வாழ்க்கையை அழகாக வாழ்வதை விட அர்த்தமுள்ளதாக வாழ்வதே சிறப்பு
மகிழ்வித்து மகிழ்
🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
♦சாதிக்க முடியாத
இலக்கை
வாழ்க்கை கொடுக்கும்போது🪭
♦அழிக்கவே முடியாத
தடயத்தை
அந்த வாழ்க்கையில்
பதிய வைத்துவிட்டு
செல்வது தான்
திறமையின் சிறப்பு🪭
♦ஒவ்வொருவர் வாழ்க்கையும்
அழகு தான்
வெவ்வேறு
கோணத்தில்
பார்க்கையில்🪭
♦வாழ்க்கையை அழகாக வாழ்வதை விட அர்த்தமுள்ளதாக வாழ்வதே சிறப்பு🪭
♦காலம் ஒரு சுழற்ச்சி இன்று உங்கள் உதவி இன்னொருவருக்கு தேவை என்றால் நாளை அவர் உதவி உங்களுக்கு தேவை படலாம்🪭
♦உங்கள் எதிரியாக இருந்தாலும் கூட உங்கள் உதவி ஒருவருக்கு தேவை என்றால் தயங்காமல் உதவ முன்னே செல்லுங்கள்🪭
♦வாழ்க்கையில் சிலதை அழகாகவும் பலதை அர்த்தமாகவும் மற்றும் திறன் உள்ளவர் என்றும் சிறந்தவர்கள்🪭
🏵📿🏵📿🏵📿🏵📿🏵📿
🍁இந்த மாய உலகில் மாறாத ஒன்று மாற்றங்கள் மட்டுமே
எந்த மாற்றங்களிலும் மாறாத ஒன்று எல்லாம் வல்ல இறைவனின் அன்பும்
ஆதரவும் மட்டுமே என்று நினைவில் கொள் மனமே🍁
🏵📿🏵📿🏵📿🏵📿🏵📿
இறைவன் கணக்கு
நம் அறிவுக்கு
எட்டாத ஒன்று
அனுபவங்கள் நமக்கு,
கற்றுத் தருவது,
வாழ்க்கையை வாழ,
வழியை மட்டுமல்ல,
வாழ்வில் வந்து போகும்,
மாற்றங்களையும்,
அதனை ஏற்றுக்கொள்ளும்,
மனபக்குவங்களையும்,
தானென்பதை,
மறக்க வேண்டாமே..??
ஒவ்வொரு இரவும்,
ஒரு பகலை நோக்கியே,
பயணிக்கின்றது,
ஆதலால் வாழ்வில்,
சோதனைகள்,
சூழ்ந்து இருந்தால்,
நம்பிக்கையுடன் இருங்கள்,
நாளை அதற்கான,
விடியல் கிடைக்குமென..👍
🚩 #_ஒருபகவத்கீதை 🚩
🚩அத்தியாயம்:02 பதம்;53🚩
🕉எப்போது உன் மனம் வேதங்களின் மலர்சொற்களால் கவரப்படாத நிலையை அடைகிறதோ, எப்போது அது தன்னுணர்வின் ஸமாதியில் நிலைத்திருக்கின்றதோ, அப்போது நீ தெய்வீக உணர்வை அடைந்து விட்டவனாவாய்...தவறுகளை
_பகவத்கீதை
அத்தியாயம்:02 பதம்;52
🕉எப்போது உன் அறிவு,மயக்கம் எனும் இவ்வடர்ந்த காட்டை தாண்டி விடுகிறதோ, அப்போது இதுவரை கேட்டவை, இனி கேட்க வேண்டியவை
இவற்றின் மீது சமநிலையுடையவனாகி விடுவாய்.
---#பகவான்_ஸ்ரீ_கிருஷ்ணர்(#கீதையின்_உட்பொருள்_சுருக்கம்)பரந்தாமா! அன்பு என்ற மாய வளையை விரித்து அதில் எங்கள்
யாவரையும் மயக்கி வைத்துள்ளாய்! உன்னையே நினைக்கும் மனது, எப்போதும் உன்னை அழைத்துக் கொண்டேயிருக்கும் பரந்தாமா! எங்களால்
நீயும், உன்னால் நாங்களும் ஈர்க்கப்பட்டுக்கொண்டே இருப்போம்! சர்வம்
கிருஷ்ணார்பணம்!🙏🙏🙏
நீ பிறருக்கு விரும்பி
செய்தாலும் விரும்பாமல் செய்தாலும் அது ஏதோ ஒரு வடிவில் உன்னை வந்து சேரும், அதுவே சாதுக்களுக்கு நீ செய்யும் செயல் எதுவானாலும் நூறு மடங்காக
உனக்கும் உன் சந்ததிக்கும் வந்து சேரும், செயலாற்றும் போது இதனை
கவனத்தில் வைத்திருக்க வேண்டும்,
ஒருவேளை நீ மறந்தாலும் காலனாகிய எனதருள் எப்போதும் நீங்கா நினைவோடு
உனக்கான நேர் எதிர் கர்மத்தோடு காத்திருக்கும், நீ மறந்தே போனாலும்
முடிவில் அதனை உணர்வாய்.
