அறன் வலியுறுத்தல்

அதிகாரம் : 4

[ திருக்குறள்: பொருளடக்கம் ]

Emphasis on virtue - Authority: 4 in Tamil



எழுது: சாமி | தேதி : 15-07-2023 09:21 pm
அறன் வலியுறுத்தல் | Emphasis on virtue

31. சிறப்புஈனும் செல்வமும் ஈனும்; அறத்தினூடங் ஆக்கம் எவனோ உயிர்க்கு?

அறன் வலியுறுத்தல்

அதிகாரம் : 4

31. சிறப்புஈனும் செல்வமும் ஈனும்; அறத்தினூடங் 

ஆக்கம் எவனோ உயிர்க்கு?

சிறப்பையும் செல்வத்தையும் அளிக்கும் அறமே உயிர் வாழ்க்கைக்கு மேலானதாகும்.


32. அறத்தினூஉங் ஆக்கமும் இல்லை; அதனை

மாற்றதலின் ஊங்குமுல்லை கேடு. 

மனிதனுக்கு அறத்தைவிட மேலானதும் இல்லை. அதனை மறப்பதை விடக் கேடானதும் இல்லை.


33. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே 

செல்லும்வா யெல்லாம் செயல்.

இயலும் வகைகளிலெல்லாம் அறச்செயல்களை இடைவிடாது செய்ய வேண்டும். 


34. மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்:

ஆகுல நீர பிற. 

மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருத்தலே அறம். மற்றவை ஆரவாரத் தன்மைகளே.


35. அழுக்காறு அவாவொளி இன்னாச்சொல் நான்கும் 

இழுக்கா இயன்றது அறம். 

பொறாமை. பேராசை. சினம். கொடிய சொல் ஆகிய நான்கையும் நீக்கி வாழ்வதே அறம். 


36. அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றுஅது

பொன்றும்கால் பொன்றாத் துணை.

நாளை நாடலாம் என்று காலம் போக்காமல் அறத்தை நாள்தோறும் செய்தால், இறுதியில் உயிருக்கு உற்ற துணையாகும்.


37. அறத்தாறு இதுஎன வேண்டா: சிவிகை 

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

அறத்தின் பயன் இவ்வளவென்று சொல்ல வேண்டாம் பல்லக்கைச் சுமப்பவனையும் அதில் ஊர்ந்து செல்பவனையும் கண்டு அறியலாம். 


38. வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதொருவன் 

வாழ்நாள் வழியடைக்கும் கல்.

நாள்தோறும் இடைவிடாமல் அறத்தைச் செய்வானானால், அது அவனது பிறப்பு இறப்பைத் தடுக்கும் தடுப்புக் கலவையாகும். 


39. அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்

புறத்த புகழும் இல.

அறச்செயலால் அடைவதே இன்பமாகும். அறஞ்சாராது வருவனவெல்லாம் துன்பத்தைத் தருவனவாகும்.


40. செயற்பாலது ஓரும் அறனே: ஓருவதற்கு 

உயற்பால தோரும் பழி.

ஒருவன் செய்யவேண்டிய நற்செயல்கள் யாவும் அறச்செயல்களே! விட வேண்டியவை எல்லாம் பழியானவைகளே!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

திருக்குறள்: பொருளடக்கம் : அறன் வலியுறுத்தல் - அதிகாரம் : 4 [ திருக்குறள் ] | Tirukkural: Table of Contents : Emphasis on virtue - Authority: 4 in Tamil [ Tirukkural ]



எழுது: சாமி | தேதி : 07-15-2023 09:21 pm