோட்சம்
கொடுத்த தால், 'எம சம்ஹாரேஸ்வரர்' என்ற பெயர் இவ்வாலய இறைவனுக்கு உண்டாயிற்று.
எமனிடம், 'யாரெல்லாம் இந்தத் தலத்திற்கு வந்து
என்னை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு எந்தக் கெடுதியும் செய்யக் கூடாது' - என்று உத்தரவாதம் வாங்கிக் கொண்டார்
சிவபெருமான். ஆதலால் இக்கோவில் எமபயத்தைப் போக்கி மோட்சத்தைக் கொடுக்கும் தலமாகச் சொல்லப்படுகிறது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : எம பயம் போக்கும் எம சம்ஹாரேஸ்வரர் ஆலயம்! - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Ema Samhareswarar temple that takes away our fear! - Tips in Tamil [ spirituality ]