.உங்கள் சுயநலம் நிறைந்த, சிக்கலான வாழ்வில், உங்களுக்குப்
பிரச்சனைக்குப் பிறகு பிரச்சனை உள்ளது. ஒரு பிரச்சனையை நீங்கள் தீர்க்கிறீர்கள், ஆனால் அந்த பிரச்சனையின் தீர்வில், உங்களுக்கு இன்னும் பத்து
புதிய பிரச்சனைகள் உள்ளன.
ஆம், பிரச்னையை நாம் முழுமையாகப் பார்க்காததே அதற்கு காரணம். நம்மிடம்
முழுமையற்ற கவனிப்பு உள்ளது. எனவே நமக்கு முழுமையற்ற தீர்வுகள் கிடைக்கின்றன.
தற்காலிகமாக அவை திருப்தி
தந்தாலும், மீண்டும் பிரச்னை வேறு வடிவில் எழுகிறது.
ஆழமான, சார்பற்ற,
பிரிவினைகள் இல்லாத, எந்த திரைகளும் இல்லாத, நேரடியான,
முழுமையான கவனிப்பு மட்டுமே பிரச்னையை மறையச் செய்யும்.
#ஶ்ரீமத்பகவத்கீதை. 🙏
ஞானகர்ம_ஸந்யாஸ_யோகம்
பாகம்__17
🙏34." பணிந்தும், கேட்டும், பணிவிடை செய்தும் நீ அதை அறிக. உண்மையை உணர்ந்த ஞானிகள் உனக்கு
அந்த ஞானத்தை உபதேசிப்பார்கள்".🙏
விளக்கம்:
செல்வத்தைக் கொண்டு செய்யும்
வேள்வியை விட, எந்தப் பலனையும் கருதாது, ஒரு புனிதமான வேள்வியை போல நினைத்து தான் பெற்ற ஞானத்தைப் பிறருக்கு வழங்குவதே மிகச்சிறந்த யாகமாகும். அதுவே #ஞானயக்ஞம் எனப்படுகிறது.
'எந்தப் பலனையும் கருதாமல்
தான் பெற்ற ஞானத்தை பிறருக்கு போதிக்கும் ஞானகுருவாக விளங்குவதே மிகவும் சிறந்தது!
அதுவே அனைத்து வேத வேள்விகளை விட சிறந்தது"
என்று முந்தைய சுலோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் கூறினார்.
அதன் தொடர்ச்சியாக எப்படி ஒரு குருவிடமிருந்து ஞானத்தை பெற வேண்டும்?
என்பதை ஸ்ரீகிருஷ்ணர்
இந்த சுலோகத்தில் கூறுகிறார்.
குருவிற்குப் பணிவிடை செய்து,
நீ ஞானத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்! என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.
பண்டமாற்று போல ஞானத்தைப் பொருளைக் கொடுத்து பெற முடியாது. அதற்கு
குருவுக்கும், சீடனுக்கும் இடையே ஒரு
சீரிய இணக்கம் இருக்கவேண்டும். குருவின்
பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து
வணங்குவதன் மூலம் சீடன் தன்னைக்
குருவிடம் அர்ப்பணிக்கிறான்.
பிற உயிர்களிடம் உள்ள பந்தம், மோட்சம், ஆத்மா போன்றவற்றைப் பற்றி
முறையாகக் கேள்விகளைக் கேட்டு, தனது மனப்பக்குவத்தை அவன்
குருவிடம் தெரிவிக்கிறான். குருவின்
பாதங்களில் வீழ்ந்து அவருக்கு பணிவிடை செய்து ஞானத்தைப் பெறும் புனித வேள்வியில்,
தன்னையே ஆகுதியாக அத்தகைய
சீடன் சமர்ப்பிக்கிறான்.
இவ்வாறு முறையாக உடலாலும், மொழியாலும், மனத்தாலும் குருவுக்குச் சேவையைச் செய்ய வேண்டும்.
குருவிற்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து, வாக்காலும்,
மனத்தாலும் குருவுக்குப் பணிந்து நடந்தும்,
அவரிடமிருந்து ஞானத்தைப்
பெற்றுக் கொள்கிறான்! சீடன்.
அவ்வாறு யாரிடம் பிரம்மஞானம்
பூரணமாக நிறைந்திருக்கிறதோ,
அவரே சிறந்த குரு
ஆவார். அவரே,
சீடனுக்கு பிரம்ம ஞானத்தை
போதிக்க வல்லவர்! ஆவார்.
பூரண ஞானமும், கருணையும் யாரிடம்
இருக்கிறதோ, அவரே குரு ஸ்தானத்துக்கு தகுதியுடையவர் ஆவார். தன்னலம் கருதாது,
எந்தப் பிரதிபலனையும்
எதிர்பாராது, தான் பெற்ற ஞானத்தை
பிறருக்கு உபதேசிப்பரே சிறந்தக் குரு ஆவார்.
அத்தகையவரிடம் ஞானத்தைப் பெற்றுக் கொள்!
என்கிறார்
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஞானம் : மகிழ்வித்து மகிழ் - திறமையின் சிறப்பு [ ] | Wisdom : Enjoy and enjoy - Excellence of talent in Tamil [ ]